அண்மை

முகப்பருவின் அறிகுறி மற்றும் சிகிச்சை - மருத்துவம் கேளீர்

நோயைப் பற்றி

முகப் பரு என்பது பருவ வளர்ச்சியின் காரணமாக ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்சினை ஆகும். இது 13 வயது முதல் 33 வயது உள்ளவர் வரை இதனால் பாதிப்பு அடைகின்றனர்.


முகப்பரு உங்கள் உடலில்  இது பொதுவாக உங்கள் முகம், முதுகு, கழுத்து, மார்பு மற்றும் தோள்களில் உருவாககூடும்.


85% மக்கள் இதனால் பாதிப்பு அடைவதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.


முகப்பருக்கள்  இக்கால இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது.இது எதனால் ஏற்படுகிறது…?  இதை தடுக்க வழி…? என்று பல விடயங்கள் சிந்தனை செய்யவைக்கிறது.



நம் தோளில் சிறு சிறு நுண்ணிய துளைகள் உள்ளன.  தோளின் இரண்டாம் அடுக்கில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து அதிக படியான எண்ணெய் (சீபம்) வெளியேறி அத்துளைகளை அடைப்பதனாலும் தோளின் இறந்த செல்களினாலும் அல்லது பாக்டீரியா போன்றவை அத்துளையை மூடி விடுவதால் சற்று புடைத்து சீழ் ஏற்பட்டு காட்சி அளிக்கும்.இதுவே பரு என்று அழைக்கப்படும்.முகப்பரு உருவாக சில ஆபத்து காரணிகள் உள்ளன. இவை பின்வருமாறு:


●பருவமடைதல் அல்லது கர்ப்பத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்.


●சில பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அல்லது கார்டிகோஸ்டீராய்டுகள் போன்ற சில மருந்துகள் உட்கொள்வதினால்.


●ரொட்டி மற்றும் சில்லுகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவு அதிக அளவில் உட்கொள்ளுதல்.


●தனது பெற்றோருக்கு இருப்பதன் விளைவால்.






அறிகுறிகள் 


●முகத்தில் கரும்மை அல்லது வெண்சிவப்பு நிறமுள்ள புண்கள் தோன்றும்.


●புண்கள் தோன்றி வலி ஏற்படும்.


சிகிச்சை 



  • தினமும் இருமுறை மென்மையான சோப்பைக் கொண்டு முகத்தை கழுவுதல் 



  • அடிக்கடி முகத்தில் மற்றும் பருவில் கை வைத்தலை தவிர்த்தல்.



  • உங்கள் தலை முடியை தவராமல் 'ஸ்சாம்ப்' போட்டு முகத்ததருகினில் படாமல் வைத்திருத்தல்.



  • பருக்களை கசக்கி எடுத்தலை கண்டிப்பாக தவிர்க்கவும் இதனால் மேலும் பருக்கள் அதிகரிக்குமே தவிர குறையாது.



  • தொப்பிகள் அல்லது முகத்தை இறுக்கமாக ஒட்டியபடி வைத்திருக்கும் எதையும் அணிய கூடாது.



முகப்பருவுக்கு சுய பாதுகாப்பு உதவாவிட்டால், சில முகப்பரு மருந்துகள் கிடைக்கின்றன. இதனை மருத்துவரிடம் பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.இந்த மருந்துகளில் பெரும்பாலானவை பாக்டீரியாக்களைக் கொல்ல அல்லது உங்கள் சருமத்தில் எண்ணெயைக் குறைக்க உதவும் பொருட்கள் உள்ளன. 


பென்சாயில் பெராக்சைடு பல முகப்பரு கிரீம்கள் மற்றும் ஜெல்ஸில் உள்ளது. இது ஏற்கனவே உருவான பருக்களை உலர்த்துவதற்கும் புதியவற்றைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது. 


பென்சாயில் பெராக்சைடு முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும்.


சல்பர் என்பது ஒரு தனித்துவமான நறுமணத்துடன் கூடிய இயற்கையான மூலப்பொருள் ஆகும்.


ரெசார்சினோல் என்பது இறந்த சரும செல்களை அகற்ற பயன்படும் குறைந்த பொதுவான மூலப்பொருள் ஆகும்.


சாலிசிலிக் அமிலம் பெரும்பாலும் சோப்புகளில் உபயோகப்படுத்த படுகிறது.இது துளைகள் முடுவதை தடுக்க பயன்படுகிறது. 


தோல்களில் மட்டும் பொதுவாக செயற்கை மருந்துகளை தவிர்ப்பது நல்லதே


கருத்துரையிடுக

புதியது பழையவை