பொருளுணர்ந்து பேசுவோம்..!
உண்மையும் காரணமும் தேடினால் பெரும்பான்மையான சொற்கள் விசித்திர பயன்பாடாகவே இருக்கும்...
நல்லா இரு
இது ஒரு ஆசி அல்லது வாழ்த்து
ஆனால் வாழ்த்துகள்
என்பதே எப்படி வாழ்த்தாக அமையும்?
என்பது கூட மொட்டையாக இருக்கிறது வழக்கில்
உண்மையில் நீங்கள் நல்லா இருக்கணும்
என்றோ...
உங்களுக்கு நல்லது நடக்கட்டும் என்பது போலதான் சொல்ல வேண்டும்
ஏதோ கூகிள் டிரான்ஸ்லேட்டரைப் போல் நாம் thanks ஐ மொழிபெயர்த்து நன்றி என்கிறோம்..
ஒரு பண்புப்பெயரை வாழ்த்தலுக்காக ஆகுபெயராக்கிவிட்டோம்.
வணக்கம்
என்பது...
ஒருவகை அடிமைதனம்..
அல்லது கௌரவமாக சொல்ல வேண்டுமானால் பணிவு எனலாம்.
அறிந்தவருக்கு சொல்வதில் தவறில்லை.
யார் என்றே தெரியாத முதல் நபரிடம் உனக்கு வணங்குகிறேன் என்றால் அது எப்படி? சரியாகும்
பார்வையிலே எடைபோட்டு பணியும்
சொல்லின் செல்வராகி விட்டோமா என்ன?
பண்டைகாலத்தில் பெரியோர்கள் திடீரென உள்ளேவந்தாலோ.. நாமாக எதிர்கொள்ள நேர்ந்தாலோ.. பயபக்தியாக எழுந்து நின்று வணங்குகிறேன் ஐயா
பணிகிறேன் ஐயா
என்று உரைப்பது வழக்கம்
சாதிகள் வந்தபிறகு
ஆண்டானை காணும் அடிமைகள் ஓயாமல் அதை கூறவேண்டி இருந்துது.
கும்பிடுறேன்
என்பதே அப்போதுதான் நுழைந்தது.
வணக்கம் ஆனது கையெடுத்து கும்பிடு போடும் பழக்கமாக மாறியதும் அதன் பின் தான்.
மகாபாரதத்தில் குரு துரோணரை பிதாமகர் பீஷ்மர் அரண்மனை வாயிலில் முதன் முறை எதிர்கொள்வார் இருவருமே நிகரற்ற வீர புருஷர்கள்.
எனினும் வயதில் பிதாமகர் மூத்தவர்.
சாதிமுறை காலம் என்பதால் பீஷ்மரை விட துரோணர் குலத்தில் உயர்ந்தவர்.
யார் யாரை வணங்குவது?
பிதாமகரே முதலில் வணங்குவார்..
பணிகிறேன் குரு துரோணரே என்பார். பணிவால் பெருந்தன்மை அடைகிறார்.
பதிலுக்கு துரோணர் சொல்வார்.
சிரம் தாழ்த்தி பணிகிறேன் கங்கை மைந்தரே!
தற்போது பணிவில் குரு துரோணர் பீஷ்மரை மிஞ்சிவிட்டார்.
இதுதான் பண்பாடு
வணக்கம் என்பது சரியோ தவறோ
ஒருவன் வணங்கிவிட்டால் நாமும் பதில் வணக்கம் சொல்லியாக வேண்டி இருக்கிறது.
ஆனால் இது எந்த கோணத்தில் எப்படி பார்க்க போனாலும் சாதாரண சல்யூட்டேஷனுக்கு ஐரோப்பியரின் குட் மார்னீங் க்கு உகந்தது அல்லவே.
ஜப்பானியர்களிடம் பொதுவாக வணக்கம் எனும் சொல் கிடையாது.
இன்று நல்ல நாள் என பரஸ்பரம் அவர்கள் ஆசி கூறுகிறார்கள்.
அதிலும், முதல் சந்திப்பு முதல் வார்த்தை நல்லபடியா தொடங்கட்டுமே என நல்ல காலை நல்ல மதியம் நல்ல மாலை இனிய இரவு என்றெல்லாம் சொல்கிறார்கள்.
நாம் இங்கு ஏன் சம்மந்தமின்றி காலை நேரத்தில் ஒருவனைப் பார்த்து நான் உனக்கு பணிகிறேன் எனச் சொல்லி பதிலுக்கு அவனும் நம்மை வணங்குகிறானா என்றெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
சூரியராஜ்