அண்மை

போராட்டம் - சிறுகதை

 போராட்டம் - குகன்

போராட்டம் - சிறுகதை


என்னப்பா... எங்க போனும்?

தம்பி ஒன்னத்தான்‌...!?


"காலேஜ்க்கு ஒரு டிக்கெட்  கொடுங்க..."


"பஸ்சுல உட்காந்தா மொதல்ல டிக்கெட்ட வாங்கிட்டு அப்பறமா வேடிக்கை பாக்கனும் புரியுதா...?"

என்று கோபமாக பேசிய நடத்துனரால் அனைவரும் தன்னை நோக்க கூனி குறுகி கால் நோக்கியபடியே பேருந்தில் பயணித்தான் 'அலெக்ஸ்'.


'காலேஜ் ஸ்டாப்பிங் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும் என உணர்ந்த அலெக்ஸ் பேருந்து படிகளில் இறங்கி நின்று கொண்டு விசிய காற்றில் தலை முடிகள் களைய வேடிக்கை பார்த்தபடியே வந்திறங்கிய அலெக்ஸ் சற்று நேரத்தில் கல்லூரியின் உள் நுழைந்து தனது வகுப்பறையில் உட்கார்ந்தான் .


"டே அலெக்ஸ் எப்படா வந்த....?"



"ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தான் வந்தேன்" என்று அலெக்ஸ் தன் நண்பனான சிவாவிற்கு பதில் கூறினான்.இவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் இப்போதும் ஒரே கல்லூரி.


"குட் மார்னிங் சார்....."


"குட் மார்னிங் ... உக்காருங்க .. உக்காருங்க..." 


"முதன்முதலிலாக கல்லூரிக்கு வரிங்க அதுனால உங்களுக்கு பாடத்தவிட அறிவுரை தான் அதிகமாக வேணும்...."


"இதுவரைக்கும் நீங்க படிச்சதெல்லாம் படிபே இல்ல இந்த கல்லூரி தான் உங்க வாழ்க்கையோட டேர்னிங் பாயிண்ட்" என்று  பத்தாம் வகுப்பிலும் பனிரெண்டாம் வகுப்பிலும் ஆசிரியர் கூறிய அதே வார்த்தையை இந்த ஆசிரியரும் கூறியதால் அலெக்ஸும் சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்து மௌன நகை புரிந்தனர்.


மேலும் பேசிக்கொண்டிருந்த அவர் "போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்ல அதுனால போராடனும்" எனக் கூற


வகுப்பு வாசலிலிருந்து ஒரு குரல் வந்தது


"சார்...."


"என்னப்பா....?"


"சார் கல்லூரியில உள்ள சங்கத்துல இந்த கிளாஸ் ல யாராவது சேந்துகரந்தா பேரு எழுதிக்கிட்டு பெயிடுரோம்" என்று கூறி நான்கைந்து மாணவர்கள் வகுப்பறையில் நுழைந்தனர்.


" சார் சொன்ன மாதிரி.... போராட்டம் இல்லைனா வாழ்க்கை இல்ல, நம்ம உரிமைய நம்மதான் போராடி பெறனும் ..." என்று வந்தவர்களில் ஒருவன் சத்தமாக கூற


ஒதுங்கி நின்ற ஆசிரியர் "தம்பி நீங்க சேர போறிங்களா....?" என்று அலெஸிடமும் சிவாவிடமும்  காதொடு காதாக கேட்டார்.


"அதான் சார் யோசிச்சித்கிட்டு இருக்கோம்.."


"தம்பி நான் ஒன்னு சொன்னா கேப்பிங்களா..?"


"சொல்லுங்க சார்.."


"அதுல சேர்ந்துடாதிங்க .. குட்டிச்சோறா போயிடுவீங்க"


இப்படி ஆசிரியர் சொன்ன மறுகணமே கூட்டத்திலிருந்த ஒருவன் "தம்பி பேரு கோடுக்குறிங்களா...?" என்றான் அதட்டும் குரலில்.


"இல்லண்ணா வேணாம்" என்றனர் இருவரும்.


மணியும் ஒலித்தது ஆசிரியர் வெளியேற அவர்களும் கிளம்பினர்.


"ஏன் ? சார் சேராதிங்கனு சொன்னாரு...?"என்று அலெக்ஸ் சிவாவிடம் கேட்டான்.


"இதுல சேர்ந்தா படிக்க முடியாதுடா அடிக்கடி ஸ்டைக் நடக்கும் அதுனால அப்புடி சொல்லி இருக்கலாம்" என்று அருகில் இருந்த மற்றொரு மாணவன் கூற இருவரும் அதைக் கேட்டுக்கொண்டனர்.


ஒரு வாரம் ஓடியது வழக்கம் போல அலெக்ஸ் கல்லூரிக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தான். உட்கார இடமில்லாததால் அன்று நின்று கொண்டே தான் பயணித்தான். பேருந்தில் உட்கார்ந்திருந்த சக கல்லூரி மாணவர்கள்


"இன்னக்கி காலேஜ் கிடையாதாமே..? 


"ஏன்?"


ஸ்டைக்கு..


அது ஏன்?


நேத்து டெல்லியில உள்ள கல்லூரியில உள்ள மாணவர்கள் ஒருவருக்கொருவர் அடிச்சுக்கிடாங்களாம் அதுனால


"அவனோ அடிச்சிக்கிட்டா நமக்கு என்ன..?"


ஒற்றுமையை நிலை நிறுத்துறத்துக்காகடா


என அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டே வந்த அலெக்ஸ் கல்லூரியை வந்தடைந்து தன் வகுப்புக்குள் நுழைந்தான்.


"எல்லாம் வெளியே வாங்க இன்னக்கி 'ஸ்டைக்' டெல்லியில நடந்த வன்முறை காரணமா..! யாரும் வீட்டுக்கு போயிட கூடாது . எல்லாரும் 'ஸ்டைக்ல' கலந்துகனும் ..!"

என்று கண்டிப்புடன் ஒரு கூட்டம் வந்து சொல்லிச்  சென்றது.


"சிவா என்ன பண்ண போற...?"


"நான் வீட்டுக்கு போறேன் நீயும் வீட்டுக்கு போ..."என்று கூறி சிவா வீட்டிற்கு கிளம்பினான்.


அலெக்ஸும் தன் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறினான் .


"தம்பி என்னப்பா இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்குப் போற" என்று அவன் ஊரை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியில் உள்ள ஒரு பிரபல முதியவர் ஒருவர் கேட்க


"இல்ல இன்னக்கி காலேஜ்ல ஸ்டைக்கு அதான்" என்றான்


"நீ கலந்துகலயா ...?"


"இல்ல..."


"என்னப்பா இப்புடி சொல்ற .... அதெல்லாம் கலந்துகனும்பா என்னா நீயி..."என்று வருத்த மொழியோடு அவனைப் பார்க்க. 


அவனும் நம்ம தான் அவசரப்பட்டு வந்துட்டோமோ..! இனிமே கலந்துப்போம்.. என்ற சிந்தனையுடன் வீட்டிற்கு வந்தான்.


அன்று மாலை "நியூஸ் சேனலை"பார்த்துக்கொண்டு இருந்தான் அதில் அவனது கல்லூரியில் நடந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் பற்றி காட்சியுடன் காட்டப்பட்டது. 


"என்னப்பா நீயும் கலந்துக்க வேண்டியது தான...?"என்று அலெக்ஸின் அம்மா கேட்டக 


"ம்ம்....."என்று இழுவை செய்தான்.


மறு நாள் பேருந்தில் இருந்து இறங்கி  கல்லூரிக்கு சென்ற போது ஒரு மாணவனை காவலர் இழுத்து செல்லும் காட்சியை கண்டான்.எங்கோ அவரை பார்த்தது போல் தோன்றியது.


வகுப்பில் நுழைந்தான். சிவாவும் வந்தான் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது


 "தம்பி இன்னக்கி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் "

 

என்று கூறி சிலர் சென்றனர்.


"இன்னக்கியும் ஸ்டைக்கா"


"சரி சரி நான் வீட்டுக்கு போறேன் நீயும் போ" என்று சிவா சென்றுவிட்டான்.


அவன் போனா போகட்டும் நம்ம கலந்துப்போம் என்று கலந்து கொண்டான் அலெக்ஸ். "எதற்காக இந்த ஸ்டைக்?" என்று கூட்டத்தில் ஒரு மாணவனை கேட்க 


"காலை ல கல்லூரி சங்கத்துல உள்ள செயலாளர போலிஸ் அரஸ்ட் ‌பண்ணிடாங்க அதான்."


இவனும் காலையில் பார்த்த காட்சியை நியாபகப்படுத்திக்கொண்டு


"எதுக்காக அரஸ் பண்ணாங்க...?"


"தெரியல"என்று அவர் பதில் கூறினார்.


இவனும் போராட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தான் .


'நியூஸ் சேனலை' வைத்தான். அதில் அவன் கல்லூரிய சேர்ந்த சங்க செயலாளரை காட்டினார்கள். 


"இந்த கல்லூரி மாணவர் நேற்று இரவு குழுவாக பட்டாகத்தியுடன் சண்டையிட்டுள்ளார்‌. அதனால் இன்று காலை அவரது கல்லூரி வாசலில் வைத்து போலிஸ் பிடித்து விசாரித்து வருகின்றனர்.இவருக்காக இவரது கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது குறிப்பிடதக்கது" என்று செய்தி வாசிப்பாளர் அறிவித்தார்.


"இன்னக்கியும் உங்க காலேஜ்ல ஸ்டைக்கா...?"


"ஆமா அம்மா ..."


"நீ கலந்துகிட்டியா..?"


"இதான் காரணம்னு முதல்லயே தெரிஞ்சி இருந்தா கலந்துகிட்டிருக்க மாட்டேன்." என்று கூறி சேனலை மாத்தினான் .


"போராட்டம் போராட்டம் என்று இருந்தா நாடே சுடுகாடு ஆகிடும்..

என்று பிரபல நடிகர் பேட்டியில் பேசியதை பார்த்தவன். 


கல்ல நகைப்புறிந்தான்.


1 கருத்துகள்

  1. இக்கதையினை படிக்கையிலே, படிக்கும் உணர்வு மறைந்து, கண்முன் கண்ட காட்சிகள் மூலையில் ஓடிக்கொண்டிருந்தன.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை