அண்மை

நீங்கள் எழுதிய கதைகளை புகழ்ப்பெற்ற பத்திரிக்கைகளில் இடம்பெறச் செய்வது எப்படி

கதைகளை புகழ்ப்பெற்ற பத்திரிக்கைகளில் இடம்பெறச் செய்வது எப்படி

ஒவ்வொரு பத்திரிகைகளும் ஒவ்வொரு விதமான தனித்துவ கதைகளை தேர்வு செய்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் அனைத்துவிதமான இதழையும் படிக்கும் போது, இந்த தேர்வு முறை ஒரளவிற்கு நமக்கு புரியவரும். 


அதாவது குமுதம் 300 வார்த்தைகள் மட்டும் உள்ள மிகச்சிறிய கதைகளையும் அதுவும் இயற்கை சம்பந்தப்பட்ட எதிர்காலத்தில் நடக்கப்போகிற அல்லது தற்கால குடும்ப சூழல் கொண்ட கதைகளை மட்டுமே வெளியிடுகிறது. பரிசுத் தொகையும் உண்டு ஆனால் எவ்வளவு என்று குறிப்பிடவில்லை.

write-story-earn-money


வாரமலர் உங்கள் பக்கத்திலும் அதற்கு அடுத்தடுத்த பக்கங்களிலும் கதைகளை வெளியிடுகிறது. உங்கள் பக்கத்தில் வரும் கதைகள் உங்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கதைகளாகும். இதற்கு 150 வார்த்தைகளே போதுமானதாகும். ஒவ்வொரு வாரமும் மூன்று கதைகள் தேர்வுசெய்யப்படும். முதற் கதைக்கு 250, இரண்டாவதற்கு 100, மூன்றாவதற்கும் 100 தான். அதற்கு அடுத்து ஒரு சிறுகதை இடம்பெறும் அதற்கும் பரிசு உண்டு ஆனால் அது எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. அந்த கதை 400 வார்த்தைகளைக் கொண்டும், பெண்ணையோ மகனையோ மகளையோ மருமகளையோ உயர்வாக காட்டும் படியான கதையாகவே இருக்கும். நான் படித்த வகையில் அப்படி தான் உள்ளது. 


இது மட்டுமல்லாமல் எழுத்தாளர்களுக்கே கிடைத்த வரப்பிரசாதம் போல் கடந்த இரு வாரங்களுக்கு முன்னிலிருந்து தினத்தந்தி வெளியிடும் ஞாயிறு தோறும் வரும் தேவதை எனும் வார இதழ், தின இதழோடு சேர்ந்தே வருகிறது. அதில் கதைகள் மட்டுமல்லாமல் பலப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆனால் அந்த போட்டிகளில் பெண்களைத் தவிர வேறு யாராலும் பங்கெடுக்க முடியாது. புனைப் பெயர்க் கொண்டு எழுதி ஏமாற்ற வேண்டாம். பெண் எழுத்தாளர்கள் இதைப் படிக்கிறீர்களானால் உங்களுக்கு நிச்சயம் தேவதை உதவும். தினத்தந்தி தான் தமிழகத்திலே அதிக வாசகர்களைக் கொண்ட பத்திரிக்கை, பொதுவாக எழுத்தாளர்கள் அனைவருமே தங்களது கருத்தை பலர் படிக்க வேண்டும் என்றே எண்ணுவார்கள். அப்படிபட்டவர்கள் தங்களது கதைகளை தேவதைக்கு அனுப்பலாம். அதிக பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் வேறெந்த இதழும் தராத 1000 ரூபாய் பரிசை இவ்விதழ் தருகிறது. இதுவரை மூன்று இதழ் தான் வந்திருப்பதால் எப்படிபட்ட கதைகளை ஆசிரியர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை. ஆனால் 250 வார்த்தைகளுக்கு மேல் உள்ள கதைகளை தேர்வு செய்யவில்லை. அதைக் கடந்த இதழின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். அதே இதழில் நடத்தப்படும் நான் கண்ட தேவதைப் போட்டியும் உண்மை நிகழ்வை எடுத்துரைப்பது தான் அதாவது நீங்கள் கண்ட, உங்களை அதிசியக்க வைத்த பெண்ணைப் பற்றி எழுதுவதாகும். அதற்கும் 1000 தரப்படுகிறது. 


ஆன்லைனில் சிறுகதை எழுதி பணம் சம்பாதிப்பதை என் பழையப் பதிவிலே சொல்லியிருந்தேன். அதைத் தெரிந்து கொள்ள இங்கே தொடவும்


அது மட்டுமல்லாமல் நாங்கள் நடத்தும் தினத்தென்றலும் உங்களது படைப்புகளை தாராளமாக வரவேற்கிறது, ஆனால் பரிசு கொடுக்கமளவிற்கு நாங்கள் வளரவில்லை.


பரிசு ஏதும் வேண்டாம், என் படைப்பு எங்காவது வெளிவந்தாலே போதும் என்ற மனநிலையில் இருப்போர்கள், உங்களது படைப்புகளை text வடிவில் askthendral@gmail.com எனும் mail Id க்கு அனுப்பவும்.


குமுதம் முகவரி,

M/s. Kumudam Publications Private Limited,

New No. 306,

Purasawalkam High Road,

Chennai-600010

Editor: Mr. K.Ramachandran


வாரமலர் முகவரி,


(ஈரோடு,தஞ்சை,சேலம்,திருச்சி போன்ற பகுதியினருக்கும் அதன் அருகில் உள்ளோருக்கும்)

தினமலர் - வாரமலர். 

த பெ எண் 7225,

சென்னை 600008.


(கோவை,திருப்பூர்,சென்னை போன்ற பகுதியினருக்கு)

தினமலர் - வாரமலர், 

த பெ எண் 517,

சென்னை 600008.


தேவதை இதழின் சிறுகதை பிரிவிற்கான முகவரி,

தேவதை-சிறுகதை பகுதி,

தினத்தந்தி, 86,

ஈ.வி.கே. சம்பத் சாலை,

வேப்பேரி, 

சென்னை 600007.

Email Id. devathai@dt.co.in


தேவதை இதழின் 'நான் கண்ட தேவதை' பிரிவிற்கான முகவரி,

தேவதை-நான் கண்ட தேவதை,

தினத்தந்தி, 86,

ஈ.வி.கே. சம்பத் சாலை,

வேப்பேரி, 

சென்னை 600007.

Email Id. devathai@dt.co.in


-ஆசிரியர்



தினத்தென்றலில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் நம்பத்தகுந்தவை ஆகும். பல முறை ஆய்வு செய்யப்பட்டபின்பே செய்தியானது வெளியாகிறது. தினத்தென்றலில் வெளியாகும் செய்திகளின் பதிப்புரிமை தினத்தென்றலுக்கு மட்டுமே உரியது. பல நிருபர்கள் தினத்தென்றலில் செய்திகளை தயாரித்தாலும் அச்செய்திகளை எழுதும் எழுத்தாளரின் பெயரானது எக்காரணத்தைக் கொண்டும் தினத்தென்றல் நிர்வாகம் வெளியிடாது. வாசகர்களும் தினத்தென்றலின் நிருபராக எண்ணினால் (hellothendral@gmail.com) மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும். உங்களைப்பற்றிய விவரமும் இதற்கு முன் நீங்கள் எழுதிய கட்டுரையை அனுப்பினால் போதுமானது.


கருத்துரையிடுக

புதியது பழையவை