அண்மை

கைலாஷ் மலைத்தொடரின் அதிசயமும் ரகசியமும்

அமைதியை தேடிப்போகும் பல்வேறு மனிதர்கள் கைலாஷ் மலைத்தொடரை தேடிப் போகின்றனர் உலகில் எத்தனையோ இடங்கள் இருக்கையில் ஏன் இவர்கள் கைலாஷ் மலைக்கு போக வேண்டும் அப்படி அங்கு என்ன அதிசயமான நிகழ்வு நடக்கிறது உண்மையிலே ஈசன் கைலாஷ் மலைத்தொடர்களில் வாழ்கிறாரா அங்கு வரும் அவரது அடியார்களுக்கு அமைதியை தருகிறாரா?  நல்ல அழகான மலைத்தொடரில் ஏன் இத்தனை சிக்கல்கள் எத்தனை இரகசியங்கள் இப்படி பட்ட கேள்விகள் என அனைத்து மனிதர்களிடமும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

இதுபோன்ற கேள்விகளுக்கு அங்கு சென்று வந்த மனிதர்களின் விடைகளே நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.



கைலாஷ் மலைத்தொடர் இந்திய அரசாங்கமும் சீன அரசாங்கமும் சொந்தம் கொண்டாடக் கூடிய இடமாக இப்போது உள்ளது. அங்கு சென்ற எழுத்தாளர் ஒருவர் தான் சென்று வந்த கைலாய பயணம் குறித்து ஒரு பதிவில் விளக்குகிறார். அன்று நான் என் நண்பனுடன் வண்டியில் ஏறி சென்றேன். மிகவும் நீண்ட பயணம். அப்போது அங்கு ஒரு பெரிய ஏரி இருந்தது. அது கைலாய மலையின் அருகிலேயே இருக்கும் ஏரிதான். தமிழகத்தில் பாதி அளவு இருக்கும். அந்த ஏரியின் அருகே ஆக்சிஜன் குறைவு என்று அந்த ஊர் மக்கள் சொல்வார்கள் நான் அங்கிருந்த ஒரு பள்ளத்தில் இறங்கினேன் மீண்டும் ஏற முயற்சி செய்து பார்த்தேன் ஏற முடியவில்லை. அத்தனை அசாத்தியமான பள்ளமாக அது எனக்கு புலப்படவில்லை, நின்றுகொண்டு பார்க்கும் போதும் அது ஒரு ஏறக்கூடிய உயரமாகவே எனக்கு தெரிந்தது ஆனால் என்னால் ஏற முடியவில்லை. என் உடலில் எவ்வித பிரச்சனையும் இல்லை. இயல்பான நிலையிலே இருந்தேன். இருந்தாலும் ஏதோ ஒரு காந்தம் என் காலுக்கு அடியில் இருந்து கொண்டு இழுப்பது போன்ற ஒரு உணர்வு தலைக்கு மேலே ஏதோ ஒரு சக்தி அழுத்துவது போன்ற ஒரு உணர்வு. இமயமலையில் நான் பார்க்கும் இடமெல்லாம் சித்தர்களாக இருப்பார்கள் பெரும்பாலானோர் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் சித்தர்கள் தான். ஒரே இடத்தில் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை உண்ணாமல் மேலாடை அணியாமல் அந்தக் கடும் குளிரில் எந்தவித சலனமுமின்றி அமர்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இமயமலையில் இருக்கும் ஏதோ ஒரு சக்தி ஆசையை அடக்கிக் கொண்டு வந்த இவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

இதுவரையில் யாருமே கைலாய மலையின் உச்சிக்கு சென்றது கிடையாது 900 வருடங்களுக்கு முன்பு ஒரு சித்தர் அந்த மலையின் உச்சிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது சிவன் உருவமாகக் கருதப்படும் அந்த கைலாய மலையில் கால் வைத்து ஏற அந்த ஊர் மக்கள் மிகவும் அஞ்சுகின்றனர். அந்த வழக்கத்தை மீறி ஏறுபவர்கள் திரும்பி வந்ததே கிடையாதாம். ஒரு அறிவியலாளர் இந்திய அரசாங்கத்திடமும் சீன அரசாங்கத்திடமும் அனுமதி பெற்று கைலாய மலையை ஆராயத் தொடங்கினார். அவரது ஆராய்ச்சியின் முடிவில் விஞ்ஞான ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பல பதில்களை நமக்கு அளித்துள்ளார். கைலாய மலையானது ஒரு பேர்லல் வேல்டாக செயல்படுகிறது என்றும் இயற்கையான மலையானது யாரோ அந்நிய சக்தியால் மாற்றப்பட்டிருக்கிறது என்றும் அப்படி இல்லையானால் இந்த மலையின் உள் புறத்தில் ஏதோ ஒன்று இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.


விஞ்ஞான ரீதியாக அறியமுடியாத அங்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த மலைக்கு யாத்திரீகம் செல்வோர்கள் விரைவிலேயே முதுமைப் பருவத்தை அடைந்து விடுகிறார்கள். பத்து நாட்களுக்கு அவர்களது உடல் கொடுக்கும் வளர்ச்சியை மூன்றே நாட்களில் பெறுகிறார்கள். இதை இன்னும் அறிவியலாளர்கள் ஆய்ந்து கொண்டேதான் உள்ளனர்.


ஆட்டோ பயோகிராஃபி ஆஃப் யோகி எனும் புத்தகத்தில் சுவாமி யோகானந்தா அவர்கள் கைலாய மலைத்தொடர் அருகில் மூவாயிரம் வருடங்கள் வாழும் ஒரு சித்தரை நேரிலே கண்டதாகவும் அவர் பார்க்க 20 வயது இளைஞன் போல் இருந்ததாகவும் அவரே உலகம் தேடிக்கொண்டிருக்கும் மகா அவதார் பாபாஜி என்றும் குறிப்பிடுகிறார். அவர் அந்த மலைத் தொடரில் ஏதோ ஒரு குகைக் அடியில் இன்னும் மறைவாகவே வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.


இயற்கையாகவே எழும் சுயம்பு லிங்கங்கள் நாட்டில் எங்கு தோன்றினாலும் அது ஒரு கோயிலாக மாற்றப்பட்டுவிடும் ஆனால் கைலாய மலைத்தொடர் முழுவதும் எங்கு பார்த்தாலும் சுயம்பு லிங்கங்களாகவே காட்சியளிக்கிறது. சாதாரணமாக சுயம்பு லிங்கங்கள் தோன்றுவதே அரிது ஆனால் கைலாய தொடரில் எங்கு பார்த்தாலும் ஈசனின் வடிவமான சுயம்பு லிங்கங்கள் இருப்பதும் அதைச்சுற்றி சித்தர்கள் வழிபாடு நடத்துவதும் பல்வேறுபட்ட மனிதர்கள் அங்கு வந்து அமைதியைத் தேடிக் கொள்வதும் மர்மமான முறையில் பலர் தொலைந்து போவதும் மாயமாவதும் இன்னுமும் அறிவியலால் அறியமுடியாத அறிவுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களாகவே உள்ளது.


இயற்கையை உணர ஆசைப்படும் மனிதர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கைலாயத்திற்கு சென்று வாருங்கள் அது உங்கள் மனதை புனிதமாக்கும் பயணமாக நிச்சயம் அமையும்.


சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கும் அடியேன்


-ஈசதாசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை