இந்துவைப் பற்றி பேசக் கூடிய நூல் என்பதால் இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் இந்நூலைப் படிக்காது விட்டுவிடாதீர்கள்.
இந்து மதமானது பல 'ஞானிகளால்' அதன் நுட்பங்கள், தத்துவங்கள், அதன் கட்டமைப்புகள் ஆகியவை விளக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒரு சாமானியன் குறைந்த அளவே படிப்பறிவைக் கொண்ட ஒரு பாமரனுக்கும் இளைஞனுக்கும் அதனை புறிந்துகொள்ளும் வகையில் தனது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் 'கவிஞர் கண்ணதாசன்' அவர்கள் இந்து மதம் எவ்வாறு நம் வாழ்க்கையில் தொடர்பு கொள்கிறது. அது வாழ்வை எந்த விதத்தில் செம்மையாக வாழ சொல்கிறது. என்பதை 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்னும் நூலின் மூலம் விளக்குகிறார்.
மகா பெரியவா ஶ்ரீ காஞ்சி காமகோடி மடாதிபதி. ஶ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் இந்நூலுக்கு ஶ்ரீ முகம் தந்துள்ளார். இந்நூல் தினமணி கதிர் எனும் இதழில் கட்டுரையாக வெளிவந்தது. தொகுக்கப்பட்டு பின் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நாத்திகனாக இருந்த அண்ணா அவர்கள் கம்பராமாயணத்தை பழித்து 'கம்பரசம்' எழுதியது போல், தானும் இதிகாச புராணங்களை பழிப்பதற்காக அதை படித்தேன். கம்பன் மீதும் கடவுள் மீதும் அளவுகடந்த வந்த பற்றால் ஆத்திகனானேன் என்று நூலின் தொடக்கத்திலே கூறுகிறார் 'கவிஞர் கண்ணதாசன்' அவர்கள்.
"ஒவ்வொரு உயிருக்கும் தான் படைக்கப்பட்ட காரணம் ஒன்று கடவுளால் நியமிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இறைவன் என்னை படைத்ததற்க்கு காரணம் 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்னும் இந்த அற்புத நூலினை எழுதி பலரது வாழ்க்கைக்கு உதவுவதற்கென்றே எண்ணுகிறேன் என்று கவிஞர் கண்ணதாசன் தனது மேடைப்பேச்சிகளில் பலமுறை கூறியுள்ளார்.
ஒரு மனிதனுக்கு கடவுள் இத்தனை இன்னல்களை கொடுத்து பலரது வாழ்க்கைக்கு அவரின் மூலமே வழியும் கொடுத்துள்ளார் என்பது அதிசியக்கதக்க செய்தி
இந்த சிறப்பான நூலின் முதல் பாகத்தின் விமர்சனத்தை காண்போம்…
முதல் பாகம்
மானுடன் வாழ்க்கையை எப்படி கடந்து செல்ல வேண்டும், துன்பம் ஏன் அவனுக்கு வருகிறது? ஏன் அவன் தனது இடர்பாடுகளை இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும்? போன்ற அனைத்து விடயங்களையும் இந்துமத தத்துவங்கள் மூலமும் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மூலமும் ஒப்புமை செய்து மனிதன் நல்ல பக்குவம் அடைந்த நிலையில் இல்லறம் துவங்குவதற்கு இந்நூலை கட்டாயம் அனைவரும் படித்தறிய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதாவது திருமணமாகாத இளைஞர்கள் இந்நூல் தன் திருமணத்திற்கு முன்னே படித்தறிந்து கொள்ளுங்கள்.
பெற்றிடுங்கள்
தற்போது உள்ள இளைஞனுக்கு 'கோயிலுக்கு செல், கடவுள் தவறு செய்தால் நரகத்தில் எண்ணெய் கொப்பறையில் போட்டு வறுத்து விடுவார்' என்று கூறினால் சிரித்து விலகி விடுவான். அந்த காலத்தில் இது போன்ற கதைகள் சொல்லப்பட்ட காரணம் இது போன்ற கதைகள் மூலமாவது தவறு செய்யாமல் அறத்தோடு வாழ்வான் என்பதற்காகவே..!
இந்து மதமும் இதிகாச புராணங்களும் ஒருவரை நல்வழிப்படுத்த எழுந்ததே. அதை கண்ணதாசன் தெளிவுற விளக்கியிருப்பார்.
நம்மை சுற்றி உள்ள உறவுகள் எப்படிபட்ட உறவு. இது மெய்யான உறவுதானா? என்ற ஐயப்பாடுகளுக்கு புராண கதை மூலம் தனது விளகத்தை தருகிறார் கவிஞர் அவர்கள்.
"இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஒர் ஆத்மா தாக்கப்படும் போது, இன்னொரு ஆத்மா இயற்க்கையாகவே துடிக்குமானால் அந்த உறவே புனிதமான உறவு" என்று 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலின் முதற்பாகத்தில் 'உறவு' எனும் அத்தியாயத்தில் தருகிறார் தனது கூற்றை. நல்ல நண்பனையும் அவ்வாறே அறிய சொல்கிறார்.
இந்த முதல் பாகத்தில் ஒரு நல்ல மனைவி எப்படி இருக்கவேண்டும் அவளது குணநலன்கள் எப்படி அமைய வேண்டும் என்று 'நல்ல மனைவி' என்னும் அத்தியாயம் சுவைப் பட விளக்குகிறது. இந்து மத தத்துவத்தின் மூலமும் தனது வாழ்க்கையில் கண்ட காட்சிகளின் மூலம் அதனை விளக்குகிறார் கண்ணதாசன்.
இன்றைய மனிதர்களிடம் "பாவம் செய்யாதே" என்று சொன்னால் "பாவமாய் புண்ணியமாம் போ பா.. அந்த பக்கம்" என்று கூறுவர். ஏன் என்றால் இந்துமத தத்துவங்களையோ அல்லது புராண கதைகளையோ அவர்கள் அறிந்திருக்கமாட்டார். இல்லையெனில் பாவம் பலவற்றை செய்து மூப்படைந்த காலத்தில் படும் இன்னலை இன்னொருவரின் அனுபவத்தின் மூலம் கூட அவர் காணாதிருப்பார்கள்.
"பாவத்தின் சம்பளம் மரணம்" என்கிறது கிறிஸ்துவ மதம்.
அது இல்லை. பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில் திரும்பிவரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில் அவனுக்கு கிடைக்கும் போனஸ் என்று தனது பாணியில் "பாவமாம் புண்ணியமாம்" என்ற அத்தியாயத்தில் தருகிறார் கவிஞர்.
இந்த நூலை தற்போது உள்ள இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கே வாழ்க்கை பற்றிய ஒரு சிந்தனை உள்ளது. நல்லது செய்து ஏமாளி ஆகிவிடுவோமா? தெய்வத்தை நம்புவது சரிதானா? என்று கேள்விக்கான பதிலையும் வாழ்க்கை சிறப்புடனும் அறத்துடனும் வாழ வழியும் காட்டுகிறது.
ஆகவே தான் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான நூல் "அர்த்தமுள்ள இந்துமதம்" என அழுத்திச் சொல்கிறேன்.
முதல் பாகத்தில் இன்னும் பல அத்தியாயங்கள் நல்ல அனுபவ ரீதியிலான கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், தத்துவம், இதிகாச, புராண தத்துவங்கள் போன்றவை உள்ளன. அவை அனைத்தையும் சொல்லிவிட்டால் அந்நூலின் சிறு வழிநூல் போல ஆகிவிடும் என்பதை கருதி குறைவானவற்றையே சொல்லியிருக்கிறேன்.
வாசகர் அனைவரும் இந்த ஒப்பற்ற நூலினை வாசிக்க வேண்டுகிறேன்.
பத்து பாகம் கொண்ட முழு தொகுப்பை மலிவு விலையில் பெறுங்கள்
பகவத்கீதை, குர்ஆன், பைபிள் போன்ற அறநூல்கள் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த வரிசையில் "அர்த்தமுள்ள இந்துமதம்" நூலும் பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டிய நூல் என்பது என் துணிபு.
-குகன்
© Dhinaththendral Own the COPYRIGHT to this Content