அண்மை

அர்த்தமுள்ள இந்து மதம் - இரண்டாம் பாகம் நூல் விமர்சனம்

இரண்டாம் பாகம்

book 2


இந்து மதம் ஒரு சுதந்திரமான மதம். அது நீ சந்நியாசி ஆகிவிடவேண்டும் என்று சொல்லும் கட்டுப்பாடு இல்லாதது. இல்லற வாழ்க்கையை இன்பமுற வாழ வழி செய்வது. 'அர்த்தமுள்ள இந்துமதம்' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் விமர்சனத்தை காண்போம்


இரண்டாம் பாகம்


இந்த இரண்டாம் பாகத்தில் இந்து மக்களிடையே நிலவி வரும் பழக்க வழக்கங்கள் அதன் பலன்கள் ஆகியவையை இதிகாச புராணம் மற்றும் விஞ்ஞான ரீதியான உண்மை மூலம் விளக்குகிறார் 'கவிஞர் கண்ணதாசன்' அவர்கள்.


மகேந்திர வர்ம பல்லவன் கால கட்டத்தில் மகாபாரத இதிகாசம் போன்றவை, கல்வெட்டுகள் மூலமும் நாடகம் மற்றும் கதை சொல்லும் முறையின் மூலமும் பரப்பப்பட்டது. இப்போது உள்ள சிலர் 'மகாபாரதம்' 'இராமாயணம்' போன்ற இதிகாசங்களை பழிக்கின்றனர். இது போன்றேல்லாம் நடக்க வாய்ப்பில்லை பொய்யான ஒரு கதையை பற்றி ஏன் பேச வேண்டும் என அலட்சியமாக சொல்கின்றனர். சரி அவர்களது கூற்றுபடியே இதிகாசங்கள் கற்பனை அல்லது பொய் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அவற்றுள் உள்ள கற்பனை போல தற்போது உள்ள எவராலும் எழுத முடியவில்லை. அதில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியல் கருத்துகளை, இப்போது வரும் எந்த நூல்களிலும் காண முடியவில்லையே.


அந்த இதிகாசங்கள் கூறும் தத்துவங்கள் எத்தனை! எத்தனை


நம்பிக்கை அவநம்பிக்கை ஆணவம் மீட்சி காதல் கற்பு ராஜதந்திரம் குறுக்குவழி நட்பு அன்பு பணிவு பாசம் கடமை இப்படி வாழ்க்கையில் எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையும் நமது இதிகாசங்கள் காட்டுகின்றன என்று இரண்டாம் பாகத்தில் இதிகாசங்கள் எனும் அத்தியாயத்தினுள் கூறியுள்ளார் கண்ணதாசன்.


பழங்கால மக்களை விட இப்போது நாம் பல வகையில் முன்னேற்றம் அடைந்திருக்கும் போதிலும் பல நூறு ஆண்டுகளில் இது போன்ற இதிகாசங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.


எப்படியும் இறக்கத்தான் போகிறோம்!!. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் ஆவி போன உடன் சமரசமாக கூடும் இடம் இடுகாடு ஒன்றே. இவன் பணக்காரன் நாமோ ஏழை என்ற வருத்தமுடன் சிந்தனை செய்வது இந்த உண்மையை அறிந்தால் நிம்மதி அடையும்.


தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச் சென்றார்.


காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.


அதைப் பார்த்த ஒர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்: ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?


தமிழர் பதில் சொன்னார்: இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை தினமும் நினைவு படுத்துகிறோம்.


ஆங்கிலேயர் அதிர்ந்து போனார். அதிலிருந்து இந்து மதத்தை ஆராய்ச்சி செய்ய துவங்கினார். (அர்த்தமுள்ள இந்துமதத்தில்ல் உள்ள கதை)


இந்நூலை ரூபாய் 21 க்கு 

பெறுங்கள்


இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன், இந்த உடல் இறைவன் கொடுத்த பரிசு 


நீ கையெழுத்து போட்ட பத்திரம் காலாவதியாகிப் போகிறது.


கடனை கட்டுவதற்கு தாயார் ஆகி கொள் என தனது தத்துவத்தை, வாசலில் அமீனா நிற்கிறான் எனும் அத்தியாயத்தில் தருகிறார்.


கவிஞர் இதை சொல்வதற்கு காரணம், இவ்வளவு தான் வாழ்க்கை என்று சலிப்படைய செய்வதற்காக அல்ல. இந்த குறுகிய கால வாழ்க்கையில் நேர்மை, நம்பிக்கை கொண்டு நல்லதே செய்து வாழ்வதற்க்காக.


நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான், அவன் நம்மை கண்காணிக்கிறான் என்றால் நாம் பயத்துடனும் நேர்மையுடன் பணிவுடனும் பணியை செய்வோம். அதாவது கடவுள் என்பவன் முதலாளி நாம் தொழிலாளி, நாம் செய்யும் தவறுக்கு ஏற்ப சம்பளமே முதலாளியால் வழங்கப்படும்.


அதுபோல் அவன் மீது நம்பிக்கை கொண்டு காரியம் செய்தால் அவனே அதை பார்த்து கொள்வான் என்று நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி எனும் அத்தியாயத்தில் கூறுகிறார்.


இன்றைய இளைஞன் எனும் அத்தியாயத்தில் நல்ல மனைவி எப்படி தேர்வு செய்ய வேண்டும்? வாழ்க்கைகான அஸ்திவாரம் எப்படி அமைத்தல் வேண்டும்? எதிர்காலம் என்னவாகப் போகிறது? போன்ற பல விடயங்களை இன்றைய இளைஞனுக்கு கூறுகிறார்.



பத்து பாகம் கொண்ட முழு தொகுப்பை மலிவு விலையில் பெறுங்கள்



முதுமைப் பருவத்தில் உள்ளோர் கூட தனது அனுபவங்கள் மூலமே பல விடயங்களை தெரிந்து கொண்டிருப்பர். இளமை தழும்பும் நீங்கள் முன்பே அவைகளை தெரிந்து கொள்ள இந்நூலைப் படியுங்கள்.


-குகன்

கருத்துரையிடுக

புதியது பழையவை