அண்மை

மகா அவதார் பாபாஜி

மகா அவதார் பாபாஜி
மூலம்: விக்கிபீடியா

மகா அவதார் பாபாஜியை பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.

இவரது காலம் என்னவென்று இன்னமும் சரியாக அறிய முடியவில்லை. சிலர் கிபி இரண்டாம் நூற்றாண்டை இவரது காலமாக கருதுகின்றனர். இந்த ஞான மனித தெய்வத்திற்கு மகா அவதார் பாபா என்று பெயர் வைத்தவர் யோகிராஜ் லகிரி மகஷயா ஆவார்.

உலகமே வியக்கும் இந்த மனிதர் பிறந்த இடம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை என்னும் ஒரு சிறு கிராமத்தில் ஆகும். இவர் ஒரு தமிழரே.

இச்சாசக்தி கிரியா சக்தி மாயா சக்தி ஞானசக்தி என்று சக்திகளை பிரிப்பர். அதில் கிரியா சக்தி உலகிற்கு வெளிப்படையாக கொடுத்த மகான் பாபாஜியே ஆவார்.


கிரியா சக்தி என்பது உடலுக்கு ஏற்படும் நோய்களையும் வயோதிகத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு ஆற்றல் ஆகும். அதாவது அரை மணி நேர கிரியா பயிற்சியை மேற்கொண்டால் ஒரு ஆண்டு முழுவதும் வயது ஆகாமலே உணவு எடுக்காமலேயே பிணியால் அவதிப் படாமலே மனித உடலில் எவ்வித மாற்றமும் ஏற்படாமலே வாழ முடியும்.

பாபாஜி அந்த கிரியா சக்தியை போகரின் மூலமும் அகத்தியரின் மூலமும் பயின்றுள்ளார் என்று அவரைக் கண்ட சில ஞான குருமார்களின் புத்தகங்களின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது.


பாபாஜி மூலமாகவே எங்கள் வாழ்வினில் நற்கதியை அடைந்தோம் என்று George Harrison, Paramahansa Yogananda, நடிகர் Rajinikanth, Roger Hodgson, Steve Jobs, The Beatles, Yukteswar Giri Padmanabhan இன்னும் பலர் கூறுகின்றனர்.


இவரது காலத்தை தெளிவாக நாம் அறிய முடியாத காரணம், இவரது கிரியா சக்தியே ஆகும். அதன்மூலம் என்றுமே இவர் 30 வயது இளைஞனாக தெரிவதால் இவரது காலத்தை நம்மால் கணக்கிட முடியவில்லை.


மகா அவதார் பாபாஜி அவரின் படத்தினைப் பார்க்கும் போது அவரது உடல் நேர்கோட்டில் இருக்கும்படியும் கண்கள் இரண்டும் மேலெழுந்த படியும் அமைக்கப் பெற்றிருக்கும் சித்தர் இலக்கியத்தில் பாம்பாட்டி சித்தர் என்பவர் உடலின் அடியில் இருக்கும் மூலாதாரத்திலிருந்து எழுப்பப்படும் குண்டலினி எனும் அமைப்பு ஒரு பாம்பு எழுவது போன்றே இருக்கும் என்று கூறி இருப்பார். கீதையும் பல யோக கருத்தை கூறுகிறது. அதேபோல மகா அவதார் பாபாஜியின் படத்தினை காணும்பொழுது உடலிலுள்ள அனைத்து சக்கரங்களும் மேலெழும்பி நெற்றியில் நிறுத்தப்பட்டு இருப்பது போன்று காட்சிதரும்.


அகத்தியரிடமும் போகரிடமும் அட்டமா சித்திகளை பயின்ற இவர் இமய மலைக்கு செல்ல வேண்டும் என்னும் ஆர்வத்தை பெற்று கைலாய மலைத்தொடருக்கு சென்று இன்னமும் அங்கு வரும் உண்மையான தொண்டர்களுக்கு ஞான வடிவாக இருந்து உதவி கொண்டு இருக்கிறாராம்.


பரமஹம்ச யோகானந்தர் அவரது நூலில் மகா அவதார் பாபாஜியை பற்றி மிகவும் தெளிவாக விளக்குகிறார் அவரது உடலை சுற்றி ஒரு தெய்வீக ஒளி தெரியும் என்றும் அவரது முகத்தைக் காணும் போது நம் கண்களே கூசும் என்றும் அந்த நூலில் குறிப்பிட்டு இருப்பார். அவரிடமிருந்து விடைபெறும் பொழுது பரமஹம்ச யோகானந்தர் நான் உங்களை தொட்டுப் பார்க்கலாமா என்றும் கேட்டிருக்கிறார் அதற்கு பாபாஜி அவர்கள் நிச்சயம் என்னை நீ அடித்து கூட பார்க்கலாம் என்று பதில் தந்திருக்கிறாராம்.


மகா அவதார் பாபாஜி சொல்கிறார், என்னை காண வரும் புனிதமான மனம் கொண்ட மனிதர்கள், என்னை தேடி ஒரு அடி எடுத்து வைத்தால் நான் அவர்களை தேடி 10 அடி எடுத்து வைப்பேன் என்று.


-ஈசதாசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை