உங்களின் புரிதலுக்காக திருக்குறளின் அடிவரையறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் வார்த்தைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. புதுமையை விரும்பும் தமிழுலகம் இதையும் ஏற்கும் என நம்புகிறேன். பொருள் இல்லாமலே புரிந்து கொள்ளக் கூடிய இந்த திருக்குறள்களிலும், படிக்கும் உங்களுக்கு சிறிது பொருள் விளங்கவில்லையானால் அது என் குறள் தேர்வின் பிழையே அன்றி உங்களதல்ல. -குறள்மகன்
தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.
இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும் வல்லது அரசு.
கற்க கசடற கற்பவை கற்றபின்,
நிற்க அதற்குத் தக.
எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.
தினைத்துணையாம் குற்றம் வரினும், பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
மனத்துளது போல காட்டி ஒருவர்
இனத்துள தாகும் அறிவு.
மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனத்தூய்மை தூவா வரும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து.
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.
வான்னோக்கி வாழும் உலகெல்லாம், மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி.
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
தேர்வு - குறள்மகன்