அண்மை

குறுந்தொகை 2 சிறுகதை - குகன் (kurunthogai 2 story)

கேசம் வாசம்

kurunthogai


முன்பு ஒரு காலத்தில் நாகப்பூர் எனும் நாட்டை சோமசுந்தரன் எனும் இளவரசன் ஆட்சி புரிந்து வந்தான். மற்ற அரசர்களை போல் அல்லாது மக்களுள் ஒருவனாக தன் நாட்டின் மக்களுடன் பழகி வந்தான். அவன் மாதம் ஒரு முறை மக்களிடம் போட்டி நடத்தி அவர்களுள் திறமை மிக்கவரை அரச பதவியில் அமர்த்துவது வழக்கம். அவர் நேர்மை , கட்டுப்பாடு போன்ற பல நல்ல குணங்களை உடையவர்.

அவருக்கு வயது இருபத்தி நான்கு. மற்ற நாடுகளில் பதினெட்டு வயதிலேயே இளவரசர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். இவனுக்கோ திருமணம் மீது ஈடுபாடு இல்லை. இவனது தந்தையும் அந்த நாட்டின் முன்னாள் அரசரும் ஆன சோமன் நோய்வாய்ப்பட்டிருந்தார். தனது மகனின் திருமணத்தை எப்படியாவது தன் வாழ்நாள் முடிவதற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசியாருடனும் மந்திரியிடமும் சொன்னார். மந்திரி பாண்டிபுரி தனது நாட்டின் முன்னாள் அரசரின் ஆணையை ஏற்று இளவரசரின் திருமணத்தை நடத்தி முடிக்க திட்டங்கள் வகுக்களானார்.


ஒரு நாள் காலை இளவரசர் அரசவையில் வெகு நேரகமாக அமர்ந்திருந்தார் ஆனால் மந்திரி வரவில்லை. அப்போது மந்திரி வருவதை கண்ட அவர்


'மந்திரியாரே ஏன் இவ்வளவு தாமதம்?'


'அது ஒன்றும் இல்லை இளவரசே நான் வந்த வழியே ஒரு நறுமணம் எனது மூக்கினுள் புகுந்து மூளைக்கு ஏறியது. அதை முகர்ந்து கொண்டே சென்றேன். அது ஒரு அழகிய பூந்தோட்டத்தில் இருந்து வந்தது என தெரியவந்தது. அங்கு சென்று அந்த நறுமணத்தில் மதிப்பு மயங்கி நின்று விட்டேன்.அதனால் தான் இவ்வளவு தாமதம் இளவரசே!'


'ஓ அவளவு நறுமணம் வீசும் பூந்தோட்டமா?' மந்திரியாரே நாம் அங்கு உடனே செல்ல வேண்டும்.


மன்னரும் மந்திரியாரும் மாறுவேடத்தில் சென்றனர்.


மன்னரும் அந்த பூக்களின் மணத்தில் மதி மயங்கினார்.


'இயற்கையிலேயே இவ்வளவு மணம் பூக்களுக்குத்தான் இருக்கும்!'


'இல்ல இதைவிட நறுமணமான இன்னொரு பொருள் இருக்கும். ஆனால் அதை நாம் எப்படி கண்டறிவது. நம் அரசர் தான் இதை கண்டறிய முடியும்'


என்று சிறுமிகள் பேசிக்கொண்டு சென்றது மாறுவேடத்தில் இருந்த அரசர் காதில் விழ உடனே அங்கிருந்து அரசவைக்கு கிளம்பினார். வேடங்களை  மந்திரியும், இளவரசனும் களைந்தனர். சிம்மாசனத்தில் அமர்ந்து அரசர்,


'பூக்களை விட இயற்கையிலே மணம் வீசும் ஒன்றை கண்டறிந்து கூறுபவருக்கு அவர் கேட்கும் எதுவாயினும் சன்மானமாக வழங்கப்படும்! ' என்ற அறிவிக்கையை நாட்டு மக்களிடம் கூற கட்டளை இட்டார்.


'மந்திரியாரே வழக்கம் போல தாங்களே இதற்கு தலைமை ஏற்க வேண்டும்' என்றார் அரசர்.


'இளவரசே மன்னிக்க வேண்டும் தங்களது தந்தையாரை குணப்படுத்துவதற்கான மூலிகையை ராஜபூர் நாட்டில் இருந்து வாங்கி வரும் பணியை என்னிடம் மருத்துவர் ஒப்படைத்து உள்ளார். அதற்கு ஒரு மாத காலம் ஆகும்'.


'அதனால் இன்று இரவு புறப்பட வேண்டும்'


'சரி நான் பார்த்து கொள்கிறேன். தாங்கள் தற்போதே புறப்படுங்கள்!'


'தங்கள் உத்தரவு' என்று கிளம்பினார்.


போட்டியின் நாள் அன்று அரசவையில் பங்கேற்பாளர்கள் வருகைக்காக இளவரசர் காத்துக்கொண்டிருந்தார். வெகு நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. சில மணிநேரம் கழித்து வயதான சாமியார் வருவதாக வாயிற்க்காவலன் அறிவிக்க அவரை உள்ளே வர சொன்னார் இளவரசர்.


'அரசே நான் பக்கத்து நாட்டில் இருந்து வருகிறேன்….'


'அதேல்லாம் சரி ஐயா பூவைவிட இயற்கையிலே மணம் தரக்கூடிய பொருளை கொண்டு வந்தீர்களா..? '


'அரசே அதை சோதனை மூலமே நிறுபிக்க வேண்டும். ஆனால் அந்த சோதனையை தாங்கள் தான் செய்ய வேண்டும். நானோ அல்லது வேறு யாரோ இதை முயற்சி செய்தால் உண்மை உங்களுக்கு தெரியாது!'.


'சரி சரி… அப்படி என்ன சோதனை அது?


'பூக்களை விட மணம் தரக்கூடிய ஒன்று என்றால் அது பெண்ணின் கூந்தலே, அதனால் பெண்களின் கூந்தலை முகர்ந்து பாரும்'


'இல்லை இல்லை.. நீ கூறுவது தவறு'


'இல்லை அரசே நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் ஆனால் நீங்கள் ஏகப் பத்தினி விரதமும் பிரம்சரிய விரதமும் கலந்து பூண்டவர் போல உள்ளீர். வேறு பெண்ணிடம் இதை முயற்சி செய்து பார்க்கும் அளவுக்கு நீங்கள் தாழ்ந்தவர் இல்லை.ஆதலால் நீங்கள் திருமணம் செய்து கொண்டு பின் சோதனை செய்து பாருங்கள் அதுவே நான் செய்ய சொல்லும் சோதனை.


'அது நடக்காது…!!'


'அப்படியானால் உங்களின் போட்டி முடிவு பெறாது'.


வேறு யாரும் வராததாலும்,இவர் ஒருவரே வந்தததாலும்,போட்டியின் முடிவு தெரிவதற்க்காகவும்,சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டு பின் சம்மதம் தெரிவித்தார் இளவரசர். 


'போட்டியில் வெற்றி பெற்றால் என்ன வேண்டும்?'


'அதை வெற்றியடைந்த பின்னர் சொல்கிறேன்'.


'தோற்றால்.?'


'தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…!'


இளவரசரின் பெற்றோர் பக்கத்து நாட்டு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர் இவ்வளவும் ஒருமாத காலத்துக்குள் முடிந்தது. திருமணம் முடிந்த கையுடன் அந்த சாமியார் வந்து


'இன்று இரவு தங்கள் தலைவியின் கூந்தலை ஆராயுங்கள் நாளை காலை பூக்களை ஆராயுங்கள் உண்மை புரியும்!'


'நான் நாளை எங்கும் சென்றுவிடுவேன் என்ற சந்தேகம் ஏற்படுமானால் பூந்தோட்டத்தில் காவலாளிகளை வைத்து என்னை நாளை காலை வரை சிறை வையுங்கள்'


'சரி அப்படியே ஆகட்டும்'


மறுநாள் காலை பொழுது விடிந்தது. சோமசுந்தர அரசரும் இரவு மனைவியுடன் பொழுதை கழித்து விட்டு தோட்டத்திற்கு வந்தார். அப்போது தோட்டத்தில் அந்த சாமியார் உறங்கி கொண்டிருந்தார்.அவரை எழுப்புவது முறை ஆகாது என்று அவரிடம் இருந்து விலகி பூக்களில் அமர்ந்திருந்த வண்டை நோக்கி


'வண்டினமே நீ எத்தனையோ பூக்களில் அமர்ந்திருப்பாய்.இந்நாட்டின் அரசன் நான் என்று உண்மை மறைக்காதே!.என் மயில் போன்ற ஒப்பனை உடைய என் அரிவை பருவத்து மனைவியின் கூந்தல் போல மணம் வீசும் பூ இருக்கின்றதோ!'. என்று காதல் மயக்கத்தில் புலம்பியதை அந்த சாமியார் கண்டு சிறிது சிரிப்புடன் 


'அரசே…?'


'சாமியாரே உமக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்?..


நீர் சொன்னது உண்மை என் தலைவியின் கூந்தலில் இயற்கையாகவே மலர்கள் விட மணம் வீசியது'.


'அரசே இரண்டு வேண்டுகொள்…?'


'எத்தனை வேண்டுகோளாயினும் கேளுங்கள்?'


'ஒன்று அரசியாருடன் நீங்கள் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும்!'


அது நடக்கத்தான் போகிறது.


'உமக்கு என்ன வேண்டும்…?'


'மன்னிப்பு வேண்டும்!'


'மன்னிப்பா? எதற்கு..?'


'இவ்வளவு நாடகங்கள் நடத்திய அடியேனை மன்னிக்க வேண்டும்!!' என்ற படியே தனது சாமியார் வேடத்தை களைந்தெரிந்தார் மந்திரி.


சட்டென அதிர்ச்சி அடைந்த அரசர்.



'உங்களது வேண்டுகோள் நிறைவேற்றப்படும்' என்றார் பொன்சிரிப்புடன்.


-குகன்



குறுந்தொகை 2 செய்யுள்


கொங்குதேர் வாழ்க்கைஅஞ்சிறைத்தும்பி

காமம்செப்பாதுகண்டது மொழிமோ

பயிலியதுகெழீஇயநட்பின்மயிலியல்

செறியெயிற் றரிவைகூந்தலின்

நறியவும் உளவோநீயறியும்பூவே


ஆசிரியர் - இறையனார்



குறுந்தொகை 2 உரை


தேனை தேர்ந்தெடுத்து உண்ணும் வாழ்க்கை கொண்ட தும்பி இனத்து வண்டே, உனக்கு தேன் மீது இருக்கும் ஆசையை விடுத்து உணர்ந்து கண்டதை சொல், தேன் உண்பதில் விருப்பமுள்ள நாம் நண்பர்கள் ஆவோம், அந்த உரிமையில் கேட்கிறேன், இந்த அரிவை பருவத்து பெண்ணின் கூந்தலில் இருக்கும் தேனைக் காட்டிலும் நறுமணமான தேன் நீயறியும் பூவில் உள்ளதா?



கருத்துரையிடுக

புதியது பழையவை