அண்மை

அர்த்தமுள்ள இந்து மதம் - ஐந்தாம் பாகம் ஞானம் பிறந்த கதை நூல் விமர்சனம்

உலக வாழ்க்கையில் நான் செல்வத்தை மட்டுமல்ல அனுபவத்தையும் திரட்டியவன் உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனவை என்று எனக்குத் தெரியும்

                                       -கண்ணதாசன் 


அர்த்தமுள்ள இந்துமதம் எனும் இவ்வரிய நூலின் 'ஞானம் பிறந்த கதை' எனும் ஐந்தாம் பாகத்தின் விமர்சனத்தை தற்போது காண்போம்.

arthamull indhu matham



எல்லோருக்கும் எளிதில் ஞானம் எனும் அற்புத விடயம் பிறப்பதில்லை. கடவுளின் அருள் ஒளி பார்வை பட்டவருக்கே ஞானம் பிறக்கிறது. 


அப்படி ஒரு பெரும் ஞானத்தை பெற்றவரே பட்டினத்தார் ஆவார்.


ஒரு வரியில் வெறும் ஒரே வரியில் ஒருவன் தன் பந்த பாசங்களை துறந்து, மாட மாளிகை, செல்வங்கள் அனைத்தையும் துறந்து துறவு மேற்கொண்டிருக்கிறான் ஆனால் அவர் பட்டினத்தடிகளும் அவரது ஆத்ம சீடரான பத்திரகிரியாருமே ஆகும். அவர்களுக்கு ஞானம் பிறந்த கதையே இந்த பாகத்தின் சாரம்சம். அக்கதை நமக்கும் ஞானத்தை புகட்டுகிறது. அவர்களது வாழ்க்கையின் ஆச்சரியமான நிகழ்ச்சிகளை இப்பாகத்தில் தருகிறார் கண்ணதாசன்.


"காதற்ற ஊசியும் வராது கான் கடைவழியே"


அதாவது காது இல்லாத ஊசி கூட நம் மரணத்தின் பிறகு நம்மோடு வராது என்பது இதன் கருத்து.


இவ்வொருவரியே 'பட்டினத்து அடிகளுக்கு' ஞானத்தை பிறக்கவைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சற்று சிந்தனை செய்து பாருங்கள் மேல் கூறிப்பிட்ட வரியை நானும் நீங்களும் முன்பு ஒருமுறையேனும் படித்திருப்போம். ஏன் இப்போது கூட மேலே அந்த வரியை படித்திருப்போம். ஆனால் ஏன் அந்த ஒரு வரியில் நமக்கு எந்த 'ஞானமும்' பிறந்து, துறவறம் மேற்கொள்ளும் சிந்தனை வரவில்லை. இந்த ஒரு வரியில் ஞானத்தை பெறுவதற்கு வெறும் அறிவு மட்டுமல்லாது கடவுளின் கருணையும், அருளும் வேண்டும்.


சரி, அதேபோல் நாங்களும் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்கிறாயா? என்று வினா எழுப்பினால் அதற்கு பட்டினத்தாரே பதில் தருகிறார். என்னைபோல அனைவரும் துறவறம் மேற்கொண்டால் எல்லோரும் துறவி ஆகிவிட்டால் உலக இயக்கம் நின்று போகும் அது மட்டுமல்ல ஞானத்தை உபதேசிக்க வேண்டிய அவசியமில்லாமலும் போகும். அதற்காகவே என்னை போன்ற ஒரு சிலர் துறவறம் பூண்டு லௌகீக வாழ்க்கையில் உள்ளவர்களின் சிக்கலைத் தீர்க்க பயன்பட்டுக்கொண்டிருக்கிறோம். 


பட்டினத்தார் மூலம் பத்திரகிரியார் ஞானம் பெறும் கதையும் சுவாரஸ்யமான ஒன்று.


ஒரு துறவிக்கு இருக்கும் ஆணவம், இன்னொருவனின் ஆணவத்தை அழிக்கும் என்பதை கண்ணதாசன் மிக அழகாக கூறியிருப்பார். அவ்வரிகளை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.


இதன் கின்டில் விலை மிக மிக குறைவு, வெறும் 16 மட்டுமே


ரத்த அணுச் செத்தவன்தான் தத்துவத்தில் விழுவான் என்றார்

தத்துவத்தை மறந்தவன் தான் ரத்தத்தால் எரிவான் என்றேன்  


ஆண்மை இலான் தத்துவங்கள் அவனுக்கே பொருந்தும் என்றார் 


ஆண்மையினைச் சோதித்த அனுபவமே ஞானம் என்றேன் 


நாளைக்கோர் பெண் கிடைத்தால் நான் கூட சம்சாரி என்றார் 


வேளைக் கொன்று கிடைத்தாலும் வெறுப்பவனே சந்நியாசி என்றேன்  


நதிமூலம், ரிஷி மூலம் நான் கேட்டதுண்டு; இது எவர் மூலமோ? அறியேன்! " என்றார்  


வாதற்ற பெண்டாட்டி வாய்த்ததுண்டு என்றாலும் காதற்ற கவசிதான் காட்டியது மூலம் என்றேன் 


ஊசியினால் ஆசை ஓடிவிட்டால் மீண்டுமொரு பாசியினால் இந்தப் பந்தம் திரும்பாதோ என்றார்


வேசியினால் கெட்டால் விரைவில் திரும்பிவிடும், மெய்ஞான மெய்யழுத்தம் விண் வரையில் கூட வரும் என்றேன்


சுற்றம் தவறு  துணை தவறு ;அதனால்தான் முற்றும் தவறென்று முனிவர் புலம்புகிறார்


சுற்றும் தெளியாதான் காண்பதெல்லாம் தவறென்பான்  முற்றும் தெரிந்த பின்னே முழுச்சுமையை நான் துறந்தேன் என்றேன்


பத்தினியாய் ஓர் மனைவி பாராதான் ஞானி என்றார்


சித்தர்கள் கதையல்ல திருவருள்சேர் ஞானி என்றேன்.


ஒரு மனது நமக்கிருந்தால் யாருக்கும் ஒரு மாது என்றார்.


எந்த ஒரு பெண்ணுக்கும் இரண்டு மனம் உண்டு என்றேன் 


மொத்தத்தில் சொல்லது முட்டாள்கள் ஞானம் என்றார்.


முட்டாள்தனமே முழு ஞானம்! என்றுரைத்தேன்.


சக்தி கதை அதுதானா? தத்துவமும் அதுதானா? என்றார் . 


சக்தி ஒரு ஞானக் கலை, சம்சாரக் கலை அல்ல என்றேன் 


அரசனது பத்தினிகள் ... என்றார் 


அவர்களுக்கு பல மனது என்றேன்


முழுவதையும் தெரிந்து கொள்ள இவ்வரிய பல கருத்து கொண்ட அர்த்தமுள்ள இந்து மத நூலை வாங்கி படிக்கவும்


பத்து பாகம் கொண்ட முழு தொகுப்பை மலிவு விலையில் பெற்றிடுங்கள்


-குகன்

கருத்துரையிடுக

புதியது பழையவை