அண்மை

அர்த்தமுள்ள ஹைக்கூ

meaningful quotes




என்னால்


முடியு மென்பவன் 


எழுகிறான்...


என்னால் மட்டுமே 


முடியு மென்பவன் 


விழுகிறான்…




குறை கூறும்


கூட்டத்தினுள்


குட்டிப் போட்ட


ஆடு போல


அங்கும் இங்கும்


அலைகிறேன் - என்


நிறையைத் தேடி…




செல்போன் கண்டு


சிரிப்பவர்


மத்தியில்


புத்தகத்தால்


சிரிப்பவர்


வெகுசிலரே




அனுபவங்கள்


கவிஞனாகும்


அவன்


கவிதைகளே


அனுபவமாகும்…




நினைவுகளை


புரட்டிப்பார்த்தேன்


பிழை நிறைந்த


முதற் பக்கமே


புன்னகைக்க


வைத்தது…




கடந்த கால


நினைவுகளும்


எதிர்கால


நினைப்புகளும்


நகர்த்துகிறது


நம்


நிகழ்கால


தேவைகளை




நாம்


நல்ல பூக்களை


முதலில் பறிப்போம்


இறைவன்


நல்ல மனிதர்களை


முதலில் பறிப்பான்




ஏற முடியாத


இமயம் போல


வாழ்க்கை


ஏற முயற்சிக்கும்


எறும்பு போல


நாம்...




ஆண்களின்


கண்ணீர்


அடக்கப்


படுவதில்லை


மறைக்கப்


படுகிறது




உலக உயிர்கள் 


அனைத்தையும் 


காதலிப்பவன்


அசைவத்தையும் 


காதலிக்கிறான்


அறிவிழந்து…




துன்பத்தை


கண்டு


தள்ளி


போவோர்க்கு


இன்பத்தின்


இன்பம்


தெரியாது…




தேடலின்


எல்லை


அதை


தேடும்


வரை


இல்லை…




இன்று


காதலை


சொல்லாது


காதலிப்பதும்


கானல் 


நீரில்


தாகந்


தணிப்பதும்


ஒன்றே...




மனமென்ற


வெள்ளை


தாளில்


குறையென்ற


கரும்


புள்ளியே


கவனிக்கப்படும்




மரியாதை


மட்டும்


கேட்காமலே


கொடுக்கும்


போது


கேட்காமலே


கிடைக்கும்…




வீழ்ந்தவன்


வீழ்ந்து


கொண்டேவும்


வாழ்ந்தவன்


வாழ்ந்து


கொண்டேவும்


ஒருபோதும்


இருப்பதில்லை




உயர்ந்தவன்


உதவி


கேட்பதும்


இல்லை


தாழ்ந்தவன்


உதவி


செய்வதும்


இல்லை




அனுபவங்கள்


தாய் பட்ட


வேதனையை


சொல்லிவிட்டு


போகும்


தந்தை பட்ட


சோதனையை


சொல்லிக்


கொண்டே


போகும்




உலகின்


எல்லா


சுகமும்


பிச்சை


கேட்கிறது


தாய்த்


தமிழின்


முன்னே…




கோவில்


வாசலில்


காதலித்து


ஓடிபோன


காலணிகள்


காதறுக்க


வருகிறது


காவல்


நிலைய


வாசலுக்கு…




உன்


முன்னாள்


காதலியின்


பின்னால்


ஒருவன் 


போனால்


பக்குவ


புன்னகை


தன்னால்


வரும்




கணினிக் கடலில்


காகிதப் பிரியன்


தனிமையில் 


செல்லும்


நேரம் - அது


காதலை விடவும்


சாரம்




செவ்விதழும்


பசுமேனியும்


சூடிய


அவள்


முள்ளென்ற


கற்பால்


அதை


மூடிக்


கொண்டாள்




அந்தரங்க


நண்பர்களை


நம்பினேன்


என்


அந்தரங்கள்


அனைத்துமே


அம்பலங்கள்


ஆனதே…




கணநேர


கவிஞருக்கு


மறதி


அதிகம்




தன்


அடக்கத்தில்


வெல்பவன்


தனிமையில்


தோற்று 


போகிறான்…




அடுத்தவரின்


துன்பம்


உங்களின்


பாவத்தை


துடைப்பதற்கான


சந்தர்ப்பம்




வாழ்க்கை


என்னும்


போட்டியில்


வெற்றியும்


தோல்வியும்


விடாது


வென்று


கொண்டே


இருக்கும்




பொய்


சொல்வதை


நிறுத்தி


விட்டேன்


சொன்ன


பொய்களை


நிறுத்த


முடியாமல்




உறங்குவது


போலும்


இறப்பு


உறங்கி


விழிப்பது


போலும்


பிறப்பு




அவளோடு


நின்று


பேசிய


இடங்கள்


யாவும்


இன்று


நினைவிடம்


ஆகியது




உன்


எழுத்திற்கு


எதிரி


பிறந்தால்


நீயே


எழுத்தாளர்


ஆவாய்




அறிவு வேண்டுமேல்


பிரிவு வேண்டும்


அறிந்தேன்


யானிந்த


உண்மை




கடை உலக


நேரத்திலும்


நினைத்து 


பார்த்தால்,


எல்லாம் நேற்றே


நடந்தவை தான்!




காண தெரிந்த


கண்களுக்கு


தான்


கலங்கவும்


தெரிகிறது!


கண்டேன்


கலங்குகிறேன்….




ஓராண்


'அவர்'


ஆகலாம்,


அவ்வாண்


'ஆணவர்'


ஆகக்கூடாது




மூன்று வேளையும்


உண்பவன் கூட


தமக்கு துன்பம்


இருப்பதாய்


நினைக்கிறான்




வழியிருந்தும்


படிக்க


வருந்துபவன்


உண்மையிலே


வருந்தக்கூடியவன்




தன் அறிவை


மறைக்கத்


தெரியாதவன்


அறிவாளியாக


இருக்க 


முடியாது




அறத்தை


கொடுக்காது


பணத்தை


கொடுக்கும்


படிப்பை


பெறுவதால்


பலன்


இல்லை




மனிதன்


ஏன்


கல்லானான்


உடல்


கல்லாய்


போன


கடவுள்களாலே





-தீசன்



2 கருத்துகள்

  1. இதில் சில பலமுறை படித்தாலும் தெவிட்டுவதில்லை..!

    பல,, ஒருமுறை படித்தாலும் பலமாய் உரைக்கிறது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை