அண்மை

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் ஆறு நெஞ்சுக்கு நிம்மதி நூல் விமர்சனம்

 நெஞ்சுக்கு நிம்மதி

அதுவே ஆண்டவன் சந்நிதி என்று அர்த்தமுள்ள இந்துமதத்தின் பாகம் ஆறு நம்மை வரவேற்கிறது. பகுத்தறிவு ஆட்களுக்கு இவ்வரி முகத்தை கோண வைக்கும் அதனாலே கண்ணதாசன் அவர்கள் இந்த நெஞ்சுக்கு நிம்மதி பாகத்தில் பதினொன்று அத்தியாயங்களை கொடுத்து அனைவரது மனநிலையையும் நிம்மதியாக்குகிறார்.

arthamull indhu matham


லௌகீக மனிதன் எப்படி நிம்மதியை இழப்பான் என்று சுருக்கமாக கூறி நிம்மதியை அடையும் வழிகளை வரிசைபடுத்துகிறார் கவிஞர் அவர்கள்.


அந்த ஒவ்வொரு அத்தியாயக் கருத்துகளிலும் ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டுமே என் எழுத்துகளில் உங்களுக்கு சொல்ல முயல்கிறேன்.


சுகமான சங்கீதம் சுகமான பாடலுடன் சுகமான ஆடல் கலந்தால் நெஞ்சுக்கு நிம்மதி


சேவை அதும் பலனில்லா சேவை, விளம்பரமில்லா சேவை, தன்னலமில்லா சேவை மநனதிற்கு நிம்மதி தரும்


பக்தி, ஆண்டவனிடம் நிம்மதி இலவசமாக கிடைக்கிறது. புறந்தூய்மை நீரால் அமையும் ஆனால் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் அதிலே நிம்மதி உண்டு.


நம்பிக்கையில் நிம்மதி, நம்பிக்கையின் மேலுள்ள நம்பிக்கை நிம்மதியோடு உயர்வும் தரும்


இல்லறத்தில் நிம்மதி, கணவன் மனைவியின் விட்டுகொடுக்கும் தன்மை மட்டுமல்லாது அன்பாலும் பொய் சினத்தாலும் ஊடலோடும் கூடலோடும் இருப்பதே நிம்மதி தான்


படிப்பதில் நிம்மதி, இதை சொல்ல வேண்டியதில்லை படித்தே தெரிந்து கொள்ளுங்கள்


ஆரோக்கியத்தில் நிம்மதி, உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் கேடு விளைவிக்காத எந்த ஒரு உணவும் நிம்மதி தரும்


தூக்கமே சிறந்த நிம்மதி, கனவில்லாமல் தூங்கி கழித்து விழித்து பார், அந்த நாளின் சிறப்பே நிம்மதி தான்


பிறப்பு பெற்றோரின் படைப்பு, இறப்பு இறைவனின் அழைப்பு, இடையில் கொஞ்சம் நடிப்பு இப்படி நினைப்பதே நிம்மதியை வாரி வழங்கிடும்


முழுமையான கருத்துகளை தெரிந்துகொள்ள அர்த்தமுள்ள இந்து மதத்தினை வாங்கிப் படிக்கவும்.



பத்து பாகம் கொண்ட முழு தொகுப்பை

மலிவு விலையில் பெற்றிடுங்கள்



அர்த்தமுள்ள இந்து மதம் எனும் இந்த பூதாகரமான தோற்றமுள்ள பெரிய புத்தகத்தை எங்களாலெல்லாம் எப்படி படிக்க முடியும் என்ற சிந்தனை பலருக்கு உள்ளது.


அப்படி இத்தனை பெரிய புத்தகத்தினை படிக்க முடியாது என்று நினைப்போர்கள், அவசியம் நாலாம் பாகமான துன்பங்களிலிருந்து விடுதலையும் ஆறாம் பாகமான நெஞ்சுக்கு நிம்மதியையும் மட்டுமாவது படியுங்கள். இதன் விலை ரூபாய் 16 மட்டும் தான். ஆனால் இரண்டு கோடி கொடுத்தாலும் இந்த புத்தகங்கள் உதவது போல் வேறு யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள் என்பது என் உறுதியான கருத்து.

இறுதி அத்தியாயத்தில் காஞ்சி மகாப்பெரியவாவின் கைவண்ணம் நமக்கு துணை புரிகிறது. காஞ்சி பெரியவர்கள் கஷ்டத்தினை பற்றி மிக அழகாக விளக்குகிறார்.

ஓர் ஏழையிடம் கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். அந்த ஏழை, பணக்காரனுக்கு கஷ்டம் இருக்காது என்றே நினைப்பான். ஆனால் பணக்காரனிடம் சென்று கேட்டால் தான் தெரியும். ஏழையைக் காட்டிலும் அவனது கஷ்டங்கள் மிக கொடுமையானதாய் இருக்கும். 


ஏழையின் கஷ்டம் தரையிலிருந்து விழுவது போல, பணக்காரனின் கஷ்டம் மாடியிலிருந்நு விழுவது போலாகும். அதனால் கஷ்டம் என்பது அனைவருக்கும் இருப்பதே. அந்த கஷ்டங்களிலிருந்து விலகுவதற்கான வழிகளையே நெஞ்சுக்கு நிம்மதி எனும் இப்பாகம் நமக்கு உணர்த்துகிறது. கஷ்டங்களை தவிர்ப்பதற்காக இப்புத்தகம் உங்களை சந்நியாசி ஆக்கிவிடாது. குடும்பஸ்தனாக இருக்கும் போதே, லௌகீக மனிதனாக இருக்கும் போதே எப்படி கஷ்டங்களை தவிர்ப்பது என்பதை விளக்குவதே இப்பாகத்தின் முக்கிய கருத்தாகும்.


-குகன்

கருத்துரையிடுக

புதியது பழையவை