அண்மை

தேவதையைக் கண்டேன் - ஜெ.மாரிமுத்து

தேவதையைக் கண்டேன் - ஜெ.மாரிமுத்து

angel-story-tamil


எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் இருந்தார். அவரிடம் அவரது உறவினர் ஒருவர் தனது பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கும்படி கூறினார். அதற்கு அவர் 'எனக்கு ஒரு நல்ல பையனை தெரியும் அவருக்கு மணம் முடிக்கலாம்' என்று கூறினார். அவர் சொன்னபடியே நல்ல முறையில் திருமணமும் நடந்து முடிந்தது.

சிலமாதங்கள் சென்றபின் பெண் வீட்டில் செலவு செய்து மாப்பிள்ளையை வெளிநாடு அனுப்பி வைத்தார்கள். வெளிநாடு சென்ற அவர் தனது தவறான நடத்தையால் பணம் அனுப்பாமல் கடிதமும் போடாமல் எங்கிருக்கிறார் என தெரியாத நிலை ஏற்பட்டது. பெண் வீட்டுக்காரர்கள் நீங்கள் சொல்லித் தானே அந்த பையனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம், இன்று அந்தப் பெண்ணுக்கு யார் பொறுப்பு? என்று அந்தப் பெண்மணியிடம் முறையிட்டார்கள். நல்ல இடம் என்று சொல்லிவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த மணமான பெண்ணையும் ஒரு பெண் குழந்தையும் தன் வீட்டில் சேர்த்து கொண்டார். அவர்களுக்கு உடை கொடுத்து, உணவு கொடுத்து, இருக்க இடம் கொடுத்து, அந்த பெண் குழந்தையை படிக்கவும் வைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்துவிட்டார் அந்த பெண்மணி. ப்ராமிசரி நோட்டில் கையெழுத்து போட்டவர்களே அது தனது கையெழுத்து இல்லை என்று சாதிக்கின்ற இந்த காலத்தில் ஒரு வாய் வார்த்தைக்காக அவர் செய்த தியாகம் அவரை ஒரு தேவதையாக எண்ணி என்னை எழுத வைத்தது.


ஜெ.மாரிமுத்து 


தினத்தந்தி நடத்தும் தேவதை இதழின் 'தேவதையைக் கண்டேன்' போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை இது.


நீங்கள் சந்தித்த உங்களது வாழ்வின் முக்கியமான பெண்மணியைப் பற்றி மறக்க முடியாத அந்த நிகழ்வை விவரித்து எழுதுவதே இப்போட்டியின் நோக்கமாகும்.


உங்களது கதைகளை புகழ்ப் பெற்ற பத்திரிகைக்களில் இடம்பெறச் செய்வது எப்படி என முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன் அதைப் பார்க்க இங்கே தொடவும்


இணையத்தில் கதை மற்றும் கவிதை பதிவிடுவதன் மூலம் பணம் பெறுவதைப் பற்றியும் முன்பே கூறியுள்ளேன். அதைப் பார்க்க இங்கே தொடவும்


உங்களது கதைகளும் கட்டுரைகளும் தென்றலில் இடம்பெற askthendral@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்


முக்கியமான ஒரு செய்தி, நம் இதழுக்கு பலரால் பலவிதத்தில் ஊக்கம் கிடைக்கிறது. அவர்களுக்கு என் நன்றிகள். பணத்தை பொருட்டாக நினைக்காது உதவி செய்யும் மனதுடையோரும் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்பதை இன்றுணர்ந்தேன்.


அவரது உண்மை பெயர் எனக்கு தெரியவில்லை. வேள்பாரி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதழில் வெளியாகும் படைப்புகளை அவரது குழுவில் பதிவிடும் படி நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். உதவிக்கு உதவி எனும் அடிப்படையில் அவரிடம் சில விவரங்களையும் கேட்டேன்.


தன்னைக் கூட அடையாளப் படுத்திக் கொள்ளாத அந்நபர். எனக்கு பணமெல்லாம் வேண்டாமெனக் கூறி அவரால் முடிந்த உதவியை நமக்கு செய்தார். அவருக்கு தினத்தென்றலின் சார்பாக என் பணிவுமிக்க நன்றிகள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை