அண்மை

திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் அஜந்தா

திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவர்களால் இந்த மாதம் முதல் வாரத்தில் வரையப்பட்ட கல்லூரி சுவரோவியம் அந்த வழியே செல்லும் பலரையும் ஈர்க்கிறது. நிழலுக்கு ஒதுங்குவோர் கூட ஓவியத்தை பார்த்து, உடனே பாக்கெட்டிலிருந்து தன் மொபைலை எடுக்கிறார்கள். காகிதத்தில் ஓவியம் வரைவதே கடினந்தான், தனிப்பட்ட முறையில் ஓவியத்தை கற்காத மாணவ மாணவிகள் இத்தனை அழகாக சுவரோவியம் தீட்டியது, அவர்களின் மறைந்திருக்கும் திறனை காட்டுகிறது. இதோ அந்த கைவண்ணங்கள்,

தமிழ்த்துறை









தமிழ்த்துறை மாணவ மாணவிகளின் ஓவியங்கள் கிராமிய கலைகளையும் இயற்கை வனப்புகளையும் சித்தரிக்கும் வண்ணம் எழில்மிகு வரையப்பட்டுள்ளது. உழுது கொண்டிருக்கும் விவசாயி, சிலம்பம் செய்யும் வீரர்கள், கரகம் ஏந்தும் பெண்டீர் போன்ற ஓவியங்கள் கண்களை கவரும் வண்ண வேலைபாடுடன் உள்ளது, ஆதிக்குடி ஓவியத்தில் ஈட்டியையும் கம்பையும் இணைக்கும் சணல் கயிறு, அதை ஓவியமா? என்று ஒருநிமிடம் நம்மை சிந்திக்க வைக்கிறது. தொழிற்சாலையினுள் இருக்கும் இயற்கையை பிளந்து பார்க்கும் கற்பனை அபாரம்.


ஆங்கிலத்துறை










ஆங்கிலத்துறையினால் வரையப்பட்ட ஓவியங்கள் நேர்த்தியான கலை நயத்தோடு மிளிர்கிறது. சோழ வீரர்களின் போர் காட்சியும் அதன் பின்னே தலைவனும் தலைவியும் தன் குழந்தையை பேணும் காட்சியும் அஜந்தா ஓவியங்களை நினைவுப்படுத்துகிறது. அதனை தாண்டினால் சிம்மத்தோற்றத்தோடு கூடிய மாமன்னர் ராஜராஜ சோழன் தான் அழகுற கட்டிய பெருவுடையார் கோவிலை மார்
நிமிர்த்தி காண்கிறார். 


கணிதத்துறை






கணிதத்தில் என்ன ஓவியம் என்று நாம் நினைப்போம். ஆனால் கணிதத்தையே ஓவியமாக்கிவிட்டார்கள் திரு.வி.க கல்லூரி மாணவர்கள். அதுவும் அந்த கடிகார மணி கணக்கு, பார்ப்போரை சிந்திக்கச்செய்கிறது. கடிகாரத்தில் உள்ள பன்னிரண்டு எண்ணுக்கும் 'ஒன்பது' என்ற ஒரே எண்னணைக் கொண்டு நமக்கு புதிர் போட்டு புரிய வைக்கும் ஓவியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

தாவரவியல்






இவ்வுலகமே இயற்கையால் ஆனது, அந்த இயற்கையை காப்பதே உலகை காக்கும். தாவரவியல் மாணவ மணிகள் அதை சுவரோவியம் மூலம் காக்க முனைந்து விட்டனர். சோகமாலும் உண்மை என்ற ஓவியம் புவி நேசர்கள் அனைவருக்கும் மனங்கலங்க செய்யும்.

விலங்கியல்




இவ்வுலகம் இயற்கையால் ஆனாலும் இயற்கை விலங்குகளாலே செழிக்கிறது. அந்த விலங்கினங்களை காக்காமல் எப்படி உலகை காப்பது? விலங்கியல் துறை மாணவர்களின் ஓவியங்களை அதை சொல்கிறது. அதும் ஒரு சிறுமி தன் நாயின் தோளில் கை போட்டு அமர்ந்திருக்கும் படமானது என் குழந்தைப்பருவ காலங்களை நினைவூட்டுகிறது.

வேதியியல்







இயற்பியல்




இயற்பியல் துறை மாணவர்கள் சிந்தனையில் மட்டுமல்ல சித்திரத்திலும் உயர்ந்து விட்டார்கள் ஐயா அப்துல் கலாமை வரைந்து, நியூட்டனின் புவியீர்ப்பு விசையும் ஐன்ஸ்டீனின் திருவாசகமும் பிரபஞ்ச ஓட்டமும் விண்ணில் பாயும் ராக்கெட்டும் துறையின் அறிவழகை சித்திரம் மூலமே சொல்லிவிட்டது.

வரலாற்றுத்துறை





வரலாற்று துறை ஓவியங்களில் பெரும்பாலான படங்களை தர்மா என்பவர் வரைந்துள்ளார். நடன அழகியின் ஆடையில் இருக்கும் பல்வேறுபட்ட அலங்கார அமைப்பு உயர்தரமான படைப்பு, அந்த பெண்ணின் கூந்தல் எனக்கு இயல்பான அடர்த்தியை வெளிக்காட்டுகிறது. ஆண் மயிலும் ஆரூர் தேரும் ஓவியத்திலே அசைந்தாடுகிறது.

வணிகவியல்






வணிகவியல் மாணவர்களின் ஓவியங்கள் போற்றுதலுக்குரியது. திருக்குறளை கூறிவிட்டு பின் வர்த்தகத்தை கூறியது, வள்ளுவர் காலத்திற்கு முன்னே வர்த்தக கோட்பாடு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது, அதன் பின்னே பண்டமாற்றுமுறையும் பண முறையும் குறிப்பிட்டது சிறப்பு.

பொருளாதாரவியல்






பொருளாதாரவியல் மாணவர்கள் உழவே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதற்காக அதனை குறிப்பிட்டது நூறு சதவீதம் உண்மையாகும். சிறுசேமிப்பிலிருந்து GDP வரை பொருளாதார மாணவர்கள் நம் நாட்டின் நிலையை அழகுற விளக்கிவிட்டார்கள்.

VISCOM and JMC





எனக்கு இந்த திறன் இல்லாததாலே நான் எடுத்த படங்கள் கலை இழந்ததாக தெரிகிறது. காட்சித் தொடர்பியல் மற்றும் இதழியல் மாணவர்கள் இதில் கைதேர்ந்தவர்கள். நாங்கள் ஓவியத்திலும் சளைத்தோர் இல்லை என்பதை நிறுபித்துவிட்டார்கள். ஒரு பெண் புகைப்படம் எடுப்பது போன்ற அந்த ஓவியம் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதிலிருக்கும் இந்திய அமைப்பு குறையின்றி உள்ளது. உழைப்பாளர்களாலே உலகம் நிலை பெறுகிறது என்பதை வெளிக்கொணரும் வகையில் அக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

BBA






கணினி அறிவியல்







நன்றியுடன் தீசன்

1 கருத்துகள்

புதியது பழையவை