அண்மை

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் ஏழு சுகமான சிந்தனை நூல் விமர்சனம்

காலங்களே தருகின்றன,அவையே பறிக்கின்றன; காலங்களே பிரிக்கப் செய்கின்றன;அவையே அழவும் வைக்கின்றன.

காலம் பார்த்துக் காரியம் செய்தால்,பூமியையே விலைக்கு வாங்கலாம். காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள் அடங்கியுள்ளது - கண்ணதாசன்

book 7


பெரும்பாலும் சிலருக்கு எதிர்கால சிந்தனை, இளைஞனுக்கு எல்லாம் தமக்கு தான், எல்லாம் நாம் தான் எனும் சிந்தனை, சிலருக்கு இது நடக்குமா என்ற கவலையான சிந்தனை. இது போன்ற சிந்தனைகளை சுகமாக ஆக்க வழி தரும்  "அர்த்தமுள்ள இந்துமதம்" ஏழாம் பாகத்தின் 'சுகமான சிந்தனைகள்' எனும் புத்தகத்தின் விமர்சனத்தை தற்போது காண்போம்.


இளமையின் சிந்தனை. அது இந்த அண்டசராசரத்தை விட எல்லை கடந்தது. அது இரத்த ஓட்டத்தின் துடிப்பு.


உனக்கு என்ன வேண்டும்? என இளமையிடம் கேட்டோமானால் எல்லாம் வேண்டும்! என்கிறது.  இவ்வாறான சிந்தனை இயல்பே, ஆனால் காலம் செல்ல செல்ல சில அனுபவங்களும் சில அடிகளும் விழுந்த பிற்பாடு எழுந்து நிற்க ஆள் தேவைப்படுகிறது. அதற்கு உதவும் வகையில், அந்த இளமையின் சிந்தனைகளுக்கு தன்  சிந்தனை மூலம் தெளிவு செய்கிறார் கவிஞர் அவர்கள்.


இறைவனை பற்றிய சிந்தனை ஒரு சுகமானது.


ஆணவம் போகிக்கு வரும். யோகிக்கு வராது என்கிறார். அதற்கு ஒரு கதையும் தருகிறார்.


கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.


அந்த மிராசுதார் ஒரு பெரிய நஞ்சை நிலப்பரப்பை கடவுளிடம் காட்டி, இவையெல்லாம் என்னுடையவை என்றார்.


தன்னுடைய சொத்துக்களை ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டி, இவையெல்லாம் எனக்கு சொந்தம் என்கிறார்.


கடவுள் அமைதியாக அவருடைய உடம்பைச் சுட்டிக் காட்டி "இது எனக்கு சொந்தம்" என்றார்.


எவ்வளவு பெரிய ஆணவக்காரனும் இறுதியில், இறைவன் என்னும் நெருப்புக்கே சொந்தமாகி விடுகிறான். என்ற ஆணவத்தை சுடும் இக்கதையை அத்தியாயம் இரண்டில் தருகிறார்.


இறைவனை நெருங்கிவிட்ட ஞானிக்கு அரசனும் துரும்பாகி விடுகிறான்.


நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் எனும் தைரியம் வந்து விடுகிறது


காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள். அவை வீணடிக்கப்பட்டு விட்டால் திரும்பக் கிடைப்பதில்லை.


பயனுள்ள வகையில் காலங்களை செலவலிக்க அத்தியாயம் மூன்றில் தனது வாழ்க்கை அனுபவம் மூலம் நம்மை காலப்பயணம் செய்ய வைக்கிறார்.


நாம் தவறாக உணர்ந்து கொள்ளும் பொருள்களை விளக்கி தருகிறார்.


போகி நாள் என்பதை போக்கி நாள் என்கிறார்கள்.


அதாவது வீட்டில் உள்ள கழிவுப் பொருட்களை, பழையனவற்றை போக்கும் நாள் என்கிறார்கள்.


எப்போதும் சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக எந்த காலத்திலும் கொண்டாடியதில்லை.


போகி என்ற வார்த்தை தெளிவாகவே இருக்கிறது.


விளைச்சல் என்பது. போகம் எனப்படும்.


போகத்துக்குரிய விழா போகி விழா என இடம் நோக்கி பொருள் கொள்ளுவதையையும் தெளிவாக விளக்குக்கி இருக்கிறார் இந்த ஏழாம் பாகத்தில்.

நான் இதில் முதல் மூன்று அத்தியாய கருத்தில் இருந்து சிலவற்றை மேற்கோள் காட்டி இருக்கிறேன். ஆனால் இந்த சுகமான சிந்தனை எனும் ஏழாம் பாகம் பத்து அதியாயத்தை கொண்டு பல்வேறு கருத்துக்களைக் கொண்டு மிளிர்கிறது. அந்த ஒளியில் சுகமான சிந்தனை அடையும் பாதையினை கண்டு கொள்ளும் படி அன்புடன் உங்களை வேண்டுகிறேன்.


கருத்துரையிடுக

புதியது பழையவை