அண்மை

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் எட்டு போகம் ரோகம் யோகம் நூல் விமர்சனம்

பரலோக வாழ்க்கைக்கும் இகலோக வாழ்க்கைக்கும் இடையேயுள்ள தாரதம்மியங்களை குறிப்பிட்டு உலகத்திற்கு சொல்லாவிட்டால் என் கடைசிகாலம்

பெருமைக்குரியதாக ஆகிவிடாதா....?

arthamulla indhu matham


மனிதனை கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் அற்புத நூலான அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலின் விமர்சனத்தை கண்டு வருகிறோம் .தற்போது எட்டாம் பாகமான 'போகம் ரோகம் யோகம்' எனும் எட்டாம் பாகத்தின் விமர்சனத்தை காண்போம்


போகம் என்றால் விளைவு. விளைவு என்பது இன்பத்தை குறிக்கும்.


ரோகம் என்றால் நோய். நோய் என்பது துன்பத்தை குறிக்கும்.


யோகம் என்றால் போகம், ரோகம் இவை இரண்டையும் கடந்து கடவுளை மனிதன் அடைந்து விட்ட நிலை.


போகதத்தை கண்டு பின் ரோகத்தில் வருத்தமுற்று யோகம் நிலையை அடைந்து வாழ்ந்தவர் கண்ணதாசன் என்பது இந்த 'போகம் ரோகம் யோகம்' எனும் பாகத்தில் அவரது வாழ்க்கை அனுபவங்கள் சுட்டிக்காட்டுகிறது.


ஆசை எனும் போகம். ஆசை இல்லாத மனிதனே கிடையாது.


ஆசையை மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்ற மூன்று விதமாகத்தான் நம் ஞானிகள் வகுத்தார்கள் ஆனால் காலம் அதை நான்காக ஆக்கியது அதில் ஒன்று தான் புகழ் ஆசை.


அப்போது கவிஞர்கள் நான் கவிஞன் என்று சொல்லி தெரியவில்லை. ஏனெனில் நம் கவிதைகளே மக்களிடையேயும் மற்றவறிடையேயும் சென்று உணர்த்த வேண்டும் என்பதே அவர்களது தன்னடக்கம்.


இப்போது உள்ளவர்களோ நான் அவன், நான் இவன், நான் இப்படிபட்டவன் என்று சொல்லித் திரிகிறார்கள் புகழாசையால். தனது அனுபவம் மூலம் அவருக்கு அந்த அறியாமையை விளக்க செய்கிறார் இந்த பாகத்தில்.


குழந்தைப் பருவத்திலிருந்து ஒருவனுக்கு ஆசை எவ்வாறாக தழைக்கிறது  என்பதை கண்ணதாசன் அவர்கள் இந்த பாகத்தில் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் போகத்தை பற்றி ஒரு சில விளக்கங்களை புராண இதிகாச கதையின் மூலமும் தான் அடைந்த வாழ்க்கை அனுபவம் மூலமும் இந்த பாகத்தில் தருகிறார்.


மனைவி என்றும் மக்கள் என்றும் சுற்றம் என்றும் வளர்த்துக்கொள்வது ஒரு போகம்.


அதன் காரணமாக வந்தடையும் துன்பம் அனைத்தும் ரோகம்.


இவற்றை விட்டு ஓட முடிந்தால் அதுவே யோகம்.


என்று அத்தியாயம் இரண்டில் தனது கூற்றை தருகிறார்.


அது இந்த காலத்தில் முடியாது.அதனால் இந்த லௌகீக வாழ்க்கையில் இந்த யோக நிலையை அடைவதற்கு வழியையும் இந்த பாகத்தின் முழுமையை படித்தால் நமக்கு புரியும் வகையில் பெரும் ஞான கருத்தை எளிதாக இந்த பாகத்தினில் தருகிறார் கண்ணதாசன்.


யோகம் கை வந்த நம் காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒருவர் என்றால் அது காஞ்சிப் பெரியவர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.


ஏன்னெனில், அவருக்கு பெண்ணை தொட்டாலும் பேப்பரை தொடுவது போன்றதே.

மண் வழியையே இறைவனின் பாதையாக நினைப்பவர். பொன்னை கல்லாக நினைப்பவர்.

நான் என்றும் எனது என்றும் எண்ணம் இல்லாதவர். அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ இருந்ததில்லை.

மாறாக அவர் மத நெறியராக மட்டும் இருந்தவர்‌

அவர் அரசியல் வில்லங்கங்களில் மாட்டிக் கொண்டதில்லை. பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து வந்திருக்கிறார்.


அதோ, அவர் நடந்து போகிறார். அவரது காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.


இப்படிப்பட்ட ஒருவரை மனதார நினைத்தால் இந்த யோகம் கைகூடும் என்று கூறுகிறார் கண்ணதாசன்.

இந்த 'போகம் ரோகம் யோகம்' எனும் இந்த பாகத்தினை வாசகர் அனைவரும் படித்தறிந்து. யோக நிலையடைய பணிகிறேன்.


-குகன்

கருத்துரையிடுக

புதியது பழையவை