அண்மை

திரைப்படங்களால் விளையும் தீமைகள்

திரை உலகத்தினால் ஏற்படும் நன்மை தீமைகளையே இவ்வார கட்டுரையில் கூற உள்ளேன்.



இக்கட்டுரை சிலரது மனதை புண்படுத்தலாம், அவர்கள் என்னை மன்னிக்கும் படி இப்போதே கேட்டுக்கொள்கிறேன்.

cinema


தமிழ்த் திரையுலகம் 8 கோடி பேரால் கொண்டாட படுகிற ஒன்றாகவே உள்ளது. எத்தனையோ சமூக கருத்துக்களை இந்த உலகில் பலருக்கு உணர்த்தும் வழியில் இது தலை சிறந்து விளங்குகிறது. இதன் மூலம் பல முக்கியமான வரலாற்றுப் பதிவுகள், இலக்கியம், பக்தி பாடல்கள் என பல்வேறு விதமான செய்திகளை மக்களின் மனதில் பதிய வைக்க இது மிகவும் சுலபமான தளமாகவும் உள்ளது.

மேலும் மக்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும் உதவியாக உள்ளது. சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் பழங்கால இலக்கியங்களையும், சுதந்திர போராட்ட வீரர்களின் வீரதீர செயல்களின் வாழ்க்கை வரலாற்றையும், காப்பியங்களையும், பழங்கால வாழ்க்கை முறையையும் நமக்கு இப்போதும் பார்த்து தெரிந்து உணர்ந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது. 

நாம் வாழ்வில் சந்திக்கின்ற குறைகளை திருத்தவோ, தெரியபடுத்தவோ விழிப்புணர்வு ஏற்படுத்தவோ சுலபமான வழி என்றால் அது திரைபடம் தான்.

சினிமா என்பது 3 மணி நேர பொழுதுபோக்கு. படத்தில் காதல், அதிரடி, நகைச்சுவை, திகில், மர்மம் போன்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை நல்ல செயல்களின் வாயிலாக நல்ல காட்சி நடையிலே பதிவிடலாமே. அது மக்களுக்கும் பயன் தரும், தயாரிப்புக்கும் நஷ்டம் தராது. இப்போது இந்த 2k காலத்தில் தான் படத்தில் கதை இருக்கிறதா என்று பார்க்காமல், யார்‌ படத்தில் இருக்கிறார் என்பதையே முக்கியமாக தேடிப் பார்க்கிறார்கள்.

பல விதங்களில் திரையுலகம் நமக்கு பயன்பட்டாலும் அழகு இருந்தால் அதில் ஆபத்தும் சேர்ந்து இருக்கும் என்பது போல இதிலும் அவ்விதமே இருக்கிறது.

இந்த கால கட்டத்து  திரைப்படங்கள் பல தீய எண்ணங்களை மனதில் பதிய‌ வைக்கிறது. எந்த ஒரு படத்திலும் கதாநாயகனையே மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அதே போல அந்த கதாநாயகன் எது கூறினாலும் அதை செய்ய தயாராக தமிழகத்தில் பல கோடிக்கணக்கான ரசிகப் பட்டாளம் காத்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அந்த கதாநாயகன் சிகிரெட் பிடிப்பது போல காட்சிகளிலும், பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற காட்சிகளிலும், குடித்து விட்டு 'என்னா வாழ்க்கை' என்று புலம்புவது போன்ற திரைப்படங்களிலும் நடிப்பதால் என்ன என்ன விளைவுகள் வரும் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. பணம் பலரது கண்களை மட்டுமல்ல மூளையையும் மறைத்துவிடுகிறது.

தான் என்ன செய்தாலும் அதை வரவேற்கும் மக்கள் இருக்கும்‌ வரை இது போன்ற‌ குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். இந்த தவறுக்கு பாதி காரணம், நிதர்சனம் அறியாத மக்கள் தான். நான் முன்பு கூறியதைப் போல நடிகர்கள் என்ன செய்தாலும் அதை நாம் வரவேற்கவோ காப்பி அடிக்கவோ கூடாது. நல்லவை கூறினால் அதன் படி நடப்பதில் தவறில்லை, பலர் ரசிப்பதர்காக அவர் ஒன்று செய்ய, அவர் செய்ததையே நாம் செய்து படுக்கையில் கிடக்க, இதை கண்டு தாய் தந்தை வேதனை அடைய, இதெல்லாம் தேவையா? தலைவன் என்ன செய்கிறானோ அதையே பித்து பிடித்த ரசிகர்கள் செய்வார்கள் அவர்களுக்கு நன்மை தீமையை ஆய்ந்து பார்க்க தெரியாது. இதை படிக்கும் போது சிலருக்கு கோவம் வந்தாலும் இதுவே உண்மை.

பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் பேர்போன மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இப்போது வருகின்ற சினிமாவினைப் பார்த்து பெண்களும் பல வழிகளில் கெட்டு சீரழிந்து வருகின்றனர். நாமெல்லாம் கண் கூடாக பார்க்கிறோம் உடையில் மாற்றம், சிகரெட்‌ பிடிப்பது, சரக்கடிப்பது, பலரிடம் பழக்கம் வைத்துக் கொள்ளவது, திருமணம் செய்யாமலே ஊராருக்கு தெரியாமல் ஒரே அறையில் வாழ்வது, அச்சமின்றி கணவன் இருக்கும் போதே காதலன் வைத்துக் கொள்வது போன்ற கேவலமான மற்றும் அறிவு கெட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு ஆண்களின் தவறும் இல்லாமல் இல்லை.

சிறுவர்கள் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து நிறைய நல்ல விசயங்களை தெரிந்து கொள்கிறார்கள். அப்பா,‌ தாத்தா வுக்கு‌ கூட தெரியாத நல்ல கருத்துக்களை, இந்த கால சிறுவர்கள் சுலபமாக தெரிந்து கொள்கிறார்கள். இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் சினிமாக்கள் தீமையும் தருகிறது என முன் கூறியதைப் போல சில தவறான காட்சிகள் சிறுவர் மனதில் நீங்காது பதிகிறது. அது சிறுவர்களின் உணர்வுகளைத் தூண்டி, தவறான பாதைக்கு செல்ல வழிவகை செய்கிறது. சிறுவர்கள் பசுமரத்தாணி என்பதை உணர்ந்து படத்தை தயாரித்தால் நல்லது.

நான் அனைத்து திரைபடத்தையும் குறை கூறவில்லை. இப்போதும் நல்ல திரைப்படங்கள் வெளிவருகிறது. நல்ல நடிப்பை வெளிக்காட்டும் படங்கள், நல்ல கதைகளம் கொண்டது, விவசாயத்தை ஊக்குவிப்பது, மாணவ அறிவியலை தூண்டுவது எனப் பல பல படங்கள் இருந்தாலும் இடையிடையே வரும் சில கமர்சியல் படங்கள் தமிழ் திரையுலகத்தில் அதிக கலெக்சனை செய்தாலும் கலாச்சாரத்தை கெடுத்துவிடுகிறது.

நல்ல கதைகளத்தை எதிர்ப்பார்ப்போம், அது போன்ற நன் மதிப்புடைய கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் திரைப்படங்களுக்கே வரவேற்ப்பளிப்போம்.


-திரைத்தமிழன்


மேலும் படிக்க

> திரைப்படத்தின் நன்மை தீமை கட்டுரை

கருத்துரையிடுக

புதியது பழையவை