அண்மை

Rudraksha Diksha அனைவரும் பெறலாம்

வரும் பதினொன்றாம் தேதி சைவர்களுக்கோர் பொன் நாள்.

உலகமே உறக்கத்தில் இருக்கும் போது, ஈசனுக்காக கண் விழிக்கும் திருநாள். அது தான் மகாசிவராத்திரி. இம்முறை அது மேலும் சிறப்படையப் போகிறது சற்குரு அவர்களால்.

adhi yogi


ஒவ்வொரு வருடமும் ஆதி சிவன் முன்னிலையில் இந்தியர்களோடு சற்குரு அவர்கள் மஹா சிவராத்திரியினை கொண்டாடுவது வழக்கமே. ஆனால் இம்முறை அங்கு வரமுடியாத இந்தியர்களுக்கும் ஈசனருள் கிடைக்க வழிவகை செய்யும் பொருட்டு அவரது இணையதளத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக ருத்திராட்சமும் இன்னும் சில பூசை பொருட்களும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

ருத்திராட்சம் என்பது வெறும் விதை மட்டுமல்ல, அது ஓர் ஆத்ம சக்தி, ஈசனின் கண்ணீர் துளி என்ற புதுமையான விளக்கத்தையும் அவர் தருகிறார். அதைப்பற்றிய தெளிவு தருவதே இக்கட்டுரையின் நோக்கம்.


என்னென்ன பொருட்கள் அவை?


மொத்தம் நான்கு பொருட்கள் அவை. முதலில் ஈசனின் கண்ணீர் துளியான ருத்திராட்சம். ஒருவர் மூன்று ருத்திராட்சம் வரையில் பெற்றுக்கொள்ளலாம். ருட்த்திராட்சங்கள் ரூபாய் நூறிலிருந்து இருநூற்று ஐம்பது வரை Amazon Flipkart போன்ற தளங்களில் விற்கப்படுகிறது. மிகுந்த போற்றுதலுக்குரியது அதனால் எவ்வளவு தேவையோ அதை மட்டும் பெற்றுக்கொள்ளவும்.




அடுத்து, அந்த ருத்திராட்சத்தினை கோர்க்க பயன்படுத்தபடும் கயிறு, ஒருவருக்கு ஒரு கயிறே தரப்படுகிறது, பெரும்பாலும் சைவர்கள் கருப்பு கயிறுகளே பயன்படுத்துவதால் இங்கும் கருப்பு நிறமே தரப்படுகிறது.




அடுத்து, ஈசனுக்கு அற்பணிக்கப்பட்ட திருநீறு




அடுத்து, ஆதியோகியினை தரிசனம் செய்ய விரும்புவோர்களுக்காக ஒரு ஆதியோகியாகிய ஈசனின் திருப்படம்




இது முற்றிலும் இலவசம் தானா? இல்லை ஏதும் டெலிவரி சார்ஜ் உண்டா?


ஈசன் மீது நாட்டம் கொண்ட சைவ அன்பர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் சற்குரு அவர்கள், இத்திருப்பணியை முற்றிலும் நூறு சதவீதம் இலவசமாகவே செய்கிறார். எந்த ஒரு டெலிவரி சார்ஜூம் கிடையாது. இந்த பொருட்களுக்கும் எந்தவொரு பணமும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. இப்பொருட்களை நீங்கள் வெளியே மலிவான விலையில் வாங்கினால் கூட குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயாவது செலவாகும். இங்கு இவைகள் இலவசமாக கிடைக்கிறதென்று இதைக் கொடுப்போருக்கு எந்த வித செலவும் ஆகாது என்று கருதாதீர்கள். அதனால் உங்களால் முடியுமானால், ஒரு பத்து ரூபாயாவது அவர்களுக்கு donation ஆக கொடுத்து, இப்பொருட்களை பெறலாம் என்பது என் கருத்து.


எப்படி இது வழங்கப்படுகிறது?


இப்பொருட்கள் நீங்கள் கொடுக்கப் போகிற முகவரிக்கு மார்ச் 11 க்கு பிறகு வந்தடையும். அதுவரையில் பொறுமை காக்குமாறு வேண்டுகிறேன். உங்களிடமிருந்து இந்த இணைய தளம் உங்களது பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளும். அதுவும் அந்த பொருட்களை அனுப்புவதற்காக மட்டுமே. ஈஷா மையத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர்கள் மட்டும் WhatsApp எண் கொடுங்கள். ஒரு எண்ணிலிருந்து ஒருமுறை மட்டுமே இந்த பொருட்களை பெற முடியும்.


பெயர், முகவரி, எண் ஆகியவற்றைக் கொடுப்பதால் என் தனியுரிமைக்கு பிரச்சனை வருமா?


சைவத் திருப்பணி செய்வோர்கள் யாருக்கும் கேடு செய்ய எண்ண மாட்டார்கள், இருந்தாலும் இந்த கணினி சூழ் உலகில் இவைகளை கவனிக்க வேண்டி உள்ளது. அவர்களது வலைதள பக்கத்தின் terms and conditions ஐ முழுவதுமாக படித்துப்பார்க்கும் போது உங்களது பெயர் முகவரி தொலைபேசி எண் ஆகியவை இந்த பொருட்களை உங்களுக்கு கொடுப்பதற்காகவே பெறப்படுகிறது என்பது தெளிவுற தெரிகிறது. அதனால் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. உங்களது தனியுரிமைக்கு எந்த வித பாதிப்பும் வராது.


இவைகளை நான் எப்படி பெறுவது?


சற்குரு அவர்களால் ஈஷா மையத்தின் மூலம் தரப்படுகின்ற இத்திவ்யதிருப்பொருட்களை இன்றே பெற்றிடுங்கள் Registrations closed


-ஈசதாசன்


கருத்துரையிடுக

புதியது பழையவை