அண்மை

கவிஞர் கண்ணதாசனின் 100 தத்துவங்கள் - Kannadasan Tamil Quotes

கண்ணதாசனின் 100 தத்துவங்கள்

kannadasan-tamil-quotes



ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்


வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா


அன்பு என்பது ஒரு வழிப்பாதை அல்ல, கொடுக்கலாம் வாங்க கூடாது என்பதற்கு


துன்பங்களை தூசுகள் ஆக்கிவிட வேண்டும் அப்போது விசாலமான இதயம் பிறக்கும் வெளிச்சம் மிகுந்த உலகம் தோன்றும் அழகு மிகுந்த வாழ்வு அமையும்


கஷ்டத்திலும் நேர்மையாக இரு நீ ஏமாற்றப் பட்டாலும் பிறரை ஏமாற்றாதே உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய் தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது


இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கி கொள்ளுங்கள் இருட்டையே வெளிச்சமாக்கி கொள்ளுங்கள் நஷ்டத்தையே இலாபம் ஆக்கிக்கொள்ளுங்கள் எது நேர்ந்தாலும் கவலைப்படாதீர்கள்


கீதையை தேவ நீதியாக நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மனித நீதியாக உன் கண் முன்னால் தெரியும்


நீ நல்ல தொழிலாளியாக இருந்தால் மோசமான முதலாளி கூட உன்னிடம் அன்பு காட்டுகிறான் கருணை காட்டுகிறான்


போவதை கண்டு கலங்காமல் வருவதை கண்டு மயங்காமல் பயந்து பயந்து நடுங்காமல் கோபத்தினாலே குதிக்காமல் இருக்கிறானோ அந்த மனிதன் தான் உறுதியான அறிவு வாய்ந்தவன்


எங்கு இருக்கிறான் கடவுள் என்று கேட்பவன் குருடன் உனது கண்களில் பார்வை இருந்தால் உனது இதயம் வஞ்சக நினைவுகளால் சூழ படாமல் இருந்தால் உனது கை விரல் நுனியிலே கடவுள் விளையாடுகிறான்


விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் உன் காலடி சுவடுகளில் ஜாக்கிரதையாக இரு அதன் பெயரை பகவத் கீதை கூறும் சுதர்மம்


கண்களிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் தெய்வம் மனிதர்களில் ஏதும் உண்டு அவர்களை தரிசிப்பதும் தெய்வதரிசனம் தான்


ஆண்டவன் கருணை வைத்துவிட்டால் யாருக்கு அள்ளிக் கொடுப்பான் என்று யார் சொல்ல முடியும்


பலமும் பலவீனமும் விலை நியாயத்தை பொறுத்ததே தவிர அசட்டுத் துணிச்சலும் இல்லை அஞ்சி அஞ்சி நடுங்குவதிலும்  இல்லை


எல்லாம் பொய்யே என்று சொல்வதன் மூலம் உன்னை தானே ஏமாற்றிக் கொள்ள முடியும் உலகத்தை அல்ல


ஆறு கிழக்கு நோக்கித்தான் போகும் என்றால் மேற்கே நோக்கி போகிறவன் எதிர்நீச்சல் போட்டு தான் ஆக வேண்டும்


நல்ல நேர்மையிலும் தன் வியர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா


நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான்


நாம் ஒன்றுமே இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவனுக்குத் தான் ஆண்டவனை தவிர ஒன்றுமே இல்லை என்ற தெளிவு வரும்


உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு


தெய்வ நம்பிக்கைக்கு அடிப்படை தன்னம்பிக்கை ஏதாவது இருக்கும் என்று நம்பி ஆராய்ச்சி செய்தவன் தான் புதுப்புது உண்மைகளைக் கண்டு பிடித்தான்


நான்கு பேர்கள் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும் மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை


எது இல்லாதது ஆகாதோ அது உண்மையாகாது எது உள்ளதோ அது இல்லாததாகாது உண்மையை அறிந்தவர்கள் இந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை உணர்வார்கள்


ஆசை இல்லாமல் எவன் செயல்களைச் செய்கிறானோ அவனுடைய செயல்கள் எல்லாம் ஞான நெருப்பில் புடம் போட்டு எடுக்கப்பட்டவை அவனையே ஞானி என்பார்கள்


மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்


துணிவு மிக்கவன் பாம்பு இருப்பதாக கருதுகிறான் பயம் கொண்டவன் ரப்பரை பாம்பாக கருதுகிறான்


துடுப்பில்லாத படகு கரை சேர்வதும் உண்டு பிரம்மாண்டமான இந்திர கப்பல்கள் மூழ்கிவிடுவதும் உண்டு ஈஸ்வரன் எதை எப்படி வகுத்து இருக்கிறான் என்பது யாருக்கு தெரியும்


துன்பத்தை சோதனை என்று ஏற்றுக் கொண்டுவிட்டால் உனக்கேன் வேதனை வரப்போகிறது அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள் காலம் கடந்தாவது அது நடந்துவிடும்


இன்பம் வந்தாலும் கேலி செய்கிறார்கள் துன்பம் வந்தாலும் கேலி செய்கிறார்கள்


கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்


மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு


சந்தர்ப்பம் கிடைப்பதால் திறமையற்றவன் உயர்ந்து விடுவதும் உண்டு அது கிடைக்காததால் திறமை உள்ளவன் இடம் தெரியாமல் போவதும் உண்டு


விளைந்து வரும் உள்மனதின் விருப்பங்களை துறந்தவன் தன்னில் தானாகி தனக்குள்ளே மகிழ்ச்சி பெற்றால் அப்போது அவன் நிலையான புத்தி உடையவன் என்று அழைக்கப்படுகிறார்


எதை விரும்புகிறாயோ அதை ஒரு கட்டத்தில் வெறுப்பாய் எதை வெறுக்கிறாய் அதை ஒரு கட்டத்தில் விரும்புவாய் ஆசனத்தில் உட்கார்ந்தாலும் தரையில் உட்கார்ந்தாலும் இரண்டும் அவன் கொடுத்ததே


எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்


உனது ஆற்றல் உண்மையிலேயே ஆற்றலாக இருக்க வேண்டுமானால் உண்மை உனக்கு உதவ வேண்டும்


உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்


ரோஜா ரோஜா தான் ஆனால் அது சாக்கடையில் விழுந்தால் அதற்கு ஒரு வாசம் பன்னீரில் விழுந்தால் வேறொரு வாசம்


வறண்டுபோன வைக்கோலைத் தின்று விட்டு வளமான பால் கொடுக்கும் பசு ஒரு மிருகம் அதற்கு அவ்வளவு பாசம் இருந்தது வளமான பாலை குடித்துவிட்டு கொடுத்தவர்களை வைக்கோல் போல தூக்கி எறியும் மனிதன் மிருகத்தை விட உயர்ந்தவனா?


அது வேண்டும் இது வேண்டும் என்று அறியாதவன் எந்த பதவியையும் மகிழ்ச்சியையும் தூக்கி எறியக் கூடியவன் இது என்னுடையது என்று எதையும் சொல்லிக் கொள்ளாதவன் நான் என்னும் ஆணவம் இல்லாதவன் எவனோ அவனையே அமைதி அடைகிறது


மேடைகளில் சொல்லப்படும் அறிவுரைகளை சொல்பவனும் கடைப்பிடிப்பான் என்று நம்பாதே


உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டால் கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன


விதி என்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடல் உண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே


அவன் மடையன் இவன் மடையன் என்று பேசாதே மடையயனை மட்டும் அடையாளம் கண்டு கொள்பவனே புத்திசாலி என்று மக்கள் நினைக்க மாட்டார்கள்


ஒரு பொழுதில் துன்பம் வரும் மறு பொழுதில் இன்பம் வரும் இருளிலும் வழி தெரியும் இயக்கம் ஏனடா தம்பி தூக்கம் கொள்ளடா


மேடு இருந்தால் பள்ளம் உண்டு பார்த்து செல்லடா நல்ல மேன்மை உள்ள மனிதருடன் உறவு கொள்ளடா


கர்மத்தை செய்ய முடியாதவனும் தர்மத்தை காக்க முடியாதவனும் வாழ்வதில் அர்த்தமில்லை


முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினாள் உன் மீதே குற்றம் சாட்டிப்பழகு


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்


எதுவுமே இல்லை என்று சொல்பவன் சோம்பேறி உண்மைகளைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சி இல்லாதவன் தேடாதவர்களுக்கு தெய்வம் தெரியாது


நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்கு பயப்படுவதில்லை அர்த்தமில்லை


மோகம் என்பது ஒருவகை குழப்பம் உனது அறிவு அதை கடந்து சென்றுவிடும் ஆனால் அப்போது நீ கேட்டது கேட்கப் போவது இரண்டிலும் உனக்கு வேதனை வராது


ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது அதை ஏற்றுக் கொள்ளும் தைரியம் எப்படியாவது வந்துதானே தீர வேண்டும்


திருநீறு பூசிக்கொண்டு தேவாரம் பாடு பணங்காசு சொந்தமில்லை பகவானை நாடு கையோடு கொண்டு வந்த பொருள் என்ன கூறு கடைகளில் வாராது கையில் உள்ள ஓடு


மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்


தர்மத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அதிகாரவர்க்கத்தின் கையில் கொடுத்தால் அது கேலிக்கூத்தாக்கி விடும்


தலைவர்கள் புரிந்து கொள்ளும் முன்னே வரம்பு மீறிப் புகழாதீர்கள் அந்த பின்பு எங்களை வேண்டி வந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்காதது வெட்கப்பட வேண்டிய செய்தியை தவிர வருத்தப்பட வேண்டியதில்லை


ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றாதே அதை எந்த பெண்ணிடமும் ரகசியத்தை சொல்லாதே


திருடனாக இருந்த வால்மீகி ராமாயணம் எழுதும் கவிஞன் ஆகி விடவில்லையா குற்றவாளிகள் உற்பத்தி செய்யப் படுகிறார்கள் அவர்கள் தாங்களாகவே உருவாவதில்லை


நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகம் ஆடும் கலைஞனடா


நம் வாழ்க்கையை நாமே நடத்தி செல்ல கடவுள் 4000 வழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்


எல்லோருமே ஏழைகளாக இருந்தாலும் ஏழை என்ற அடிப்படையில் கூட ஒற்றுமை இல்லாத பூமி அல்லவா இது


காதலுக்கு ஜாதி இல்லை உண்மைதான் ஆனால் நீதி உண்டு


மலரைப் பார் கொடியைப் பார் வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே அதை பார்க்க முயன்றால் நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது


ஒற்றுமை வலிமை என்பதை அறிந்தால் ஊர்கள் துலங்குமடா ஒவ்வொரு கணமும் உழைத்திட வந்தால் ஏழ்மை நீங்குமடா


நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளம் நிலைக்காது


உனக்கென்று சில சுய தர்மங்களை வகுத்துக் கொள் 10 பேருக்கு உதவுகிறது என்று வைத்துக் கொண்டால் எந்த பத்து பேரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாதோ அவர்களுக்கு உதவு


நாடு என்பது நாளும் கலந்தது நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்


ஒருவரிடம் உண்மையிலேயே திறமை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும் ஆனால் அவரிடம் பணி இருக்கிறதா என்பதையே முதலில் சோதிக்க வேண்டும்


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை


எழுபது வயதில் எதை நீங்கள் நேசிப்பீர்கள் அமைதி அமைதி அமைதி அதை இருபது வயதிலேயே நேசிக்கத் தொடங்கினார் ஓரளவு வந்து விடும்


யாராவது உங்களை அவமானப்படுத்தினால் ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்


நண்பன் தீயவன் என்றால் விலகிவிடு நல்லவன் என்றால் நம்பிவிடும் விலகி அவனை நம்பத் தொடங்காதே நம்பியவனை விலக தொடங்காதே


உன் நல்ல கண்கள் தீமை காண வேண்டாம் உன் நல்ல நாக்கு பொய்யை பேச வேண்டாம் உன் நல்ல காது நாசமாக வேண்டாம்


எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும் இரண்டும் ஒன்று சேராது


பாவமே செய்வது என்றாலும் பகிரங்கமாக செய்துவிடு தண்டனையும் அப்பொழுது முடிந்துவிடும்


திடீரென்று நீ வெற்றி பெற்று விட்டால் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவன் என்று கருதாதே


புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை


தேவை இருக்கிறது என்றால் கடன் வாங்கி கிடைக்கிறதே என்பதற்காக வாங்காதே தேவைக்கு வாங்கிய கடன்களை மட்டுமே தீர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி இருக்கும்


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


உன்னதமான திறமை முதன்முதலில் ஜொலித்து ஆரம்பிக்கும் இடம் பணிவு


பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்


உன் அந்தரங்கங்களை யாரிடத்தும் பகிர்ந்து கொள்ளாதே


உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி


யாரையோ ஊரையோ காப்பாற்ற வேண்டுமானால் பொய் பேசு இல்லையேல் பொய்யே பேசாதே


நான் என்று பேசியவர்கள் எல்லோருமே தலைகுப்புற விழுந்து இருக்கிறார்கள்


தெய்வத்தை தரிசிப்பதற்கு நீ புனித ஸ்தலங்களுக்கு போக வேண்டாம் உன் வீட்டில் உள்ள பாத்திரத்தை பக்தியோடு பார் அதிலே பரம்பொருள் காட்சியளிப்பார்


காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்


நம்முடைய நாட்டில் எல்லோருமே நல்ல நடிகர்கள் இதில் ஏன் சிலருக்கு மட்டும் பட்டம் கொடுக்கிறார்கள்


தத்துவஞானிகள் தான் தரணியின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள்


நேருக்கு நேராகப் பேசிக் கொண்டு விட்டால் எவ்வளவு பெரிய கேள்விக்கும் விடை கிடைத்துவிடும் பேசவில்லை என்றால் சிறிய கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து விடும்


வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும் எந்த விமர்சனத்தையும் தூக்கி எறிய வேண்டும்


விசுவாசம் என்பது ஒரு பக்கத்தில் மட்டுமே இருப்பதில் பொருள் இல்லை மறுபக்கத்திலும் அது இருந்தாக வேண்டும்


எந்த விஷயமும் புரியாமல் இருப்பதுதான் எவ்வளவு சந்தோசம்


நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு தீமை செய்தவனை மறந்து விடு


எதிரி எப்போதும் எதிரிதான் நண்பன் தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன்


இரக்கமில்லாத அவனிடம் பணம் போய் சேர்கிறது பணம் இல்லாதவனை இரக்கம் பிடித்தாட்டுகிறது


வெற்றியினால் ஆணவம் கொண்டவன் தோல்வியை அருகே அழைக்கிறான்


பணத்தை மதிக்கும் தலைவனை நீ மதிக்காதே


பாட்டு பாடி பறந்து போகும் பறவை ஜாதியை உன்னை பார்த்தும் கூட திருந்தலையே மனித நீதியே


எதை சிந்திக்கிறாய் என்பதில் அல்ல எப்படி சிந்திக்கிறாய் என்பதில் தான் புதிய கருத்துக்கள் வெளிவருகிறது


வெற்றி பெற்றவர்களே தோல்விக்காக காத்திருங்கள் தோல்வி பெற்றவர்களே வெற்றிக்காக காத்திருங்கள்


-கண்ணதாசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை