அண்மை

பரத்தைப் பேச்சு குறுந்தொகை 8 சிறுகதை - குகன் (kurunthogai 8 story)

பரத்தைப் பேச்சு - குகன்

kurunthogai-8


தன் கணவன் பரத்தை பெண்ணுடன் தொடர்பு கொண்டு மனைவியையும் மக்களையும் மறந்து அங்கேயே அவர் தங்கிவிட்டார்….  என்று வருத்தம் கொண்டிருந்தாள் ராதை










































x

ஊரார் இதை சொல்லி ஜாடையாக பேசுவர். அவர்களிடம் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசுவாள் ராதை.


இவளுக்கு தெரியும் தன் கணவர் நல்லவர் தான். நிச்சயமாக அவர் திரும்பி வருவார்  என்று.


ஒரு நாள் நடு சாம இரவு 

'ராதை…. ராதை… கதவை திற' என்ற சத்தம்.

கதவை திறந்தாள்


'ராதை என்னை மன்னித்து விடு…. உன்னையும், நம் மகனையும் தவிக்கவிட்டு நான்… தவறான காரியம் செய்து விட்டேன்!!' என்று அழத் தொடங்கினான் அன்பரசன்.


'சரி.. சரி உள்ளே வாருங்கள்…'


'இல்லை என்னை மன்னித்து விட்டேன் என்று கூறு'


'சரி... மன்னித்து விட்டேன்! உள்ளே வாருங்கள்'


உள்ளே வந்த அன்பரசன் தூங்கி கொண்டிருந்த மகனை ஏக்கத்துடன் பார்த்தான்.  மகனின் தலையை கண்ணீருடன் நீவி விட்டான். 


'என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாய் என்று நினைத்தேன்..' என்று மனைவியை பார்த்து கேட்டான்.


'அந்த மாயக்காரி மதுவந்தி உங்களை மயக்கிவிட்டாள். உங்கள் தவறல்ல!! நீங்கள் என்ன தான் தவறு செய்தாலும் என் கணவன் நீங்கள்…' என்று ராதை அழத் தொடங்கினாள் கண்ணீரை துடைத்துக் கொண்டு.


'இனியாவது என்னுடன் மட்டுமே வாழ்வேன் என்று சத்தியம் செய்யுங்கள்' என்றாள் ஏக்கத்துடன்


'ம்.. சத்தியமாக உன்னுடன் மட்டுமே வாழ்வேன்' என்றான் அன்பரசன்.

அவர்களது வாழ்க்கை சுகமாக சென்றது. 


சில நாட்கள் கழித்து

தொழில்  சம்மந்தமாக வெளியூர் சென்றுவிட்டான் அன்பரசன்.


"இந்த மஞ்சள் உடையில் நீ மாங்கனி போல தோன்றுகிறாய் எனக்கு"

"ம்ம்…. அப்படியோ? வேறென்ன தோன்றுகிறது.. உமக்கு?"


"இந்த மாங்கனியை ருசிக்க தோன்றுகிறது ‌…."


"என்ன இப்படி கவிதை மழையாக பொழிகிர்..."


"உன் அழகை கண்டதும் கவிக்கே அரசன் ஆகிவிட்டது போல, நாவிலிருந்து கவிதை மழை கொட்டுகிறது.."


இவ்வாறு ஒரு மாதத்திற்கு முன்பு அந்த நள்ளிரவு. திங்கள் தங்களை வானிலிருந்து  பார்த்த நேரத்தில் காதல் தலைவன் ஆசை மொழிந்தது மதுவந்திக்கு நினைவில் வந்தது. 


அவன் தன்னுடன் இருந்தபொதெல்லாம் அவளுக்கு இன்ப போகத்தில் பஞ்சமில்லை, வறுமையும் இல்லை. தற்போது வெகு நாட்களாக அவன் வராததால் அவள் மனம் கவலை கொண்டு உடல் மெலிந்து வறுமையிலும் வாடினாள் மதுவந்தி.


அன்பரசன் என்ற பெயர் கொண்ட தன் காதல் தலைவனின் அன்பு இப்போது அவளுக்கு கிடைக்கவில்லை. அவனோ அவனது தாலிக்கட்டிய மனைவி வீட்டில் இருக்கிறான். அதனால் இவளை காண அவன் வருவதே இல்லை. இவளுக்கோ அவனுக்கு கொடுத்த காதலையும் சேவையையும் வேறு யாருக்கும் கொடுக்கும் விருப்பமும் இல்லை. ஆதலால் இவள் மனம் திருந்தி பரத்தை தொழிலை விட்டு வறுமை காரணமாக ஊர் ஊராகச் சென்று மலர்களை விற்க்கும் மங்கையானாள்.


ஒரு நாள் பகலவன் பளிச்சென்று தன் ஒளிக்கதிர்களை வீசிக்கொண்டிருந்த நேரம்…


மதுவந்தி தன் காதற்தலைவனின் வீட்டின் வழியாக பூக்களை விற்றுக் கொண்டிருந்தாள்.


அப்போது அவளை பார்த்த செண்பகம் 'என் கணவர் நல்லவர் தான் சில மாயக்காரி செய்த மாயத்தினால் தான் அவர் இவ்வாறு தவறு செய்தார்' என்று மதுவந்தி குறித்து ஜாடையாக அருகில் இருந்த பெண்களிடம் கூறினாள்.


இதனைக் கேட்ட மதுவந்தி கோபமுற்று

'என் காதல் தலைமகன்!  என் வீட்டில் இருந்தபோது என்னை புகழ்ந்து என்னையே சுற்றிவந்தான். 


இப்போது தன் வீட்டிற்கு சென்றதும் கண்ணாடி எப்படி செய்வதை அப்படியே செய்யுமோ அதுபோல தன் மகனின் அம்மா கூறியபடி அவன் ஆடுகிறான்.


அவன் மனைவி கையில் கயிறு இருக்க இவனோ பொம்மலாட்ட பொம்மை போல கையையும் காலையும் தூக்கி!..  தூக்கி!.. ஆடுகிறான் ஆட்டம்...'. என்றாள் மதுவந்தி.


பின் அவள் தன் வழியே சென்றாள்.


செண்பகத்தின் அருகில் இருந்தோர் மதுவந்தி சொல்லிய பாணியை எண்ணி குறுநகை புரிந்தனர்.


செண்பகம் மறுமொழி ஏதும் இல்லாமல் வாயடைத்து நின்றாள். அருகில் இருந்தவர்கள் அவளது மறுமொழிக்காக அவளின் முகத்தை உற்று நோக்கினர்


-குகன்


குறுந்தொகை 8 பாடல்


கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் 

பழன வாளை கதூஉம் ஊரன் 

எம் இல் பெருமொழி கூறி, தம் இல், 

கையும் காலும் தூக்கத் தூக்கும் 

ஆடிப் பாவை போல, 

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.


ஆசிரியர் - ஆலங்குடி வங்கனார் பாடல்


குறுந்தொகை 8 உரை


கழனி ஓரத்தில் இருக்கும் மாமரத்திலிருந்து விழும் மாம்பழங்களை அங்குள்ள வாளை மீன்கள் கவ்விப் பிடிக்கும். அந்த வாளை மீனை போல இருந்தான் தலைவன்

 

(பரத்தை தன்னிடம் அடைபட்டு கிடந்த தலைவனை பற்றி கூறுகிறாள், தன்னை மாம்பழம் என்றும் தலைவனை வாளை மீன் என்றும் குறிப்பிடுகிறாள்)

 

என் வீட்டில் இருக்கும் போது என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். இப்போதோ தன் மகனின் தாய் ஆட்டியபடி ஆடுகிறான்

கருத்துரையிடுக

புதியது பழையவை