அண்மை

தினத்தென்றல் இனித்தென்றல் - தென்றல் செயலி

வணக்கம், நான் தீசன். நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு தென்றலில் எழுதுகிறேன். தினத்தென்றல் இப்போது தென்றல் என்று பெயர் மாறி இருப்பதை பலரும் கவனித்திருப்பீர்கள் அதற்கு காரணம், பாதி பணிச்சுமை பாதி உடல் நலம். ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி அன்று தினத்தென்றலின் இறுதி இலக்கிய பதிவு வந்தது. அத்தோடு ஒரு அறிவிப்பும் வெளி வந்தது. வலைதளத்தின் அமைப்பு மாற்றப்பட்டு உள்ளதால் அந்த அறிவிப்பை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். உங்களுக்காக அதை மீண்டும் கொடுக்கிறேன்


தென்றல் வார இதழ்

வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு: சில தளப் பிரச்சனைகளாலும் நலப் பிரச்சனைகளாலும் நாளிதழாக செயல்பட்டுக் கொண்டிருந்த தினத்தென்றல், இனி தென்றல் என்னும் பெயரில் வார இதழாக மாற்றமடைகிறது. இதுவரை வெளியாகிக் கொண்டிருந்த அனைத்து பகுதி பதிவுகளிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல், தென்றல் தனது பதிவுகளை இனி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கூடிய விரைவில் மீண்டும் நாளிதழாகும் என்பதற்கு நம்பிக்கை அளிக்கிறோம். வாசகர்கள் இம்மாற்றத்தை பொறுத்துக்கொண்டு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறோம். பல்சுவை கொடுக்கவிருக்கும் வார இதழான தென்றலை இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் தவறாமல் சந்திக்கலாம். இப்படிக்கு  - இதழாசிரியர் (ஏப்ரல் 18)


அதன் பிறகும் என்னால் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் பணியாற்ற முடியவில்லை அதற்கு காரணம் எனக்கும் கொரோனா வந்துவிட்டது. தினத்தென்றலில் செய்திகள் பக்கத்தில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகளையும் தடுப்பூசி பற்றியும் அவ்வப்போது எழுதி கொண்டிருந்த நேரமது. எனக்கதில் அணுவளவும் இஷ்டமில்லை. மிட்டாய் சாப்பிடும் தாத்தா சிறுவனை திருத்தும் கதையை நான் பல முறை கேட்டிருக்கிறேன். தடுப்பூசியே போட்டுக் கொள்ளாத நான் தடுப்பூசி போடுங்கள் என்று எழுதிக் கொண்டிருந்தேன். கொரோனாவைப் பற்றி டிவியிலும் செய்தித் தாள்களிலும் படித்துவிட்டு அதை பற்றியே சாரமில்லாமல் எழுதித் தள்ளிக்கொண்டிருந்தேன். நானும் ஒரு வணங்காமுடி எனும் ரகசியத்தை வெளியிடுவதில் எனக்கு கவலை இல்லை. இனி வணங்காமுடியும் இல்லை, சத்தில்லாத கொரோனா பற்றிய செய்திகளை வெளியிடுவதில் கவலையும் இல்லை. ஏன் என்றால், கொரோனாவின் பரிபூரண அனுபவத்தை நான் பெற்றுவிட்டேன். அதைப் பற்றி எழுதுவதற்கான தகுதி இப்போது எனக்கு வந்துவிட்டது. எனது கொரோனா அனுபவத்தையே தனி ஒரு கட்டுரையாக போடலாம். இருந்தாலும் முதல் வார இதழான இந்த தென்றல் பதிவில் நோயை பற்றி பேச வேண்டாம். தென்றல் அடைந்த மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் பற்றி மட்டுமே இந்த பதிவு விவரிக்கும்.


நாங்கள் முன்பிலிருந்து Google Adsense approval க்காக காத்திருக்கிறோம். இணையத்தில் நாம் சுதந்திரமாக இயங்கும் போது சில Copyright பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஏப்ரல் 18 க்கு முன் இரண்டு வாரங்களுக்கு தினத்தென்றலில் பலவித இடர்பாடுகள் வந்தது. Google Publisher Centre, Google News Stand, Google Adsense என எதிலுமே தென்றலுக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் எனக்கு உண்மையில் எரிச்சலை தந்தது. உங்களது வலைதளம் முழுவதும் தமிழில் உள்ளது அது தான் குறை என்றார்கள். அதனால் சில முக்கியமான பதிப்புரிமை, தனியுரிமை கொள்கைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டோம். அப்படியும் approval கிடைக்கவில்லை. Search Engine Optimizing செய்ய Search Console வழியாக முன்பே Site Map கொடுத்திருந்தோம். அயல்நாட்டு வாசகர்கள் கூட தினமும் தென்றலை படித்து கொண்டிருந்தார்கள். அப்படியும் approval கிடைக்கவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்,  Low Value Content. பின் முன்னைய பதிவுகளில் பல திருத்த வேலைகள் தொடங்கியது. எனக்கு உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. ஒரு நாள் பொழுது வெறும் மூன்று மணி நேரமளவில் கழிவது போல் இருந்தது. செய்திகளில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. சில கட்டுரைகளிலும் திருத்தம் மற்றும் மாற்ற வேலைகள் நடந்தது. சூரியராஜ் மற்றும் குகன் அவர்களுக்கு பெரியதொரு நன்றிகள். அவர்கள் இந்த வேலைகளில் பெரிதும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள் அதில் அக்கறை காட்டினார்கள். கேட்டவுடன் திருத்தி தந்தார்கள். 


எந்த வித பலனையும் எதிர்பார்க்க கூடாது என்று கர்மயோகத்தை வெளியிட்ட தென்றலே இப்படி approval க்காக அலைந்து கொண்டிருந்தது. கலைஞர் அவர்கள் ஒரு மேடையில் சொன்னார் 'துறவி அனைத்தையும் துறந்தவன் ஆனால் அவனுக்கும் திருவோட்டை துறக்க மனம் வருவதில்லை' என்று. வயிற்றுக்காக சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டியுள்ளது. துறவி திருவோட்டை துறக்கவில்லை ஆனால் அதில் விழும் நாணயங்களை துறக்க தயாராக இருப்பான், அவனது வயிறு பசியை துறக்க மாட்டேன் என்கிறது. அவன் என்ன செய்வான் பாவம். பசியை ஆற்றும் அளவிற்கு பிச்சை எடுக்கிறான் சாப்பாடே பிச்சையாக விழுந்தால் போதுமென அமர்கிறான். ஒரு நாள் பொழுதின் உழைப்பு மூன்று வேலை சோற்றுக்காக மட்டும் இருக்குமானால் அதைவிட சிறந்த தொழில் கிடைக்க பெறாது. 


நான் தென்றலை Adsense approval பெறவைப்பதற்கு இவ்வளவு முயற்சி செய்ததன் காரணம், எனக்காக நான் கேட்பதற்காக மறுப்பேதும் கூறாமல் எழுதி தரும் நபர்களுக்கு என்னால் எதுவுமே திருப்பி தர முடியவில்லையே எனும் மனதரிப்பு தான். இருந்தாலும் பாதகமில்லை, சிலவற்றின் வளர்ச்சி நத்தை ஆமையை விட பொறுமையாகத் தான் இருக்கும். இத்தனை நாளின் வினைப்பயனாக  தென்றல் Google News Stand approval பெற்றுவிட்டது. அதிஷ்டவசமாக Dailyhunt தளத்தில் நம் இதழை படிப்போர்களின் எண்ணிக்கை 4000-மாக உயர்ந்துவிட்டது. தென்றல் இதழ் App வடிவிலும் இப்போது கிடைக்கிறது.


தென்றல் App


இந்த app மூலம் நீங்கள் எங்களின் வார இதழை படிக்கலாம். Dailyhunt ல் தினத்தென்றல் நாளிதழாக வலம் வரும். அதில் பெரும்பாலும் பழைய பதிவுகள் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. Google News Stand approval கிடைத்தாலும் எங்களுக்கு செய்திகள் எழுதுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. பரமஹம்சர் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது, 'குறிக்கோளை கண்டுபிடி மூன்று பாதை தெரிந்தால் ஒரு பாதையை தேர்ந்தெடு, கடைசி வரை மற்ற இரு பாதையை கவனிக்காதே'


இதே தத்துவத்தில் நாம் அப்துல் கலாம் ஐயா சொன்னதையும் சேர்த்து கொள்ள வேண்டும், 'குறியை மட்டுமே பார்த்து நடந்து, பாதையின் அனுபவங்களை ரசிக்க தவறிவிடாதே'


கடவுளை குறிப்பிட்ட இடத்தில் தேடுவது வீண், பரந்தவெளியில் கடவுளை தேடு


உன்னுள்ளே இருக்கிறான் என்று உன்னுள்ளே தேடினால் கிடைக்க மாட்டார் பயனுள்ள பரந்த நோக்கத்தில் தேடினால் உன்னுள்ளே தெரிவார்


தென்றல் எங்கும் விரவ தயாராகிக் கொண்டுள்ளது அது பரந்தநோக்கத்தோடு இனி வார இதழாக செயல்படும்.


-தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை