குறுந்தொகை 15
செவிலியின் சேவை
ரங்க நாட்டில் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அந்த நாட்டில் உள்ள ஒர் கிராமமாக வாணிகபுரம் இருந்தது அங்கு அங்கவை என்ற பெண் வாழ்ந்துவந்தாள். ஒர் நாள் அங்கவை அவசரமாக எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தாள். அதை கண்ட அவளது தாய் ஔவையம்மாள் " மாலையானால் போதும்! எங்காவது தோழிகளுடன் புறப்பட்டுவிடுகிறாள். எங்கே தான் அப்படி போகிறாளோ? தெரியவில்லை" என்று தன் வீட்டிற்கு வந்ததிருந்த அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமங்கையிடம் கூறினாள்.
சத்தியமங்கை "என் மகளும் உங்கள் மகளுடன் தான் செல்வாள்! ஆனால் இப்போது ஒரு மாத காலத்திற்கு அவள் வீட்டில் தான் இருக்கமுடியும்" என்றாள் ஔவ்வையம்மாளிடம்.
"ஏன்?... அவளுக்கு என்ன?"
"அது... அவள் தடுமாறி விழுந்ததால் அவளது கால் மூட்டில் பெரிய கல் ஒன்று பெரும் காயத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் காலில் பலத்த வீக்கம் வைத்தியர் ஒரு மாதத்திற்கு நடமாட முடியாது என்று சொல்லிவிட்டார். நேற்று தான் அலர்விழியை சந்திக்க அங்கவை வந்தாளே! அவள் இந்த செய்தியை உங்களிடம் கூறவில்லையா?"
"அவள் ஏதும் கூறவில்லையே!" என்றாள் ஔவ்வையம்மாள்.
இவர்களது சம்பாஷணையை காதில் வாங்கி கொள்ளாது - அங்கவை தன் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டாள். வெகுநேரம் நடைபயணத்தை மேற்கொண்டு பாலை நிலத்தின் ஆரம்பபகுதியினை வந்தடைந்தாள். யார் வருக்கைக்காகவோ அவள் அங்கு மணிக்கணக்காக காத்திருக்களானாள். யாருமில்லாத அந்த இடத்தில் இந்த மாலை நேரத்தில் அவள் தன்னந்தனியாக நிற்பது அவளுக்கு சட்றே பீதியை உண்டாக்கியது.
அவள் பார்வையில் பாலை நிலத்தில் இருந்து இரு ஆடவர்கள் வருவது தெரிந்தது. அவர்கள் சற்று நெருங்கி வர அதில் ஒருவன் உதியன் என்று அறிந்தாள்.
உதியன் தன் தோழனை அங்கேயே நிற்க்கவைத்துவிட்டு . உதியன் அங்கவையின் அருகில் வந்தான் அவளிடம் "எங்கே? அலர்விழி!" என்று கேட்டான்.
அங்கவை "அவள் வர முடியாத சூழல்"என்றாள்.
"ஏன்?...அவளுக்கு என்ன?"
"அவள் காலில் காயம், அவள் ஒரு மாதத்திற்கு நடக்க முடியாது என்று வைத்தியர் கூறிவிட்டார். இந்த செய்தியை உங்களிடம் கூறவே என்னை அனுப்பினாள்" என்று அங்கவை சொல்ல உதயனின் முகம் கவலையலையில் மூழ்கியது.
"அவளை பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லுங்கள். மீண்டும் நான் அவளை எப்போது சந்திக்க வருவது?"
" எப்போதும் போல் உங்களை வாரம் ஒருமுறை வரச்சொன்னாள். அவள் கால்கள் சரியாகிவிட்டாள் அவள் உங்களை வந்து பார்ப்பதாகவும் அப்படி முடியாவிடில் என்னிடம் ஏதாவது செய்தி கூறி அனுப்புவதாகவும் கூறினாள்" என்று அங்கவை கூறினாள்.
ஆவலுடன் காதலியை சந்திக்க வந்த உதியன்,கவலைகோர்த்த முகத்துடன் தன் நிலம் நோக்கி புறப்பட்டான்.
அங்கவையும் தன் தோழி வீட்டினை நோக்கி பிரயாணித்தாள்.
'காதலனிடம் செய்தியை கூறி இருப்பாளா தோழி? அதை கேட்ட அவர் மனம் எவ்வாறு துன்பப்படுமோ?' என்று சிந்தனை செய்தபடியே அமர்ந்திருந்தாள் அலர்விழி. அந்நேரம் அங்கவை அலர்விழியின் வீட்டிற்கு வந்தாள். செய்தியை கூறிவிட்டதாகவும் அதை கேட்டு உதியனின் முகம் வாடியதையும்-அலர்விழியிடம் கூறினாள்.
அலர்விழியின் விழிகளில் கண்ணீர் திரண்டது அதை கண்ட அங்கவை "சரி… அழாதே உன் காதலனை விரைவில் காணலாம். உன் காதலனோ உன்னை வந்து காண முடியாத நிலை" என்றாள்.
"இந்த நாடே அவரை கொள்ளைக்காரன் என்று வசைபாடுகிறது. அவரை நாட்டிற்குள் கண்டால் அரசவைக்கு தகவல் தரும் படி அறிவித்திருக்கிறார் அரசர்" என்று வருத்தமொழியில் அலர்விழி பேசினாள்.
"ஆமாம்… அவன் நல்லவர் தான். சிறுவயதில் குலத் தொழிலை விட்டு பிழைக்க வழியின்றி நம் நாட்டுக்கு வந்தபோது அவன் தந்தை கொள்ளையன்-காளையனின் பெயரை சொல்லி அவனை விரட்டி அடித்தனர். அதனால் அவன் வேறுவழியின்றி கொள்ளையடிபதையே தொழிலாக கொண்டான். பாலை நிலத்தவர்களை தாவறாகவே இந்த நாடு சித்தரிக்கிறது அதில் நல்லவர்களும் உண்டு." என்றாள் அங்கவை.
இவ்வாறு தோழிகள் உரையாடிக்கொண்டிருக்க அவர்களது உரையாடலை அலர்விழியின் தாய் சத்தியமங்கை மறைந்து கொண்டு கேட்டாள். பிறகு ஏதும் கேட்காததுபோல உள்ளே நுழைந்து அவர்களுடன் உரையாட தொடங்கினாள்
சில நாட்கள் நகர்ந்தன. அலர்விழி கால்களில் எழுந்து நிற்க்க மட்டுமே திராணி வந்திருந்தது. சத்தியமங்கை, காதல் விடயம் தெரிந்தது போல அலர்விழியிடம் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த செய்தியை ஔவ்வையம்மாளிடம் கூறி அவளது மகள் அங்கவையை இனி தன் மகளை சந்திக்க வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாள். அலர்விழிக்கு திருமண ஏற்பாட்டையும் சத்தியமங்கை துவக்கிவைத்தாள்.
ஔவ்வையம்மாளும் தன் மகளை அங்கு செல்லக்கூடாது என்று எச்சரித்தாள். என்ன நடந்திருக்கும் என்று ஒருவாராக புரிந்து கொண்ட அங்கவை தன் அம்மாவிடம் இருவரது காதலின் தன்மையையும், உதயனின் நற்குணங்களையும் எடுத்து கூறினாள். அவன் இன்றி அலர்விழி வாழமாட்டாள்! அவர்கள் காதலுக்கு உதவி செய்யும் படி தன் தாயார் ஔவ்வையம்மாளை கேட்டுக்கொண்டாள். ஓவ்வையம்மாள் காதலை எதிர்பவர் அல்ல.
தன் மகள் இவ்வளவு கூத்தாடி கேட்பதால் அரை மனதுடன் அவர்கள் காதலுக்கு உதவி செய்ய சம்மதம் தெரிவித்தாள்.
உதியன் 'அலர்விழிக்கு கால்கள் சரியாகி இன்று என்னை சந்திக்க வருவாளா? இல்லை அவள் தோழியிடம் செய்தி கூறி அனுப்புவாளா? என்று நினைத்தபடியே வந்தான். அங்கவை நிற்பதை கண்டான். அங்கவை நடந்த சம்பவங்களையும், அலர்விழியின் நிலையையும் உதயனிடம் கூறினாள். உதயன் அன்று இரவே அலர்விழியை தன் நிலத்திற்க்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ள ஆயத்தமானான். இதை ஔவ்வையமாளிடம் கூறிய அங்கவை அலர்விழியிடம் சென்று கூறச் சொன்னாள். ஔவ்வையம்மாள் சத்தியமங்கையை பார்ப்பது போல சென்று அவள் மகள் அலர்விழியிடம் உதியன் வரும் செய்தியை கூறினாள்.
அதனால் அலர்விழியும் அன்று இரவு கண்விழித்து காத்திருந்தாள் உதயனுக்காக. நடு இரவு நேரம் தன் தாயுக்கு தெரியாதவாறு நூதனமாக வீட்டை விட்டு வெளியே வந்தாள். அங்கு காத்துக் கொண்டிருந்த உதியன் அவள் நடக்க முடியாத நிலையில் உள்ளதால் அவளை தன் இரு கைகளின் பலம் கொண்டு பாலை நிலத்தை நோக்கி தூக்கிச்சென்றான். இருகாதலர்களும் தங்கள் காதலுக்கு உதவி செய்த அங்கவைக்கும் அவள் தாய் ஔவ்வையம்மாளுக்கும் நன்றி செலுத்தி புறப்பட்டனர். உதியன் அலர்விழியை தன் இரு பலம் பொருந்திய கைகளில் சுமந்தபடியே பாலை நிலத்தில் சென்றதை கண்ட ஔவ்வையம்மாளுக்கு உதியன் மீதும் அவனது காதல் மீதும் பெருத்த நம்பிக்கை ஏற்பட்டது.
மறு நாள் காலை. தன் மகளை காணாது புலம்பிய படியே சத்தியமங்கை ஔவ்வையாமாளிடம் வந்தாள். ஔவ்வையம்மாள் உண்மையை மறைக்காது நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினாள். இதை கேட்ட சத்தியமங்கை சாப மழையை ஔவ்வையம்மாள் மீது வாரிப்பொழிந்தாள்.
அதை எல்லாம் பொருட்படுத்தாத ஔவ்வையம்மாளோ " இந்நேரம் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்திருக்கும். ஆகவே இனி நீ உன் மகள் மீது கோவம் கொள்ளாதே!...உன் மகள் மீது அவன் மிகுந்த காதல் கொண்டிருக்கிறான். அவன் அவளை ஒருபோதும் கைவிடமாட்டான். இந்த காதலை இணைத்து வைத்ததை நான் பெருமையாக எண்ணுகிறேன்!" என்று சத்தியமங்கைக்கு ஆறுதல் கூறினாள்.
-குகன்
குறுந்தொகை 15
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
-ஔவையார்
பெரியார் அவர்கள் தன் பதிப்பக வசதிக்காக சில எழுத்து சீர்திருத்தம் செய்தார்..
பதிலளிநீக்குமை என்ற எழுத்தை 'மய்' என எழுதினார்.. கமல்ஹாசன் கூட இப்ப தன் கட்சிபெயரை மய்யம் என எழுத காணலாம்..
சிலர் வைரம் என்பதை வயிரம் என எழுதுவர்..
ஔ என்று ஒரு எழுத்தை தவிர்த்து அதே ஒலியை தரக்ககூடிய 'அவ்'என்ற எழுத்தாக எழுதி பதிப்பித்தார்.. அவ்வை என எழுதலாம்.. இல்லாவிடில் ஔவை என்பதே சரி.. ஔவ்வை என வராது...
சொல் குற்றம் பெரியதவறில்லை என நக்கீரரே விவாதித்திருக்கிறார்.. என்றாலும் அதை குறைத்துக்கொள்வது மேலும் மதிப்பை கூட்டும்.!