செய்திகள் சுருக்கமாக
1.தோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் 2020-யில் பெண்களுக்கான பளுத்தூக்கும் போட்டியில் இந்தியாவின் சைகோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2.ஆண்களுக்கான 10மீ பிஸ்டல் துப்பாக்கி சுடும் தகுதி சுற்று போட்டியில் உலகின் சிறந்த வீரரான அபிஷேக் வர்மா மற்றும் சவுத்ரி பங்கேற்றனர். அபிஷேக் 575 புள்ளி பெற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். சவுத்ரி 586 புள்ளி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.
3.திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாதவ் என்னும் 9 ஆம் வகுப்பு மாணவன் கணினிக்கான மினி சிபியூ-வை கண்டறிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதற்கான காப்புரிமையையும் அரசிடமிருந்து பெற்றுள்ளார்.
4.தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணிக்கு மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி பள்ளி மாணவி தன்யா(17) தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
5.தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவும் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் படத்திறப்பு விழாவும் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்தில் நடைபெற உள்ளது. அதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை புரிகிறார்.
6.பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சர்பட்டா பரம்பரை படத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பாராட்டியுள்ளார். அதே சமயத்தில், திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டது போலவும் எம்.ஜி.ஆர் கைகழுவியது போலவும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறுகிறார்.
7.சமீபத்தில் அருணாச்சல் அருகே சீன அதிபர் ஜி ஜின் பிங் வந்து சென்றார். அதை அடுத்து இந்தியாவில் இது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இதன்பிறகு இந்திய சீன எல்லை தகராறு மேலும் வலுபெறும் என்று நம்பப்படுகிறது.
8.உலகின் முதன் முதலில் தோன்றப்பட்ட விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்-ன் 2020-ற்கான விளையாட்டுகள் வண்ணமயமாக 23 ஜூலை அன்று ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் தொடங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதற்கு ஆன செலவு மட்டும் 43 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஆகும்.
9.தமிழகத்தில் நீட் தேர்வைப் பற்றி பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அதற்கு மத்திய மருத்துவத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக பதில் தந்துள்ளார். அதில், நீட் தேர்வு ரத்து செய்யபடாது என்றும், 2021 க்கான நீட் இளங்கலை முதுகலை தேர்வுகள் செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 12-களில் உறுதியாக கொரோனா பாதுகாப்பு விதிகளின் படி நடக்கும் என்று கூறியுள்ளார்.
10.ஒலிம்பிக் போட்டிகளில் முக்கிய போட்டியான வில் வித்தை போட்டியில் தென் கொரிய வீராங்கனை உலக சாதனை படைத்துள்ளார். 1996ல் உக்ரைனின் லீனா 673 புள்ளிகளை இந்த போட்டியில் பெற்று உலக சாதனை படைத்திருந்தார். அதை, தென் கொரியாவின் ஆன் சான் என்னும் வீராங்கனை 680 புள்ளிகளை பெற்று முறியடித்தார்.
11.சீன மற்றும் தைவானில் தயாரிக்கப்பட்ட டிரோன் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் எல்லைப்பகுதியான கனாசக் பகுதிக்கு ஊடுருவியது. அதில் 6 பெரிய சிறகுகளும் அதிர்ச்சி தரும் வகையில் 5 கிலோ வெடிபொருளும் இருந்தது. அதை எதிர்ப்பு நடவடிக்கை சிறப்பு காவலதிகாரிகள் சுட்டு வீழ்த்தினர்.
12.இலங்கை அகதிகளுக்கு கூடுதல் உதவி அளிக்கக் கூறி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் நடந்த மறுவாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அகதிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிகாட்டு குழு அமைக்க கூறியுள்ளார்.
13.திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக வரும் 28 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது. திமுக இன்னும் தான் சொன்ன நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு-க்கு மானியம் 100, குடும்பத் தலைவிக்கு 1000 போன்றவற்றை நிறைவேற்றவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கூறியுள்ளார்கள்.
14.கேரள மாநிலம் பிராக்குளம் பகுதியை சேர்ந்த பகீரதியம்மா (107) ஜூலை 23 அன்று காலமானார். கேரளா எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்வில் 275 க்கு 205 மதிப்பெண்ணை பெற்று அசத்திய இவர், சமீபத்தில் கணினியும் செயலாற்ற கற்றுக்கொண்டார்.
15.பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பலரது செல்போன்கள் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ், திமுக மற்றும் சில கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தியது.
16.லோக்சபாவில் மருத்துவதுறை அமைச்சர் மான்சுக் பேசுகையில், தடுப்பூசி திட்டத்தில் அரசியல் தேவையில்லை என்பதை பிரதமர் மோடி அவர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார். 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போடுவது நம் கடமை என்று கூறினார்.
17.சமீபத்தில் பாத்ரூம் டூர் செய்து யூட்டியூபை பரபரப்பாக்கி பல சோலோ கன்டன்ட் கிரியேட்டர்-களின் சாபங்களை வாங்கிக் கொண்ட டிவி தொகுப்பாளர் அர்சனா, மூளையில் அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பியுள்ளார். தனக்கு இது மறு ஜென்மம் என்றும் கூறியுள்ளார்.
ஜின்பிங் வந்துபோனதால் எல்லையில் மீண்டும் தகராறு தலைதூக்கும் என அஞ்சப்படுகிறது/பேசப்படுகிறது/எதிர்பார்க்கப்படுகிறது.. என்றுதான் செய்தியில் சொல்வார்கள்..
பதிலளிநீக்குதென்றல் தான் துணிந்து "நம்பப்படுகிறது" என்றுசொல்லி.. ஹாஸ்யத்தை தூண்டுகிறது..