இப்போதெல்லாம் விளையாடுவதற்கு பகலோ, இடமோ ஏன் ஆட்கள் கூட தேவை இல்லை. கையில் ஒரு மொபைல், அதில் 4G நெட் வோர்க்கிங் மட்டுமே போதும். அவுட் டோர் கேமில் இருந்து இன் டோர் கேம் வரை அனைத்தையும் ஆன்டிராய்டு மொபைலில் ஏற்றி, அசால்ட்டாக விளையாட முடியும்.
உலகிலேயே அதிகம் வசூல் சாதனை செய்த படம் - அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம். உலக அளவில் அதன் மொத்த வசூல் $2.798 பில்லியன் ஆகும். ஆனால் அதையும் தாண்டி, $6 பில்லியன் வசூல் செய்தது ஜி.டி.ஏ 5 என்ற ஒரு விடியோ கேம் தான். அந்த அளவுக்கு பிரபலமானது தான் கேம் இண்டஸ்ட்ரீஸ்.
இந்தியாவில் கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகம். ஆகவே அதிக கேம் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவை குறிவைத்து செயல்படுகின்றது. இந்தியாவில் விளையாடப்படும் கேம்களில், மொபைல் பேட்டில் ராயல் விளையாட்டு தான் அதிகம் விளையாடுகிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
Free fire வளர்ச்சியும், அதன் பாதிப்பும் :
Pubg போன்றே அமைந்த free fire என்ற விளையாட்டு தற்போது கூகிள் பிளே ஸ்டோரில், அதிக நபர்களால் பதிவிறக்கப்பட்டு விளையாடப்படும் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கூகிளால் 2019 ஆண்டுக்கான சிறந்த கேமுக்கான விருது இதற்கு வழங்கப்பட்டது. 23 ஆகஸ்ட் 2017இல் இந்த கேம் வெளிவந்தாலும் 2019ன் துவக்கத்தில் தான் இது அதிகம் பிரபலமடையத் தொடங்கியது. இது பிரபலமடைய காரணம் - குறைந்த விலை கொடுத்து வாங்கும் ஆன்ட்ராய்டு போன்களில் கூட இதை விளையாட முடிவதே!.
கொரானா பாதிப்பினால் நேரடி வகுப்புகளுக்கு செல்லமுடியாமல் மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பெற்றோர்கள், ஆன்டிராய்டு போன்களை படிப்பிற்க்காக தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தந்தனர். அதில் பரிட்சயமாகி இந்த கேம் வயது வித்தியாசம் இன்றி பரவியது.
பாண்டிச்சேரியில் கூட ஓர் சிறுவன் அதிக நேரம் இந்த கேமை விளையாண்டு மன அழுத்தத்தினால் உயிர் இழந்தான். ஆனால் மீடியாக்களோ இந்த கேமின் பெயரை கூறாது fire wall எனும் play station கேமின் பெயரை அந்த சிறுவன் இறந்ததற்கு காரணமாக கூறியது. அந்த சிறுவனுக்கு மொபைல் மட்டுமே வாங்கி கொடுத்தாக அவனது பெற்றோர்கள் கூறியிருந்தும் மீடியாக்கள் இவ்வாறு கூறுவதற்க்கான காரணம் free fire கேமுக்கான விளம்பரங்கள் அந்த பிரபல மீடியாக்களில் ஒளிபரப்ப பட்டதால். அவை, உண்மை செய்தியை மறைத்து திரித்து கூறியது. ஏன் சன் டிவி கூட Free Fire விளம்பரத்தினை செய்யாமல் இல்லை
இந்த விளையாட்டில் பல கதாபாத்திரங்கள் இருக்கும் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திறன். அவற்றை பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மற்றும் இந்திய நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியவர்களும் அந்த விளையாட்டில் ஒரு கதாபாத்திரம் ஆக உள்ளனர். இதுவும் இந்த கேம் பிரபலமடிய ஒர் காரணம். அதுபோல அந்த விளையாட்டில் உடை, திறன் மேம்படுத்தப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றை பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் இதை பணம் இல்லாதவர்களும் வாங்க இந்த கேமை பல முறை விளையாடி, அதில் கொடுக்கப்படும் டாஸ்க்களை முடித்தால் அவை கிடைக்கும் வகையிலும் சலுகை வழங்குவர். இதனால் அதை வாங்குவதற்காக அன்றைக்கு முழுவதும் அந்த கேமை விளையாட வேண்டிவரும். அப்படி ஒரு முறை வாங்கியவர் அடுத்தடுத்து வரும் பொருட்களை பணம் கொடுத்தே வாங்கும் படி அடிமைப்படுத்திவிடும். பெற்றோர்களின் வங்கி விவரங்கள் ஒரு முறை இட்டாலே அடுத்தடுத்து வரும் பொருட்களை ஆட்டோமேட்டிக் முறையில் அதுவே பணத்தை எடுத்துக்கொண்டு அந்த பொருளை தரும். (பொருள்கள் என்று சொல்வது கேமுக்குள் பயன்படுத்தும் வகையில் அமைந்தவையே!) இதனால் அற்ப சந்தோஷத்திற்காக சிறுவர்கள் தங்கள் பெற்றார்களின் வங்கி விவரங்களை தந்து பல லட்சங்களை செலவழித்ததால் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்ததை பார்க்க முடிந்தது.
இந்த கேமில் பணத்தைக் கட்டி நடத்தப்படும் போட்டிகளும் உள்ளது. பணத்தை இழந்தவர் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும், ஒர் பத்து வயதுடைய மாணவன் இந்த விளையாட்டுக்காக கொடுக்கப்பட்ட ஐடி
திருட்டு போனதால் கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுவதும் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது.
உனக்கு என்ன இந்த விளையாட்டை பற்றி தெரியும் முன்ன பின்ன நீ இத விளையாண்டு இருக்கியா? என்று நீங்கள் கேட்டால்!...
ஆம். இந்த விடியோ கேமை ஒரு வருடம் விளையாடி இருக்கிறேன். அந்த முறையில் இந்த கேம் அடிமை படுத்தும் முறை மற்றும் அதன் பாதிப்பு ஆகியவற்றை நான் சொல்ல முடியும்.
மேலும் சில :
எந்த விடியோ கேம்கள் ஆனாலும் பணத்தை கட்டி விளையாடாதீர்கள், ஒரு பொழுது போக்கிற்காக விளையாடுங்கள். பொழுதெனைக்கும் விளையாடுவது முற்றிலும் தவறு.
பெற்றோர்கள் இந்த பதிவை பார்ப்பீர்கள் ஆனால் 'Parents Lock' எனப்படும் ஆப்சன் இப்போது அனைத்து மொபைலிலும் உள்ளது அதை ஆன் செய்தால் உங்கள் வங்கி விவரங்கள், கூகிள் ஐடிகளை உங்கள் குழந்தைகளால் பயன்படுத்த முடியாது. அதுபோல அவர்கள் வயது வரம்பிற்கு ஏற்ற செயலியோ அல்லது விடியோவோ அல்லது கேம்களோ தான் அவர்களால் பயன்படுத்த முடியும். அதனால் பாதிப்பு குறையும்.
விடியோ கேம் விரும்பியில் நானும் ஒருவன். பல ஆங்கில வார்த்தைகளை என்னால் அவற்றில் இருந்து கற்றுக் கொள்ள முடிந்தது. மேலை நாட்டு கட்டிட கலை, அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் பல விஷயங்களை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. விடியோ கேம் என்றாலே அச்சம் கொள்ள வேண்டாம்.
உண்மை என்னவெனில் பெற்றோர்கள் பார்க்கும் சீரியல்களை விட விடியோ கேம்கள் புதிய அனுபவம் மற்றும் புதிய அறிவை தருகிறது. ஆனால் அதை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.
Free Fire யினை நம்மாலே ஒழிக்க முடியும்
இதற்கு நாம் எந்த அரசையும் நாட வேண்டியதில்லை. உங்களது மொபைலை எடுத்துக் கொள்ளவும். அதில் Play Store க்குள் நுழையவும். அதில் Free Fire என்று Type செய்யவும். பின் கீழுள்ள படங்கள் படி செய்யவும்.
நீங்கள் Search செய்த பிறகு இப்படி தான் வரும்.
அதைத் தொட்டு மேலுள்ள இந்த மூன்று புள்ளிகளை தொடவும்
பின் அதில் Flag as inappropriate என்று காட்டும் அதை தொட்டுக் கொள்ளவும்
பின் இந்த Graphic violence ஆப்சனை தொட்டுக்கொள்ளவும்.
Google நம் பதிவை check செய்வாரகள். அதிக Report விழ விழ Google இந்த விளையாட்டை தடை செய்து விடும்.