அப்துல்கலாமின் நூறு பொன்மொழிகள்
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகின்றான்.
வெற்றி குறித்த நமது பார்வை திண்ணமாய் இருந்தால் தோல்வி
நம்மை பாதிக்கவே பாதிக்காது.
நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு ''நதி" போல… ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் "கடலாக"
அசுர உழைப்பாளிகள் காணும் கனவும் அசாதாரணமானவையாய்த்தான் இருக்கும்.
சிரமங்கள் உங்கள் வாழ்வை அழிக்க வருவதில்லை. உங்களின் சக்தியைப் பரிசோதிக்கவே வருகின்றன. அந்த சிரமங்கள் உங்களை நெருங்க சிரமப்படுமளவிற்கு உழையுங்கள்.
வெற்றி பெற்றவர்களின் கதைகள் உங்களுக்குத் தகவல்களை மட்டுமே அளிக்கும். தோல்வியடைந்தவர்களின் கதைகள்தான் வெற்றி பெறுவதற்கான வழிகளைச் சொல்லும்.
உன்னால் மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்.
எதிர்காலத்தை உன்னால் மாற்ற முடியாது. ஆனால் உன்னுடைய பழக்கங்களை உன்னால் மாற்றிக்கொள்ள முடியும். உன்னுடைய பழக்கங்கள் எதிர்காலத்தை மாற்றியமைக்க வல்லவை.
நீ கடைசியாய் செய்த தவறுதான் இப்போது உன்னுடைய முதன்மையான ஆசான்.
ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம். ஆனால் ஒரு சிறந்த நண்பன் ஒரு நூலகத்திற்குச் சமம்.
உங்கள் லட்சியத்தில் வெல்ல, ஒரு மனதாய் முன்னேறுதல் வேண்டும்.
துவண்டு விடாதீர்கள், முயன்றுகொண்டே இருங்கள். தோல்வியிடம் உங்களை நீங்களே விட்டுக்கொடுக்காதீர்கள்.
தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும்தான் தோல்வி என்னும் நோயைக் கொல்வதற்கான மருந்துகள்.
சவாலைச் சாதிக்கும் வாய்ப்பாக மாற்றுபவன் செல்வந்தன் ஆகிறான். சிறந்த தலைவனாகவும் ஆகிறான்.
போர் எக்காலத்திலும் பிரச்சனைக்கான விடையாய் இருந்ததில்லை.
உலகம் உன்னை அறிவதை விட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
இங்கே பயத்திற்கு இடமில்லை. வலிமை தான் வலிமையை அங்கீகரிக்கும். நாம் வலிமைமிக்க தேசமாய் நிமிர வேண்டும்.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!.
சான்றோர்களுக்கு மதம் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும் தளம், சிறியோருக்கு அவை சண்டை வளர்க்க பயன்படும் ஆயுதம்.
எப்படிப்பட்ட ஏழையாக இருந்தாலும் சரி, புறக்கணிக்கப்பட்டவராக அல்லது எளியவராக இருந்தாலும் சரி, யாருக்கும் விரக்தி மனப்பான்மை வந்து விடக்கூடாது என்பதைத்தான் எடுத்து சொல்ல விரும்புகிறேன்.
வெற்றிகரமான சாதனைக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம், அவை இலக்கு நிர்ணயம், ஆக்கப்பூர்வமான சிந்தனை, கற்பனை கண்ணோட்டம் மற்றும் நம்பிக்கை.
நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.
நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். அந்த அக்னியைக் கொழுந்துவிட வைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை.
நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எதற்க்கும் மண்டியிடுவது இல்லை.
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியக்) கனவு.
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்று விடும். கண்ணைத் திறந்து பார் அதை வென்று விடலாம்.
எங்கே இருதயத்தில் அறவொழுக்கம் இருக்கிறதோ அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும்.
உங்கள் முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அடுத்த முறை தோற்று விட்டால், உங்களுடைய முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன.
உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே… ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கு, உழைப்பவர்களுக்கு மட்டுமே சிறந்தவற்றை வழங்குகிறது.
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல… உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…
சிந்தனை என்பது மூலதனம், ஒரு நிறுவனம், ஒரு வழி, கடின உழைப்புதான் தீர்வு.
அனைத்து பறவைகளும் மழையின் போது தங்குமிடம் காண்கின்றன. ஆனால் கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதன் மூலம் மழையைத் தவிர்க்கிறது.
ஒரு மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்திக்கு ஒளி கொடுப்பதனால் இழப்பு ஒன்றும் இல்லை.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்,
உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும் நீ நீயாக இரு.
வாழ்க்கை என்பது...!
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
வெல்வோம், சாதிப்போம், வேதனைகளை துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்...!
ஒரு முறை வந்தால் அது கனவு.இரு முறை வந்தால் அது ஆசை.பல முறை வந்தால் அது இலட்சியம்.
வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன.
சிந்திக்க தெறிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை.
அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை. சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்தால் தான் சாதிக்க முடியும்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் நல்ல நண்பர்கள் தேவை, வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒர் எதிரியாவது தேவை.
நீங்கள் சூரியனை போல பிரகாசிக்க வேண்டுமானால் சூரியனை போல எரிய வேண்டும்.
வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை! பிறகென்ன கவலை?
திடமான மனத்துடன் வாழ்ந்தால் என்றென்றும் வளர்ச்சியடையலாம்!
நல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும்.
கடமைகளை வெற்றி, தோல்வி பாராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் புதிய பாதை நமக்காகத் திறந்தே இருக்கும்!
சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும்.
வெற்றி என்பது நம் நிழல் போல. வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது அது நம் பின்னால் வரும்!
மகத்தானவர் காணும் மகத்தான கனவுகள் எப்போதும் நனவாகின்றன.
சாவி இல்லாத பூட்டு இருக்காது! தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது!
சிறந்த நட்பு என்பது நண்பனின் நிலையறிந்து அவனுக்கு தக்க சமயத்தில் உதவுவது தான்.
உங்கள் குறிக்கோளில் வெற்றிபெற வேண்டுமானால்.. உங்கள் குறிக்கோளில் இருந்து சிறிதும் விலகாமல் அதீத சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
சாதிக்க வேண்டும் என்ற வேட்கை நம் ஒவ்வொருவரினதும் மனதிலும் இருக்க வேண்டும்! உண்டு உறங்கி காலத்தை கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை.
உங்கள் செயல்கள் உங்களுடன் மட்டும் நின்று விடுவதில்லை.. அது உங்களது குழந்தைகளின் பின்னே நிழல் போல தொடரும்.
தோல்வி என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் வரத்தான் செய்யும்.. இன்பம் என்ற ஒன்று இருந்தால் துன்பமும் உண்டு என்பதைப் போலத்தான் தோல்வியும்.
நாம் அனைவரிடமும் அன்புடனும்.. பண்புடனும்.. மரியாதையுடனும் பழகினால் பிறர் நம்மிடம் நல்ல நாகரிகத்துடன் நடந்து கொள்வார்கள்.
நமது ஆசைகளை குறைத்துக் கொல்வதில் தான் மனஅமைதி இருக்கிறது.. ஆசைகள் அதிகரித்தால் மன அமைதியை இழக்க நேரிடும்.
நமது வாழ்க்கையில் ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கம் மறையத் தொடங்கிறது.. ஆகவே ஆடம்பரம் ஆபத்து.. எளிமையான வாழ்க்கையே உண்மையான வாழ்க்கையாகும்.
தன்னடக்கம் கொண்டவர்களால் தான் இந்த உலகை ஆழ முடியும்.. அகந்தை, தற்பெருமை, ஊழல் கொண்டவர்கள் உயரத்தை அடைய முடியாது.
நீங்கள் இறக்கைகளோடு பிறந்தவர்கள், தவழாதீர்கள். மேலே மேலே பறக்க அதனை உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
மனிதர்களுக்கு கஷ்டங்கள் தேவை, ஏனென்றால் மகிழ்ச்சியை அனுபவிக்க அவை தான் காரணம்.
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், சிந்திப்பதை நிறுத்தாதே.. அதுதான் மூலதனம்.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே.
பொறுப்புடன் கூடிய சுதந்திரம் மட்டுமே தனிப்பட்ட மகிழ்ச்சியின் அடித்தளம்.
ஒரு தலைவர் எந்த அளவு சிறந்தவர் என்பதற்கு அளவுகோல் எது? அவர் எந்த அளவுக்கு தனது சகாக்களையும் அவர் தம் ஈடுபாட்டையும் பங்கேற்றுக் கொள்கிறாரோ அந்த அளவிற்கே அவர் சிறந்தவர்.
அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோசத்தை துரத்தி அலையாதீர்கள்.
வாழ்க்கையை நாம் எதிர்கொண்டு சமாளிப்பதை விட்டுவிட்டு அதை ஆராய்ந்துகொண்டு இருப்பது தான் பிரச்சினையாகிவிடுகிறது.
எதைச் செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு அதில் உங்களின் அதிகபட்ச ஆர்வத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துங்கள். அது உங்களை சுற்றி அன்பையும் மகிழ்ச்சியையும் பரவச் செய்யும்.
தொகுப்பு - குகன்