அண்மை

ஜியோ போன் நெக்ஸ்ட் வாங்க போறீங்களா? இத படிக்காம வாங்காதீங்க


இந்தியாவின் மலிவான ஸ்மார்ட் போன் என ஜியோ சொல்லும் ஜியோ போன் நெக்ஸ்ட் வாங்க போறீங்களா? இத படிக்காம வாங்காதீங்க... 


ஜியோ போன் நெக்ஸ்ட் இது செப்டம்பர் 10, 2021 விநாயகர் சதுர்த்தி  அன்று அனைத்து ரீச்சார்ஜ் கடைகளிலும் கிடைக்கும் என ஜியோ அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் உலக அளவில் சிப் மற்றும் செமிகண்டக்டர் தட்டுப்பாட்டின் காரணமாக இதன் அறிமுக தேதி நவம்பர் 4, 2021 தீபாவளி அன்று மாற்றி வைக்கப்பட்டது. 


உலகின் மிகவும் மலிவான ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை தயாரிக்கும்  முனைப்பில் ஜியோவும்-கூகுலும் இணைந்து களத்தில் இறங்கியது.  


இந்தியாவில் 33 கோடி வாடிக்கையாளர்கள் 2ஜி ஃபியுச்சர் போனை பயன்படுத்துகின்றனர் இவர்களை மேம்படுத்தும் திட்டமாகவே மலிவு விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் என்ற கனவை அனைவருக்கும் ஏற்படுத்தியது ஜியோ  நிறுவனம். தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சி செய்ததால் ஜியோ நிறுவனம் மேல் மக்களுக்கு அபிமானம் ஏற்பட்டது. 


உலகின் மிகவும் மலிவான விலையில் ஸ்மார்ட்போன் என்ற திட்டம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. யூடியூப் சேனல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையை கூறி பிரச்சாரம் செய்தனர். 


வெகுஜன மக்களால் 3000 இருக்கும் 4000 இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் நடந்த கதையே வேறு 


இதன் விலை Rs. 6499 


• 5.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே 


• Qualcomm Snapdragon QM215 ப்ராசஸர் 


• 2 GB RAM + 16 GB ஸ்டோரேஜ் 


• 13 MP ரியர் கேமரா 


• 8 MP செல்ஃபி கேமரா 


• 3,500 mAH பேட்டரி 


• ப்ரகதி OS (Pragati OS) 


மேற்கூறிய வசதிகளுடன்தான் வெளியாகியிருக்கிறது ஜியோ போன் நெக்ஸ்ட்.   இந்தியாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் இது எனத் தெரிவித்திருக்கிறது ஜியோ. இந்திய மக்களின் தேவைக்கேற்ப கூகுளும் ஜியோவும் இணைந்து உருவாக்கிய ஸ்மார்ட்போன் பாமர மக்களும், பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் டிஸ்ப்ளேவில் வரும் எழுத்துக்களை சத்தமாகப் படிக்க கூடியது.


இந்த ஸ்மார்ட்போனை முழுவதுமாக 6,499 ரூபாய் கொடுத்தும் வாங்கலாம், இல்லையென்றால் முதலில் 1,999 ரூபாய் செலுத்திவிட்டு தவணை முறையில் 4,500 ரூபாயைச் செலுத்தலாம். 


வாடிக்கையாளர் தவணை முறையை தேர்ந்தெடுத்தால் ரூ.1999 வுடன் ரூ. 501 சேர்த்து  செயலாக்க கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜியோ போனை இன்ஸ்டால்மென்டில் பெற நான்கு வகையான EMI திட்டங்களை வகுத்துள்ளது. இந்த நான்கு வகையான திட்டங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான ரீசார்ஜ் திட்டங்களும் அடங்கும். 


பயனாளர் அவரவருக்குத் தேவையான ஒரு நாள் டேட்டாவை தேர்ந்தெடுத்து EMI ஐ செலுத்தலாம்.



Always on Plan

            

இந்த திட்டம், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.300 அல்லது 18 மாதங்களுக்கு மாதம்தோறும் ரூ.350 செலவாகும். இதன் கீழ் JioPhone Next-இன் EMI செலுத்துவதுடன், பயனர்கள் மாதத்திற்கு 5GB டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு பலன்களையும் பெறலாம். 


Large Plan 

          

இந்த திட்டம், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.450 அல்லது 18 மாதங்களுக்கு மாதம்தோறும் ரூ.500 செலவாகும். இதன் கீழ் JioPhone Next-இன் EMI செலுத்துவதுடன், பயனர்கள் தினமும் 1.5GB டேட்டா மற்றும் அளவில்லா அழைப்பு பலன்களையும் பெறலாம்.


XL Plan

          

இந்த திட்டம், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 அல்லது 18 மாதங்களுக்கு மாதம்தோறும் ரூ.550 செலவாகும். இதன் கீழ் JioPhone Next-இன் EMI செலுத்துவதுடன், பயனர்கள் தினமும் 2GB டேட்டா மற்றும் அளவில்லா அழைப்பு பலன்களையும் பெறலாம். 


XXL Plan

          

இந்த திட்டம், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.550 அல்லது 18 மாதங்களுக்கு மாதம்தோறும் ரூ.600 செலவாகும். இதன் கீழ் JioPhone Next-இன் EMI செலுத்துவதுடன், பயனர்கள் தினமும் 2.5GB டேட்டா மற்றும் அளவில்லா அழைப்பு பலன்களையும் பெறலாம். 


ரூ. 6499 கொடுத்து வாங்கும் ஜியோ போன் 3500mAh திறன் பேட்டரி மட்டுமே கொண்டுள்ளது.   மேலும் சில நூறு செலவு செய்து முன்னணி நிறுவன மடல்கள் (Realme C11, Redmi 9, 9A) வாங்குவதன் மூலம் 5000mAh பேட்டரி திறன் கொண்ட மொபைல் வாங்க முற்படலாம். 


ஜியோ போன் நெக்ஸ்ட் இல் Dual SIM பயன்பாட்டில்  இருந்தாலும்கூட டேட்டா வுக்காக ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்றல் இதழ் 23

கருத்துரையிடுக

புதியது பழையவை