அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் தாவும் அசாத்திய திறமை, வலிமை பொருந்திய பலம், கையில் இருந்து பசை போன்ற நூலை விட்டு கடலையே கடக்கும் சக்தி, நல்லவர் எல்லாரையும் காப்பாற்றும் எட்டுக்காள் ஏழுமலை 'ஸ்பைடர் மேன்னின்' மற்றொரு திரைப்படம் திரையரங்குகளில் வரும் டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.
இந்த படத்துக்கு 'ஸ்பைடர்மேன் நோ வே ஹாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங், ஃபர் ஃபார்ம் ஹோம் படத்தின் தொடர்ச்சி ஆகும்.
எளிய மனிதர்களுக்கே புரியும் படியான கதை அம்சம் கொண்டதாகவும், சிலந்தி சக்தி பயன்படுத்தி சீறும் சண்டை, சாகசங்களாளும், சிரிக்கும் படியான காமெடிகள் நிறைந்ததாகவும் இந்த ஸ்பைடர்மேன் படங்கள் அபார வெற்றியுடன் பல ரசிகர்களை தாங்கியதாக இருக்கிறது.
மாணவராக இருக்கும் நம் கதாநாயகன் பீட்டர் பார்க்கர், தன் அத்தை அன்ட்மே உடன் வசித்து வருகிறான். ஒர் அறிவியல் கண்காட்சிக்கு செல்லும் போது, விபரித சிலந்தி அவன் விரல்களை கடிக்க, அவன் டி.என்.ஏ வில் ஏற்படும் மாற்றத்தால் சிலந்தி போலவே சுவரில் ஏறும் தன்மை, கையில் இருந்து கம் போன்று ஒட்டிக்கொள்ளும் வலை விடும் சக்தி ஆகியவை கிடைக்கிறது. மக்கள் யாருக்கும் அவன் உண்மையான முகம் தெரியாத படி கண்கவரும் ஆடையினால் மறைத்தும். சக்தியால் வில்லன்களை விரட்டி அடிப்பதே கதை அம்சம்.
*****
முதல் மூன்று ஸ்பைடர்மேன் படங்களை டாபி மேக்ரேவும் அடுத்த வந்த அமேசிங் ஸ்பைடர்மேன் இரண்டு படங்களை ஆண்ட்ரூ கார்பீல்டும் நடித்தனர். இந்த படங்கள், மார்வேல் காமிக்ஸ் படங்களுக்கு சம்பந்தம் இல்லாமல், ஒர் தனி கதையாக இயங்கியது. ஆனால் தற்போது ஸ்பைடர்மேன் ஹிரோவாக கலக்கி வரும் டாம் ஹாலன்ட், மார்வெல் படங்களான 'சிவில் வார்' மற்றும் 'அவென்சர்ஸ் இன்பினிட்டிவ் வார், எண்டு கேம்' போன்ற படங்களில் மார்வேல் காமிக்ஸ் கதையுடன் தொடர்புபடுத்திய கதையில் நடித்து வருகிறார். (ஸ்பைடர்மேன் படங்களை மட்டும் பார்த்து - மார்வெல் காமிக்ஸ் படங்களை பார்க்காதவர்கள், இப்போது வரும் ஸ்பைடர்மேன் நோ வே ஹாம் படத்தை பார்த்தால் கதை புரியும். கவலை வேண்டாம்!)
நான் சிறு வயதில் டாபி மேக்ரே நடித்த மூன்று ஸ்பைடர்மேன் திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். பின்பு அமேசிங் ஸ்பைடர்மேன் என்ற பெயரில் படம் வந்தது. அதில் வேறு ஒரு நடிகர் (ஆண்ட்ரூ கார்பீல்ட்) நடித்தார். ஒருவேளை டாபி மேக்ரே இனி நடிக்க வரமாட்டார் என்று இந்த படத்தில் ஆண்ட்ரூ கார்பீல்ட் நடிக்கிரார் என்று நினைத்தேன். தற்போது டாம் ஹாலன்ட் ஸ்பைடர்மேனாக நடிக்கிறார். சரி அதே போலத்தான் ஆகி இருக்கும் என்று நினைத்தேன். நீங்களும் அதுபோலவே நினைத்திருந்தால் அது தவறு!.
டீசி(DC) காமிக்ஸ் படங்கள் மல்டி யுனிவர்சஸ் கதை அமைப்பை கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் மார்வெல் (MARVEL STUDIOUS) மல்டி யுனிவர்சஸ் அமைப்புடிய கதைக்குள் இப்போது தான் அடி எடுத்து வைத்திருக்கிறது.
டிஸ்னி பிளஸ் ஆட் ஸ்டாரில் வெளிவந்த லோகி சீரிஸ் மூலம் மல்டி யுனிவர்சில் முதல் அடி எடுத்து வைத்தது. மல்டி யுனிவர்சஸ் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்; நாம் வாழும் உலகம் போலவே பல உலகம் இருக்கும் அதில் நம்மை போலவே அந்தந்த உலகத்தில் ஒருவர் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பார்.
அதே போல தான் முதல் மூன்று பாகம் கொண்ட ஸ்பைடர்மேன் படங்கள் ஒர் யுனிவர்சில் நடப்பதாகவும், அடுத்து வந்த இரண்டு பாகம் கொண்ட அமேசிங் ஸ்பைடர்மேன் ஒர் யுனிவர்சில் நடப்பதாகவும், இப்போது வெளிவந்த ஸ்பைடர்மேன் படங்கள் நம் யுனிவர்சில் நடப்பதாகவும் உள்ளது. இப்போது வர உள்ள படத்தில் இந்த மூன்று யுனிவர்சை சேர்ந்த ஸ்பைடர்மேன்கள் ஒன்றாக சந்திக்க இருப்பதாக ரசிகர்கள் கணித்தனர்.
இந்நிலையில், பொத்திப்பொத்தி பாதுகாக்கப்பட்ட ஸ்பைடர்மேன் நோ வே ஹோமின் காட்சிகள் இணையதளத்தில் கசிய சோனி பிக்சர்ஸ் அவசர அவசரமாக 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' டிரைலரை வெளியிட்டது. அதில் டாக்டர் ஸ்டிரேன்ஜ், கால வரிசையில் கைவைக்க மற்ற ஸ்பைடர்மேன்களின் யுனிவர்ஸை சேர்ந்த சூப்பர் வில்லன்கள்(Doctor Octopus, Green Goblin, Lizard, Electro, Sandman) ஆகியோர் வருவதாக காண்பிக்கப்பட்டது. டாக்டர் ஆக்டோபஸ் நம் யுனிவர்சை சேர்ந்த ஸ்பைடர்மேனிடம் "ஹலோ பீட்டர்" என்று சொல்லும் காட்சி வெறித்தனமாக இருந்தது.
இந்நிலையில் தான் இந்த படத்துக்கான எதிர்ப்பார்ப்பு வலுத்து வருகிறது. மற்ற யுனிவர்சை சேர்ந்த வில்லன்கள் மட்டும் வருவதாக காண்பிக்கப்பட்டது ஆனால் ஹிரோக்களான இரண்டு ஸ்பைடர்மேன்கள் வருவதையும் அவர்கள் நம் டாம் ஹாலண்டை சந்திப்பதாக காட்சிகள் இல்லை, சோனி பிக்சர்ஸ் இதை மறைத்து வருவதாக ரசிகர்கள் வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டனர். இப்போது இரண்டாவது டிரைலரும் வெளிவந்துவிட்டது, அதிலும் நம் டாம் ஹாலண்ட்டை மட்டுமே பார்க்க முடிகிறது. மற்ற ஸ்பைடர்மேன்களான டாபி மேக்ரே மற்றும் ஆண்ட்ரூ கார்பீல்டை கண்ணில் காட்டவே இல்லை.
''இன்னும் நீ எங்கள பைத்தியகாரனாவே நினைச்சிக்கிட்டு இருக்கீல'' என்றபடி சோனி பிக்சர்ஸ் நோக்கி ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் சோனி மற்றும் மார்வெல் அமைதிகாத்தே வருகிறது. எப்படியும் திரையரங்குகளில் விருந்து என்றாலும் இந்த குழப்பத்தை சோனி திரைப்படம் வெளியாகும் முன்பாவது சொல்லுமா? இல்லை படம் பார்த்தால் தான் தெரியுமா? என்பது அனைவரின் கேள்வி.
மூன்று ஸ்பைடர்மேன்கள் ஒன்றாக திரையில் தோன்றி ஆறு வில்லன்களை சாத்தி எடுக்கும் காட்சியை திரையில் காண வேண்டும்!
ஆவலுடன்,
எட்டுக்காள் ஏழுமலை ரசிகர்கள்
அறிவியல் பாடங்களை ஆசிரியர் கற்பித்ததை காட்டிலும் மார்வெல் திரைபடங்கள் தான் தெளிவாக புரியவைத்தன...
பதிலளிநீக்குஉலகளாவிய ரசிகபெருமக்களில் நானும் ஒருவன் என்பதை எண்ணி அடிக்கடி பூரிப்பேன்..
படம் வந்துவிட்டது...
பதிலளிநீக்குவிமர்சனம் போடுங்கள்....