புயலுக்கு முன் அமைதி
அடங்கி கிடந்த கொரோனா மீண்டும் தலைத்தூக்க தொடங்கி உள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் சிலர் இன்றும் அலட்சியம் காட்டுகிறார்கள். 2 டோஸ் தடுப்பூசி போட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு இதோ கொரோனா வந்துவிட்டது. அவரது ரசிகர்கள் எல்லோரும் கமல் குணமாக மயிலாப்பூர் கபாலி கோவிலில் தேர் இழுத்து கொண்டுள்ளார்கள்.
அதனால் புரிந்து கொள்ளுங்கள் இது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம்
2019 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா 2020 ஜனவரியிலேயே இந்தியாவிற்குள் வந்தது. பின் மீண்டும் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா, 2021 மார்ச் மாதம் இரண்டாம் அலையாக வந்து மூச்சைத் திணறடித்தது.
இன்று நாம் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். சென்ற ஆண்டுகளில் நடந்தது போலவே மீண்டும் கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை
பி1.1.529 என்ற கொரோனா வைரஸ் பரவிக் கொண்டுள்ளது. அதற்கு 'ஒமிக்ரான்' என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.
கொரோனா வைரஸின் மரபணு மாற்றப்பட்ட இந்த ஒமிக்ரான் தொற்று இப்போது தென் ஆப்பரிக்காவிலிருந்து பரவி இந்தியாவிலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமையில் உள்ளார்கள்.
பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது. சினிமா அரங்குகள் முழுமையான இருக்கைகளுடன் செயல்படுகிறது. முககவசம் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக காய்கறி கடைகள், பேருந்து நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் என வந்து போய் கொண்டு தான் உள்ளார்கள்.
இன்னும் பலர் முதல் டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை.
இதோ பொங்கல் வரப்போகிறது இதனால் நகர பெருக்கம் இன்னும் அதிகமாகும்.
அரசின் முன்னேற்பாடு என்னவென்று பலர் வினவுகிறார்கள். தனிமனித முன்னேற்பாடே இப்போது அவசியமாகும்.
புயலுக்கு முன் அமைதி ஆவதால் நாம் ஏமாறுகிறோம்! வந்த பிறகு புயல் நடுவில் குடை விரிப்பதை காட்டிலும் குடில் புகுவதே நல்லது.
ஆசிரியர்
தலையங்கம் தலைப்பில் வையுங்கப்பா..
பதிலளிநீக்குவால்அங்கமா இருக்கு..
அதுவும் ஆட்டின் வால்போல குட்டையா இருக்கு!