அண்மை

இந்த வார 5 சுவை மிக்க செய்திகள்

 


1) நஷ்டத்தில் பேடியம்


டிஜிட்டல் உலகில் முக்கிய இடம் வகிக்கும் PAYTM நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா தங்களது நிறுவனமான ONE 97 கம்யூனிகேஷன் பங்குகள் 27% குறைந்ததை எண்ணி பங்குகள் மூலம் 10000 கோடி நிதி திரட்டும் விழா மேடையிலேயே கதறி அழுதார்.


2) ஹாரிஸ் ஜாக்பாட்


அமெரிக்க அதிபரான 78 வயது ஜோ பைடன் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். புற்று நோய் சம்மந்தமான மருத்துவ பரிசோதனை மயக்க மருந்து கொடுத்துதான் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் அமெரிக்காவில் அதிபராக யாரும் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்திய வம்சாவளி துணை அதிபர் கமலா ஹாரிஸ் சில மணி நேரங்களுக்கு அமெரிக்க அதிபராக நியமிக்கப்பட்டார்.


3) ஜஸ்ட் மிஸ் மருத்துவர்கள்


மருத்துவத்துறை சார்ந்த கல்விக்கான நீட் தேர்வில் CBSC கல்வி படிக்காமல் மாநில கல்வி திட்டத்தில் படித்த 66% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் எழுதியதில் ஐம்பத்து எட்டாயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்தவர், அகில இந்திய அளவில் 23 ஆவது இடம் பிடித்துள்ளளார்.

முதல் 50000 தேர்வாளர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 3800 பேர்தான். பாக்கி எல்லாம் ஜஸ்ட் பாஸ் தான்.

ஆனால் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தமுள்ள 9000 MBBS இடங்களில் சுமார் 600 இடங்கள் மதிப்பெண் குறைவாக எடுத்தவர்களுக்கும்

கிடைக்கும்.


4) உதவிக்குதவி


ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 63 வயதான திருமதி மினாட்டி பட்நாயக்.

அவருடைய கணவர் குருஷ்ன குமாரும் அவரது மகளும் ஆறு மாத இடைவெளியில்

இறந்துவிட்டார்கள்.

நிராதரவான அவருக்கு சொந்தங்களோ,

சொந்த தங்கையோ எந்த உதவியும் செய்யவில்லை.


ஆனால் அவர் கணவர் காலத்தில் இருந்து 

புத்தா சமால் ரிக்ஷா ஓட்டநர் எல்லா உதவிகளையும் செய்து வந்தார்.

டாக்டரிடம் அழைத்து செல்வது மளிகை சாமான்கள் வாங்கி கொடுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.

உடம்பு சரியில்லாத போது அவர் மனைவியை அனுப்பி சமைத்து கொடுக்க சொல்லுவார்.

அவரது அன்பை கண்டு நெகிழ்ந்த மினாட்டி அவரது மூன்று அடுக்கு மாடி வீட்டை ரிக்ஷாக்காரர் புத்தா சமாலுக்கே எழுதி வைத்து விட்டார்.


5) மாட்டுக்கு மந்தரம்


மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் நயோகான் எனும் கிராமத்தில் வசிக்கும் 45 வயது பாபுலால் ஜாதவ் என்ற விவசாயி 

தனது எருமை மாடு குறைவாக பால் கறப்பதாக கூறி எருமை மாட்டுடன் வந்து நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். 


தன் மாட்டுக்கு மாந்ரீகம் மூலம் பில்லி சூன்யம் வைத்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தினார். 

நீண்ட  பேச்சுவார்த்தைக்கு பின் மாட்டை கால்நடை மருத்தவரிடம் போலீசார் அனுப்பி வைத்தனர்.

தென்றல் இதழ் 25

1 கருத்துகள்

புதியது பழையவை