ஏர்டெல் புதிய கட்டணம்
ஏர்டெல் தொலை தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கடுமையான கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
மாதாந்திர AVPU (AVERAGE REVENUE PER UNIT) ரூ 200 என்பதை பராமரிக்கவே இந்த கட்டண உயர்வு என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதது.
இதன்படி மினிமம் ரீசார்ஜ் ரூ79 என்பது 99 ஆக மாற்றப்பட்டுள்ளது.
சிம் உயிரோடு இருக்க வேண்டுமானால் மாதம் 99 வாடகையாக கட்ட வேண்டும்.
குறைந்த பட்ச நெட் Add ஆன் பேக் 48 என்பது 58 ஆகிவிட்டது.
தினமும் ஒரு GB கொண்ட 28 நாள் அன்லிமிட்டடு பேக் 219லிருந்து 265 ஆக மாற்றப்பட்டுள்ளது.
249 என்பது 299 ஆகவும்
598 என்பது 719 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கஸ்டமர்கள் MNP போட்டு JIO நெட்வொர்க்கிற்கு மாறுவதால் ஏற்கனவே 480 மில்லியன் கஸ்டமர்களுடன் முதலிடத்தில் உள்ள JIO
பக்கம் மீண்டும் அதிஷ்ட காற்று வீச தொடங்கியள்ளது.
இதே கட்டணத்தை VI நிறுவனமும் அறிவித்துள்ளது.
கஞ்சா விற்கும் அமேசான்
அமெரிக்க ஆன்லைன் கம்பெனியான
அமேசான் ஈ காமர்ஸ் வர்த்தகத்தில் கொடிகட்டி பறப்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்தத் தளத்தில் கஞ்சா விற்பது இப்போது புகாருக்கு உள்ளாகி
இருக்கிறது.
கஞ்சாவின் சர்வதேச பெயரான MARIJUANA என்ற பெயரில் இது கிடைக்கிறது.
இந்தியாவில் கஞ்சா பெரும்பாலும் போதை பொருளாகவே பயன்படுத்தபடுகிறது.
அதனால் இது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இது மருந்து பொருளாகவே பல நாடுகளில் பயன்படுத்துவதால்
சர்வதேச அளவில் தடை இல்லை.
கஞ்சா விற்கும் அமேசான் மீது நடவடிக்கை எடுக்கும்படி
CAIT (CONFEDERATION OF ALLINDIA TRADERS)
அகில இந்திய வியாபார கூட்டமைப்பு புகார் கூறி உள்ளது.
48 கிலோ கஞ்சா விசாகப்பட்டினம் கோடவுனில் கைப்பற்ற பட்டதாக சுபாஷ் கோயல் தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தபட்ட பாம் தயாரிக்கும் கெமிக்கல்கள் தீவிரவாதிகளுக்கு
அமேசான் சப்ளை செய்தது புகாருக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
சல்யூட் ஜோதி
இந்திய இராணுவத்தில் 14 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்.
அதில் 14000 பேர் கூட பெண்கள் இல்லை.
சமீபத்தில் சென்னை. இராணுவ பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த 124 ஆண்களும்,
29 பெண்களும் அணிவகுப்பு நடத்தினார்கள்.
அதில் மிடுக்காக அணிவகுத்து சென்ற பெண் அதிகாரி ஜோதி நெய்ன்வால் எல்லோராலும் கவனிக்கப்பட்டார்.
கேலரியில் அமர்ந்து அவருடைய 9 வயது மகளும் 7 வயது மகனும் இதை கண்டு பெருமை அடைந்தார்கள்.
ஜோதி வேறு யாரும் அல்ல..
உத்தரகான்ட் மாநிலம் டோராடுனை சேர்ந்த இராணுவ அதிகாரி தீபக் நெய்ன்வாலின் மனைவி. இவர் காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் வெடிகுண்டு பாயந்து,
40 நாட்கள் கோமா நிலையில் இருந்து மாண்டவர்.
வெறும் நான்கு சுவற்றுக்குள் குடும்பத்தலைவியாக இருந்த ஜோதி தன் கணவன் வழியில் இராவணுத்தில் சேர்ந்து தனது கணவரது பணியை தொடர விரும்பினார். கணவரது நன்பர்கள் உதவி செய்ய அதற்குரிய புத்தகங்களை பெற்று சென்னையில் 11 மாத பயிற்சிக்குபின் இராணுவத்தில் சேர்ந்து லெப்டினென்ட் ஆக பணியாற்றுகிறார்.
ஆங்கிலம் கூட தெரியாத ஒரு கிராமத்து பெண் தனது கணவனுக்காக இந்த தீர்க்கமான முடிவெடுத்து எல்லோரது மனங்களையும்
வென்றுவிட்டார்.
ஐந்தறிவு அன்பு
சென்னை போரூரை சேர்ந்தவர் பிரசாந்த் மோகன்.
அவர் மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.
கன்று ஈனும் தரவாயில் உள்ள ஒரு எருமை மாடு மேய்ச்சலுக்காக பக்கத்து ஊருக்கு சென்று இருந்தது.அங்கு வலி ஏற்பட்டு ஒரு இடத்தில் கன்று ஈன்றுவிட்டது.
கேள்விபட்டு அங்கு வந்த பிரசாந்த், மாட்டையும் கன்றையும்
நண்பர் வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டார்.
மறுவாரம் நண்பர் ஒருவரை அழைத்து கொண்டு மாட்டையும் கன்றையும் அழைத்து செல்ல டூ வீலரில் வந்தார்.
கன்றை நண்பர் பிடித்து கொள்ள முதலில் கன்றை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வர எண்ணினார். கன்றுடன் புறப்பட்டதும்
தாய் எருமை கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு
ம்மா ம்மா என்று அலறிகொண்டே டூ வீலர் பின்னே ஓடியது.
சுமார் மூன்று கிலோமீட்டர் இவ்வாறு ஓடி வந்தது.
யானை குதிரை கூட வேகமாக ஓடிவிடும்.
மாட்டினால் ஓட முடியாது.
இருந்தாலும் கன்றின் மீது உள்ள பாசத்தால் அப்படி ஓடியது.
ஒரு டாட்டா ஏஸ் பிடித்து ஏற்றிவந்தால் என்ன என்று இதை பார்த்த ஊர்க்காரர்கள் பிரசாந்தின் மீது எரிச்சல் அடைந்தார்கள்.
எருமை மாட்டின் விலை 24 கோடி
இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த் ஜாங்கிட்.
இவர் ஒரு உயர் ரக எருமை மாட்டை வளர்த்து வருகிறார்.
அதற்கு பீம் என்ற பெயர் சூட்டி உள்ளார்.
அதன் எடை 1500 கிலோ. அதன் பராமரிப்புக்காகவும்
உணவுக்காகவும் மாதம் 2 லட்சம் செலவு
செய்கிறார்.
இதன் சிறப்பு என்னவென்றால் அதன் உயிரனு(Semen)
.25 ml ரூ500 வரை விற்பனை ஆகிறது.
ஓர் ஆண்டில் 2500மிலி வரை விற்பனை செய்து 50 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.
இந்த வகையில் பிறக்கும் எருமைகள் 30 லிட்டர் வரை பால் கறக்கிறது.
அந்த எருமைக்கு 24 கோடி வரை விலை வைத்து கேட்டு பார்த்து விட்டார்கள். அரவிந்த் ஜாங்கிட் கொடுக்க தயாராக இல்லை.
124 வயது பாட்டி மறைந்தார்.
உலகிலேயே வயதானவர் என்று தற்பொழுது கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்றவர் பிலிப்பைன்ஸ் நாட்டில்
1897 செப்டம்பர் 11 ஆம் தேதி பிறந்த பிரான்சிஸ்கோ சூசானோ.
அவர் மரனம் அடைந்து விட்டார்.
இச்செய்தியை அவர் வசித்த பகுதியின் மேயர் கபின்கலன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு பெண் இவ்வளவு காலம்
வாழ்ந்தது ஆச்சரியமான ஒரு செய்தியாகும்.
அவர் தனது உணவு பழக்க முறை பற்றி
குறிப்பிடும்போது காய்கறிகளையே அதிகம் சாப்பிட்டதாக கூறிஉள்ளார்.
அறிமுக போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சதம்
இந்திய நியூசிலாந்து பங்கு பெறும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஐந்தாவது விக்கெட்டுக்கு விளையாடிய IPL டில்லி கேப்பிடல்சின்
மும்பை வீரர் ஸ்ரேயாஸ் அய்யர்
தனது முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்தார். அவர் எடுத்த ரன்கள் 105.
ஏற்கனவே தனது முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்தவர்கள் சவ்ரவ் கங்குலி வீரேந்திர சேவாக், ஷிகர் தவான் பிரித்விஷா, பிரவீன் ஆம்ரே.
ஸ்ரேயாஸ் அய்யரின்
குருவான பிரவீன் ஆம்ரேயும் இதே கான்பூரில் முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கஸ்டமர்களுக்கு கஷ்டமப்பா...
பதிலளிநீக்குபெட்ரோல்
காய்கறி
கேஸ் சிலிண்டர்
மொபைல் ரீசார்ஜ்
ஒரு சராசரி மனிதனின் தவிர்க்க முடியாத மாதாந்திர தேவை நான்குமே இப்படி எகிறினால் என்ன செய்வது??