அண்மை

குறள் 388 வைத்து ஒரு படம்

 


பாடலாசிரியர்கள் பலர் தமிழ் இலக்கிய, புராணங்களை  தனது பாடல் வரிகளில் சேர்க்காது இல்லை.


நடிகர் தனுசு நடித்த, வேலையில்லா பட்டதாரி டூவில் கூட 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்


ஆகுல நீர பிற' என்ற குறளும் 'கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை


விடாஅர் விழையும் உலகு' என்ற குறளும் வரும். "வாழ்க்கைக்கு தேவையான எல்லாமே திருக்குறளில் இருக்கு சார்!" என்று கூட சொல்லுவார். இன்னும் பல படங்களில்கூட திருக்குறளை வைத்துக் கருத்துச் சொல்லுவர். 


தற்போது 'குறள் 388' என்ற படம் வெளிவர உள்ளது. இது திருக்குறளில் உள்ள 388 குறளின் பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த காலக்கட்டத்தில் நடக்கும் அரசியல் வைத்து வரும் ஒர் கமர்ஷியல் திரைப்படம் என்று திரைப்பட குழுவினர் கூறுகின்றனர். இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே வெளிவருகிறது. தெலுங்கில் இந்த படத்தின் பெயர் 'வோட்டர்'.


தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. இவர் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன். இப்படத்தில் நடிகையாக சுரபி நடிக்கிறார். இவர் இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இந்த படம் தன்னை கைதூக்கிவிடும் என்று நம்புகிறார் சுரபி.


"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்"


பொருள்: நீதிமுறை சரியாய் செய்து ஆட்சி முறை நடத்தும் மன்னவன் மக்களில் இறைவனை போல கருதப்படுவான்.


இந்த குறளை அடிப்படையாய் கொண்டே இந்த திரைக்கதை அமைய உள்ளது.


கதை எவ்வாறு  இருக்கும்? வாருங்கள் பார்போம்…


இந்த 388வது குறளில், ஒரு அரசன் நீதி முறை தவறாது இருந்தால் அவனே  மக்களால் கடவுள் போன்று கருதப்படுவான்! என்பது பொருள்.


கதாநாயகன் அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு வேலை பார்த்து வருகிறான். இல்லை படித்து வருகிறான். அங்கு இருக்கும் ஒர் பெண்ணை காதலிக்கிறான். இப்படியே காதல் அதிதீவரமாக உச்சம் அடைகிறது. இந்த சூழ்நிலைக்கு இடையில், அவன் மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவரோ இல்லை மிக முக்கியமான பதவியில் இருப்பவரோ, காதலிக்கு சமந்தப்பட்டவர்களை அல்லது கதாநாயகனுக்கு சம்பந்தப்பட்டவர்களை இல்லை பொதுமக்களை ஏதோ ஒரு  வகையில் ஏமாற்றுகின்றனர். இதை பார்த்த கதாநாயகனுக்கு நாட்டு மக்கள் துன்பம் அடைவதை பொறுக்க முடியாது கோபம் வருகிறது. அதனால் அந்த அமைச்சரை எதிர்க்கிறான். அதனால் பல துன்பங்களை பெறுகிறான். எப்படியோ அவரிடம் மக்களை காப்பாற்றியதன் மூலம் மக்களிடம் ஃபேமஸ் ஆகி அவனே அந்த பதவிக்கு வருகிறான். அவன் ஆட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்கின்றனர். இதனால் மக்களுக்கு அவன் இறைவனை போல கருதப்படுகிறான்!.


ஒரு நிமிடம்… இது முதல்வன் படம் கதை போல இருக்கிறதே??? 


இல்லை இது 'பரத் எனும் நான்' பட கதை போல இருக்கு! இல்லை இல்லை இது ரெண்டு பட கதை மாதிரி தான் இருக்கு!. நீங்கள் யோசிப்பது சரியே.


இந்த கதையை போலத்தான்  வேறு வேறு  திரைப்படங்களும் இந்நாட்டில் வருகிறது.  


இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்றால், 'பழைய கேசட்டை' அப்படியே திரும்ப போடாமல் திருக்குறள் 388-ன் பொருளை இக்காலத்தில் அப்பட்டமாக காட்டுவது போல வித்தியாசமாக எடுத்தால் தான் சிறப்பாக இருக்கும்.


படக்குழுவினர் 'ஒர் முதலமைச்சர் மக்களுக்கு இந்த நல்லதை செய்கிறேன் என்று அறிக்கை விட்டு அதன் மூலம் ஓட்டு பெற்று பதவிக்கு வருகிறார். அந்த அறிக்கையில் சொன்னபடி அவர் அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. அதை எதிர்த்து கதாநாயகன் என்ன செய்கிறான் என்பதே கதையம்சமாகக் கொண்டு காமடி, காதல் நிறைந்த படமா இருக்கும்' என்றனர். 


அதன்படி பார்த்தால், கதாநாயகன் முன்பு சொன்னது போலவே அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத வேலை பார்த்து (இல்லை வேலையே பார்க்காமல்) காதல் காவியம் பேசி வாழ்ந்து வர அந்த சூழ்நிலையில் தேர்தல் வருகிறது. கதாநாயகனுக்கு வேண்டிய ஒரு தேவையை குறித்து ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதாக அறிக்கை தந்து ஒர் முதலமைச்சர் போட்டி இடுகிறார். அவன் அவருக்கு ஓட்டு போடுகிறான். அவர் வெற்றியும் பெற்று முதலமைச்சராக பதவி பெறுகிறார். பெற்றவுடன் அறிக்கையில் சொல்லியபடி அவர் அதை நிறைவேற்றவில்லை. அதை எவ்வாறோ முயற்சி செய்து அவர் பதவியில் இருக்கும் போதே அவர் பதவி போகுமாறு செய்து இவன் முதலமைச்சர் ஆகிறான். அதன் மூலம் மக்கள் நலம் பெறுகின்றனர்.


இந்த யூகத்தின் படியே கதை அமைய வேண்டும்.  


சிலரோ 'கதையை எழுதிய பின்பு தமிழ் மொழியில் வெளியிட படத்தின் பெயரை யோசித்து பின்பு  ஒரு திருக்குறளை பொருத்தினால் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்து. 'குறள் 388' என்று வைத்துள்ளனர்' என்கின்றனர்.


எப்படியோ, இந்த படம் டைடிலின் மூலமே பலரிடம் இந்த படத்தினை குறித்து ஒர் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஒர் திருக்குறளை வைத்து ஒர் படமே வருகிறது என்றால் அது வரவேற்கத்தக்க படைப்பு!. 


'இந்த படத்தின் மூலம் தனது தமிழ் திரையுலக பயணம் தொடர்கிறது' என்று இந்த படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார். பார்போம்…


சினிமான்

தென்றல் இதழ் 28

2 கருத்துகள்

  1. படம் முதலில் வரணும்..

    அது இரண்டு நாளாவது ஓடணும்..

    அப்புறம் தான் விமர்சனம்.. கருத்து லாம்.. (அந்த சினிமாவுக்கும்சரி இந்த கட்டுஉரை க்கும் சரி)

    பதிலளிநீக்கு
புதியது பழையவை