அண்மை

ஒமிக்ரான் கோவிட் மாறுபாடு அறிகுறிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

 


நாம் வழி தெரியாத அடர்ந்த வனத்தில் மாட்டிக் கொண்டிருந்தோம். வழி தெரியவில்லை ஆனாலும் இது ஒரு வனம் என்றாவது நமக்கு முன்பு தெரிந்து இருந்தது. ஆனால் இன்றோ, ஏதோ ஒன்று சூழ்ந்துள்ள இடத்தில் நாம் ஒன்றும் புரியாது தத்தளித்து கொண்டுள்ளோம். 


ஆம்! ஒமிக்ரான் வைரஸ் பற்றி நம்மால் எதையுமே தெளிவாகக் கண்டறிய முடியவில்லை இருந்தாலும் இதுவரை ஒமிக்ரான் பற்றி உலக சுகாதார அமைப்பின் மூலம் அறிய முடிந்த அனைத்து தகவல்களையும் ஒரு தொகுப்பாக காண்போம்.


முதல் ஒமிக்ரான்


WHO வின் வைரஸ் பரிணாம வளர்ச்சியின் தொழிற்நுட்ப ஆலோசனை குழு 26 நவம்பர் 2021 அன்று தென் ஆப்பிரிக்க பகுதியில் B.1.1.529 என்ற கொரோனா திரிபு வடிவமைப்பை கண்டறிந்தது. அதற்கு ஒமிக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டது.


வைரஸ் வடிவமைப்பை பற்றிய தெளிவான செய்தி இன்னும் கிடைக்கவில்லை. ஒமிக்ரானின் படமானது இன்றுமே அறிவியல் வல்லுநர்களால் வரையப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ அறிவியல் வல்லுநர்கள் ஒமிக்ரானை பற்றிய துல்லிய தகவல்களை தெரிந்து கொள்ள இரவு பகலாக உழைத்து கொண்டுள்ளார்கள்.


ஒமிக்ரான் ஆரம்ப அறிகுறி


> நீடித்த காய்ச்சல்

> இருமல் 

> சோர்வு

> சுவை - வாசனை இழப்பு


ஒமிக்ரான் அடுத்தகட்ட அறிகுறி


> தொண்டை வலி

> கடுமையான தலைவலி

> வயிற்று போக்கு

> தோலில் சொறி

> விரல்களின் நிறமாற்றம்

> எரிச்சலூட்டும் கண்கள்

> சிவப்பு நிற கண்கள்


கொடிய அறிகுறிகள்


> மூச்சு திணறல்

> பேச்சு இழப்பு

> இயக்கம் இல்லாமை

> மனநிலை பாதிப்பு

> மார்பு வலி


குறிப்பு - இக்கொடிய அறிகுறிகள் உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடத்திலோ இருக்குமாயின் அவர் உடனடியாக மருத்துவரை காண்பது நல்லது.


இதையும் படிக்க : கொரோனாவுக்கு பின் வரும் மோசமான நாற்ற நோய்


WHO அறிவுரை


SARS-COV-2 வின் பிறழ்வு வடிவமான ஒமிக்ரானின் செயல்பாட்டை மேலும் துல்லியமாக அறிய உலக சுகாதார அமைப்பு (WHO) அனைத்து நாடுகளுக்கும் சில அறிவுரைகளை தந்துள்ளது.


இந்த கோவிட் மாறுபாடானது எந்த வகையில் பாதிப்பை தரும் என்பதை இன்றளவும் துல்லியமாக கணிக்க முடியவில்லை அதனால் WHO சொன்ன அறிகுறி பாதிப்புகளுக்கு மேலாக வேறு எந்த பாதிப்பை அறிய முடிந்தாலும் உலக சுகாதார அமைப்புக்கு உடனடியாக தகவல் அறிவிக்கப்பட வேண்டும்.


முந்தைய வைரஸ் ஒப்பீடு


டெல்டா வைரஸ் உடன் ஒமிக்ரான் வைரஸை ஒப்பிட்டு பார்க்கையில் ஒமிக்ரான் தொற்று மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.


அதுமட்டுமல்லாமல் ஒமிக்ரான் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியதா என்பதுமே இன்றளவும் தெளிவாகவில்லை. ஆனால் சிங்கப்பூர் அரசாங்கம் ஒமிக்ரான் வைரஸ் அத்தனை கொடிதானது அல்ல என அறிவித்திருப்பது ஆறுதல் தந்தாலும் அச்சம் தரும் வகையில் இப்போதுள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக செயலாற்றாது எனவும் டாக்டர்கள் தரப்பிலிருந்து தெரியவருகிறது.


தற்காப்பு நடவடிக்கை


இந்தியாவிற்கு ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை என்பது மிகவும் அவசியமாகிறது. காரணம் ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் இன்று மிக மிக குறைவு அதனால் 'வரும் முன் காப்பதே சிறப்பு'


எந்த ஒரு வைரஸ் நோய் தற்காப்பு நடவடிக்கைக்கும் முதலில் சமூக இடைவெளி ஊக்குவிக்கப்படுகிறது. 


இந்த புதியவகை பிறழ்வு (திரிபு) ஸ்பைக் ரிசெப்டர் பைண்டிங் டொமைன் தளத்தில் பலவகைப்பட்ட பிறழ்வுகளையும் மாறுபாடுகளையும் காட்டுவதால் நடப்பு தடுப்பூசிகள் பயனற்றதாக போக அதிக வாய்ப்புள்ளது.


அதனால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டோரும் மாஸ்க் அணிந்து மூக்கு கண் வாய் போன்ற துவார பகுதிகளில் கை வைக்காமல் இருத்தல் நல்லது.


கொரோனா தொற்றுக்கு கடைப்பிடித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் ஒமிக்ரான் தொற்றுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.


> சானிட்டைசர் பயன்படுத்துதல்

> இருமலின் போது தனிமையை அடைதல் அல்வது நாசியை கை மூட்டு வைத்து அடைத்து இருமுதல்

> ஒரு மீட்டர் சமூக இடைவெளி கடைப்பிடித்தல்

> காய்ச்சல் அறிகுறி தென்பட்டாலே வீட்டிலே முடங்குதல்


SARS-Cov-2 வின் பிறழ்வு வடிவமான ஒமிக்ரான் வைரஸின் அறிகுறி பாதிப்பு முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கை போன்றவையையும் WHO வின் அறிவுரையையும் தெரிந்து கொண்டதன் மூலமாக உங்களை காப்பதோடு இவ்வுலக மக்களையும் காத்திடுவீர்கள் என்று நம்புகிறோம்.

தென்றல் இதழ் 27

2 கருத்துகள்

  1. உரிய நேரத்தில் வந்துதித்த உகந்த பதிவு..

    தற்காப்புக்கு இது ஒரு முன்பதிவு.

    பதிலளிநீக்கு
  2. சூழ்நிலைக்கு ஏற்ற நேரத்தில் படித்த பதிவு

    பதிலளிநீக்கு
புதியது பழையவை