அண்மை

Spider-Man No Way Home விமர்சனம்

 


Peter Parker தான் Spider Man என்பதை உலகம் தெரிந்து கொள்கிறது. 😱 இதனால் தனிமனித சுதந்திரத்தையும் MIT கல்லூரி வாய்ப்பையும் இழக்கும் Marvel ஸ்பைடர் மேனான Tom Holland டாக்டர் Strange இடம் சென்று 'உலகத்தில் உள்ள அனைவரும் நான் தான் ஸ்பைடர் மேன் என்பதை மறக்க வேண்டும்' என்று கேட்கிறார். ஸ்பைடர் மேனுக்கு உதவ நினைத்த Doctor Strange போடும் மந்திரத்தால் நமது Universe ஆனது Multi Universe உடன் தொடர்பு படுத்தபடுகிறது.

அதன் பிறகு நடப்பது தான் Spiderman No Way Home கதை. 😌


Multi Universe கதை ஆவதால் சிறு வயதில் நாம் பார்த்த பழைய வில்லன்களான டாக்டர் Octopus, கிரீன் காப்ளின், எலக்ட்ரோ, Sand Man, லிசார்டு போன்றோர் 

உட்புகுந்து மார்வெல் ஸ்பைடர் மேனை திகைப்படைய செய்து கதையை சூடுபிடிக்க செய்கிறார்கள்.


இருந்தாலும் விரைவில் வில்லன்களின் குறைகளை புரிந்து கொண்ட மார்வெல் ஸ்பைடர் மேன் அவர்களுக்கு உதவ நினைக்கிறார்.


இதனால் இவர்களை பிடித்து அவரவர் Universe-க்கே அனுப்ப முற்படும் மந்திரவாதி Doctor Strange-க்கும் Marvel Spider Man-க்கும் ஒரு Mirror World சண்டைக் காட்சியை இயக்குனர் Jon Watts வைத்துள்ளார்.


கண்களை ரம்மியமாக்கும் அது உண்மையில் மகா பிரம்மாண்டமான சண்டை காட்சி தான். 🤥


'மேஜிக்கை விடவும் சிறந்த ஒன்று எனக்கு தெரியும் அதான் மேக்ஸ்' என்ற வசனத்தில் அனல் தெறித்தது.


Avengers End Game-யில் வந்தது போலெல்லாம் இசையில் பெரிய மயிர்தூக்கி (goosebumps) எபெக்ட் எல்லாம் இல்லை. 😑


இடையிடையே வரும் தமிழ் வசனங்களும் படு மோசம். இன்னும் அதில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். 🤮


*SPOILER ALERT

ஒரு கட்டத்தில் வெவ்வேறு Universe-யில் இருப்பதாக காட்டப்படுகின்ற Columbia Pictures ஸ்பைடர் மேனும் (Tobey Maguire) Sony Pictures ஸ்பைடர் மேனும் (Andrew Garfield) நமது Marvel ஸ்பைடர் மேனும் (Tom Holland) சந்தித்து கொள்கிறார்கள். 🤫


இவர்கள் மூவரின் உரையாடல் ஆங்கிலத்தில் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை, தமிழில் ரொம்ப கடுப்பேற்றுகிறது. 😠


காமெடி என்ற பேரில் மொக்கை ஜோக்குகள் ஆங்காங்கே உள்ளது.


Aunt May கதாபாத்திரம் இத்தோடு முடிவடைவதையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.


'அப்பாடா… செத்துட்டா' என்ற குரல் கூட எங்களது பின் இருக்கையிலிருந்து கேட்டது. 😅


கிரீன் காப்ளின்க்கும் (Norman Osborn) நமக்கு பிடித்தமான முதல் ஸ்பைடர் மேன் Tobey Maguire-க்கும் வயது அதிகமாக தெரிந்தாலும் நடிப்பில் பட்டை கிளப்பி அதை மறக்கடித்தார்கள்.


MJ-வாக வந்த செண்டயாவும் Ned ஆக வந்த Jacob-க்கும் கூட நன்றாகவே நடித்திருந்திருந்தார்கள்.


Jacob டாக்டர் Strange யின் மந்திரத்தை பயன்படுத்தும் காட்சியெல்லாம் சிரிப்பாக இருந்தது. 😆


மொத்தத்தில் கடைசியாக ஸ்பைடர் மேன் யார் என்பதை மீண்டும் இந்த உலகமே மறந்தது. 😒


ஜவ்வாக இழுத்த இந்த கதை இனி வரப்போகும் Marvel படங்களுக்கு எப்படி பயன்பட போகிறதென்று தெரியவில்லை.


இதுக்கு பேசாம பருத்தி மூட்டை கொடவுன்லே இருந்திருக்கலாம்

100 க்கு 50 தான்


சினிமான்

தென்றல் இதழ் 29

7 கருத்துகள்

  1. பிரமாதமான விமர்சனம்..

    50 mark விமர்சனமே படம் பார்க்க தூண்டுகிறது..

    பதிலளிநீக்கு
  2. என்ன BOOMER BLUE SATTAI மாதிரி சொல்றீங்க. படம் அனல் தெறிக்கிது🤯💥. ஹாலிவுட் ரகசிகர்கள் எல்லாரும் இந்த படத்த மிஸ் பண்ணாம பாருங்க. 100/90 கொடுக்கலாம். மிஸ் பண்ணிங்கனா அப்பறம் வருத்தப்படுவீங்க😕

    பதிலளிநீக்கு
  3. அப்புறம் படம் முடிஞ்சோன அடுத்த படத்துக்கு முன்னோட்டம் போட்டானா இல்லியா?? அதை சொல்லமாட்றீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டாங்க, வேனம் படத்தின் ஹிரோவிடம் இருந்து ஒரு துளி வேனம் கிருமி பிரிந்து விட்டு அது நகர்கிறது. இது அடுத்த படத்தின் SPIDER MAN HOME SICK ல் வரும். அடுத்ததாக ஒர் போஸ்ட் கிரடிட் சீன் வெளியானது. நம் ஸ்பைடர்மேன் இந்த படத்தில் செய்த குழப்பத்தால் டாக்டர் ஸ்டிரேன்ஜ் பாதிக்கபடுவதாக சொல்லி, டாக்டர் ஸ்டிரேன்ஜ்ன் அடுத்த படமான DOCTOR STRANGE - MULTIVERSE MADNESS படத்தின் டிரைலர் போன்ற காட்சி வெளியானது அதில் இன்னொரு யுனிவர்சை சேர்ந்த டாக்டர் ஸ்டிரேன்ஜ் வருகிறார். அவர் பாக்க மாஸ் ஆக இருந்தார்🦹. அது அந்த படத்தை பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது😲🤑🤤🤤.

      நீக்கு
  4. படம் ரொம்ப நல்லாஇருக்குனு சொல்ல முடியாது. ஆனா பாக்கலாம். I think you should give 60 marks

    பதிலளிநீக்கு
புதியது பழையவை