அண்மை

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் apply

 


கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தான் இந்த அரும் பெரும் திட்டத்தை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தார்கள். ஆனால் இப்போது இது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.


கலைஞர் மருத்துவ காப்பீடு நீங்கள் Online மூலம் பெற வேண்டினால் இந்த கட்டுரையை கட்டாயம் முழுமையாக படிக்கவும்.


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யும் வழிமுறை 


இந்த திட்டம், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.120000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும்.


தகுதியுள்ள நபர் இந்த திட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்


  1. கிராம நிர்வாக அதிகாரியிடம் குடும்ப வருமான சான்றிதழை பெற வேண்டும்


  1. குடும்ப தலைவரோ அல்லது குடும்ப அங்கத்தினரோ ரேசன் அட்டையின் அசல் மற்றும் நகல், மற்றும் வருமான சான்றிதழுடன் மாவட்ட கியோஸிற்கு (E-சேவை மையம்) வர வேண்டும்


  1. மாவட்ட இ சேவை மையத்தின் ஆபரேட்டர், மேற்கூறிய ஆவணங்களை சரிபார்ப்பார்


  1. குடும்ப அங்கத்தினரின் (அடிப்படை) விவரங்கள் மற்றும் கைரேகை ஆகியவற்றை பதிவு செய்து அவர் பெயரை திட்டத்தில் பதிவு செய்வார்.


  1. குடும்ப அங்கத்தினரின் புகைப்படத்தை எடுத்த பின் இ-கார்டு பயனாளிக்கு கொடுக்கப்படும்


தகுதி


இந்த திட்டம், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.120000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம்.


குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்


2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்


3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்


மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து ஆறு மாதத்திற்க்கு அதிகமாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையிலிருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்.


இத்திட்டத்தில், முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்று இல்லாமல் சேரலாம்.


இங்கே கிளிக் செய்து படிவத்தை தரவிறக்கி Print Out எடுத்து, பூர்த்தி செய்து அதையும் மாவட்ட இ-சேவை மையத்திற்கு கொண்டு செல்லவும்.


கட்டுரையை முழுமையாக படித்த பின் படிவத்தை தரவிறக்கி கொள்ளுங்கள்.


மருத்துவ காப்பீடு திட்ட அட்டை எண்ணுடன் தங்களுடைய ஆதாரை இணைக்கும் முறை


  1. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் வலைத்தளத்தில் உள்ள Beneficiary என்ற tab ல் உள்ள "LINK TO AADHAAR TO URN"  கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செய்யவும் இடத்தில் தங்களுடைய 22 இலக்க தனிப்பட்ட குறிப்பு எண்ணை உள்ளிடவும் தங்களுடைய ஒப்புமையை அளிக்க ✔ செய்யவும்


  1. இப்பொழுது "ENROLL NOW" பட்டனை அழுத்தவும் பயனாளி வேறு பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவார். பிறகு பயனாளி தன்னுடைய குடும்ப அங்கத்தினரை தேர்வு செய்து அவர்களுடைய ஆதார் மற்றும் அலைபேசி எண்ணை அதற்குரிய பெட்டியில் உள்ளிடவும்.


  1. ஆதார் எண் மற்றும் அலைபேசி எண்ணை உள்ளிட்ட பிறகு "SUBMIT" பட்டனை அழுத்தவும். பயனாளிக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அவருடைய அலைபேசிக்கு அனுப்பப்படும். அந்த கடவுச்சொல்லை அதற்குரிய பெட்டியில் உள்ளிடவும்.


  1. தங்களுடைய ஆதார் எண் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்று காட்டப்படும். தங்களுடைய ஆதார் எண் ஏற்கனவே URN உடன் இணைக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காட்டப்படும்.


உங்களுக்கு மருத்துவ காப்பீடுத் திட்டம் apply செய்வதற்கான அனைத்து தகவல்களும் தரப்பட்டுவிட்டது.


இங்கே கிளிக் செய்து படிவத்தை தரவிறக்கி Print Out எடுத்து, பூர்த்தி செய்து அதையும் மாவட்ட இ-சேவை மையத்திற்கு கொண்டு செல்லவும்.


கலைஞர் தொடங்கி வைத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு apply செய்யும் வலைதளத்தை காண இங்கே தொடவும்

தென்றல் இதழ் 34

1 கருத்துகள்

புதியது பழையவை