நாம் தேர்ந்தெடுத்து இந்த வாழ்க்கையின் பிறப்பை வாழ்வது இல்லை. அப்படி இருக்க பலர் ஏன் இங்கு கடவுளை மறுக்கின்றனர்.
'கடவுளை சோதனை வரும் போது உணருவார்கள்' என்று கூறுவர். ஆனால் வாழ்வில் ஆச்சரியங்கள் நிகழும் போதும் கூட கடவுளை உணர முடிகிறது. அண்மையில் ஒரு செய்தி, மனித உடலுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இது போன்ற செய்தியினை கேட்கும் போது பல விந்தைகளை இறைவன் படைத்துள்ளான் என்பதை உணர முடிகிறது.
20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் கலந்து கொள்ளும் லாட்டரி சீட்டில் 1 கோடி பரிசு மன்னார்குடியில் உள்ள ஒருவருக்கு விழுகிறது. அடுத்து நடந்த குலுக்களில் அதே தெருவில் உள்ள வேறு ஒருவருக்கு விழுகிறது. 29 மாவட்டங்கள் இருந்தும் அதே மாவட்டம், அதே ஊர், அதே தெரு.
சட்டென சிலர் இதை 'ஏமாற்றி இருப்பார்' என்று கூட நினைக்கலாம்.
இது ஒரு சின்ன உதாரணமே.
உலகில் நடக்கும் அதிசயங்களையும், இயற்கையின் ரகசியத்தையும் பற்றி சிந்திக்கும் போது கடவுள் இருப்பதை உணர இயலும்.
உங்களது வாழ்விலும் இன்னல்கள் அதிகம் நுழையும் போது நீங்கள் இறைவனை காண்பீர்கள்.
எளிமையாக சொல்ல வேண்டுமானால், இங்கு எதற்குமே ஆற்றலை தர சக்தி வேண்டும். அதாவது, மனிதனானால் அவனுக்கு உணவும், நீரும் வேண்டும். வாகனமானால் எரிவாயு அல்லது மின்சாரம். இயந்திரமானால் மின்சாரம் ஏனைய ஆற்றல். அதே போல அண்ட சராசரங்களுக்கு என்னவாக இருக்கும்? கொஞ்சம் சிந்தியுங்கள்.
அது தான் இறைவன்.
நான் சொல்லவரும் கருத்தும் இதுவே.
கிறிஸ்தவனிடமும் இஸ்லாமியனிடமும் இருக்கும் கடவுள் நம்பிக்கையும் ஒற்றுமையும் இந்துகளிடம் இல்லை. இந்துகள் அப்படி இருப்பதும் இல்லை. ஏன் நான் இந்துக்களை குறிப்பிடுகிறேன் என்றால் தற்போது இந்துக்கள் தான் அதிகம் மதத்தினை மறுக்கின்றனர், கடவுள் இல்லை உறுதியாக கூறுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில்.
'நான் மதத்தை பற்றி பேசுவதால், மக்களை பிரிவு படுத்துகிறேன்' என்று எண்ணாதீர்கள். மதம் என்பது பிரிவு அல்ல. அது அவரவர்களின் நம்பிக்கை. ஆனால் அதை பலர் உணர்வதில்லை. மதத்தினை பிரிவாக நம்மிடம் விதைத்து பலர் அரசியலும், வியாபாரமும் செய்தார்கள், செய்கின்றார்கள்.
தெய்வீகம் என்பது ஒரு நிலை. அது அனைவோரையும் ஒன்றுபடுத்தும். மக்களை அன்புடன் வாழவைக்கும். அதை நம்பாமல் எதிர்ப்பவன்,
பிறவி பெருங்கடலில் நீந்த முடியாதவன் ஆகிறான்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இந்தியா தான் அனைத்து மதத்தவருக்கும் சம உரிமையை வழங்கிறது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்."
என்று வள்ளுவர் 972 வது குறளில் கூறுவதைப் போல இந்தியா விளங்குவதை என்னால் காண முடிகிறது.
அந்த 'சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' எனும் வரியை சில மூடர்கள் ஜாதியாக்கி விட்டார்கள்.
ஜாதி ஒழிய வேண்டிய நோய். ஏன் இதனை நான் நோய் என கூறுகிறேன் என்றால், சாதி என்ற ஒன்று மனிதனின் மூளையில் வந்து பின் தான் மேன்மையானவன் என்ற நோயாக உருவெடுக்கிறது. சாதி தான் பல்வேறு இழிவான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. மேல் கீழ் என்று இருப்பதால் கௌரவம் என்ற பெயரில் எத்தனை கொலைகள். கௌரவம் என்றால் வாழ்வில் யாருக்கும் அஞ்சாமல் வாழ்வதே ஆகும். அதுவே உண்மையான கௌரவம்.
ஜாதி தான் மனிதனை முட்டாளாக ஆக்குகிறது. ஜாதியில் தான் மேல் கீழ் என்று உள்ளதே தவிர மதத்தில் கிடையாது. மதம் மனிதனை பிரிவினை உண்டாக்குகிறது என்று கூறுவது வியாபாரம் என்பதை அறிய வேண்டும். மதம் தான் ஜாதியை உண்டாக்கியது என்பதும் மிகப்பெரிய மூடத்தனமாகும்.
அத்தகைய நன்னெறி வழங்கும் மதம் என்ற விளைநிலத்தில் ஜாதி மூட நம்பிக்கை போன்ற களைகள் போன்று விளைந்தால், அந்த களைகளை பிடுங்குவது பகுத்தறிவா? வயலுக்கே தீமூட்டுவது பகுத்தறிவா?
ஆன்மீகம் என்ற விருட்சத்தை மையமாக கொண்ட காட்டில் மனிதன் மதம் என் வழியை உண்டு செய்து அதை அடைய துணிந்தான். ஓவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்தமான வழியினை செய்து கொண்டார்கள். ஆன்மீகத்தை அடைந்தார்கள். அதனால் தான் மதத்திற்கு மார்க்கம் என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது.
ஆன்மீகத்தை அடைந்தவன் இன்னொரு வழியினை கேலி செய்வதில்லை.
காலம் போகும் போக்கில் இங்கு அனைத்து மதமும் நன்மையையே உரைக்கிறது. எந்த மதமும் தீமையை செய் என போதிக்கவில்லை. ஒவ்வொரு மதமும் அந்தந்த மதத்தவரை தீமைக்கு அஞ்சத்தான் போதிக்கிறது. அதை நம்புவதில் என்ன தவறு?
இங்கு யாருமே 100% ஒழுக்கம் கிடையாது. அனைவருமே தவறுகள் செய்வது இயல்பு. ஆனால் விவரங்களை அறிந்து பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அதுவே ஆன்மீகம் என்பதை அறியுங்கள். அதன் பிறகும் தவறுகளையே செய்வது தான் தவறு. தவறுகளை திருத்திக் கொள்ள மனிதனுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதை பயன்படுத்துபவன் உலகில் துன்பங்களை அனுபவித்தாலும், முக்தி அடைவான் என்பது உண்மை. அதை பயன்படுத்தாமல் தவறுகளையே திரும்ப செய்து கொண்டே இருப்பவன் இந்த பூமியிலேயே பிறந்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருப்பவன் ஆவான்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
மதத்தினை தனக்குள் மட்டும் வைத்து உணர்ந்து கடவுளின் திருவிளையாடல்களை ரசிப்போம். சாதி என்ற சாக்கடை பக்கம் மற்றவரை செல்லாமல் காத்து வைத்து உலகினை புனிதமாக மாற்றுவோம்.
கஷ்ட காலத்தில் மட்டும் வணங்கி பிற நேரங்களில் இறைவனை நம்பாமல் வாழும் அர்த்தமற்ற வாழ்வை விடவும் இறைவனை வேளைதோறும் வணங்குவதில் அர்த்தம் அதிகம் வரும்.
நம்புங்கள்
குறள்மகன்
நான் ஒன்றை அதிகம் நம்புகிறேன்
பதிலளிநீக்குஇன்று அறிவியல் வளர்ச்சி இறை நம்பிக்கையை ஏற்காததாய் இருக்கலாம்
ஆனால் வருங்காலத்தின் உண்மையான அறிவியல் இறைவனை தேடுவதாய் அமையும்
ஆமாம். இன்னும் ஒரு சதவீத அறிவியல் வளர்ச்சி கூட நாம் எட்டவில்லை என்று சில அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றனர். ஆனால் கடைசி சதவீதமான 100வது சதவீதத்திலே இறைவன் இருக்கிறான். அந்த அறிவியலையே வருங்காலம் தேடும்...
நீக்குபன்றியின் இதயத்தை பெற்றவன் பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டால், பன்றியை சாலையில் பார்க்க முடியாது. பின்னர் ஒரு லட்சம் கூட விலை போகும்.
பதிலளிநீக்குஉண்மை தான் 😅
நீக்கு