அண்மை

ஆன்லைன் எக்ஸாம் தரும் அல்லல் | பணம் கட்டியும் பேப்பர் செலவை மாணவர்களே ஏற்கும் அவலம்

 

ஆன்லைன் எக்ஸாம் தரும் அல்லல்

பல மாதங்களுக்கு பிறகு 2021 செப்டம்பரில் கல்லூரி வகுப்புகள் நேரடியாக நடைபெறத்தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலேயே செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை உயர்கல்வித்துறை அறிவித்தது.


'என்ன ஆன்லைனில் பாடம் நடத்துவீங்க… ஆனா பரிட்சைய நேர்ல வந்து எழுதனுமா… அதெல்லாம் முடியாது… we want offline exam… ச்சீ.. online exam' 


என்று கல்லூரி மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து கடுமையாக போராடி 2 மாத காலம் அவகாசம் பெற்றனர்.


அதன் படி அரசு சொன்னது என்னவெனில், 'இரண்டு மாதமும் ஆசிரியர்கள் நன்றாக மாணவர்களுக்கு பாடம் எடுத்து நேரடி தேர்வுக்கு தயாராக்க வேண்டும்…. இரண்டு மாதம் கழித்து அதாவது ஜனவரி 20 லிருந்து நேரடி தேர்வு வைக்கப்படும்' என்றது


அதன்படியே கல்லூரிகள் நடைபெறத்தொடங்கியது. 


மாணவர்களும் வந்தான் உட்கார்ந்தான் போனான் ரிப்பீட்டு என்றபடி இருந்தார்கள்.


இதற்கிடையில் 'புதியவகை கொரனா தாங்கோ… இந்தியாவுக்கு வந்துடுச்சி தாங்கோ… ஆல்ரெடி நாங்க பாவங்கோ… உடம்பு எப்புடி தாங்கும்… ஒமிக்ரான் வந்தது.


அதனால் மீண்டும் ஜனவரி 31 வரை கல்லூரிகள் மூடப்பட்டது. ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.


'சரி பிப்ரவரி வைப்பானு போல' என்று முனுமுனுத்த வாய் மூடவில்லை, வாயுள் லட்டை திணித்தார் அமைச்சர் பொன்முடி அவர்கள்.


இந்த லட்டு சிலருக்கு முழு இனிப்பாகவும் சிலருக்கு மூச்சடைப்பாகவும் இருப்பது வேறு விஷயம் எனினும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செம் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடக்கும் என்பது சந்தேகத்துக்கு இடமின்று உறுதியானது.


இதுகுறித்து அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு கூறியது என்னவெனில்:


தமிழகத்தில் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை நடக்கும். இந்த செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடக்கும். எல்லா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளிலும் ஒரே நடைமுறையே பின்பற்றப்படும். என்றார்


விடைத்தாளை எப்படி எப்போது தர வேண்டும்?


ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை தேர்வு முடிந்த பிறகு இ-மெயிலிலோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ அனுப்பலாம். அசல் விடைத்தாள்களை இரண்டு நாட்களுக்கு பிறகு கூட வந்து கல்லூரிகளில் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் செமஸ்டர் தேர்வு வழிகாட்டல் குறித்தான இன்ன பிற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். 


கரோனா காலத்தில் பாஸாகி போகும் மாணவர்களுக்கு (கொரோனா பேட்ச்) வேலை கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனால் நடைபெறவிருக்கும் கடைசி செமஸ்டர் தேர்வு நிச்சயமாக சுழற்சி முறையிலாவது நேரில் தான் நடக்கும்.


என்று அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறினார்கள்.


என் கருத்து


இந்த இக்கட்டான நிலையில் ஆன்லைன் தேர்வு வைப்பது சரியே. ஆனால் அரசு கொஞ்சம் இதையும் கருத்தில் கொள்ளவும்.


அரசு கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு தாளுக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 75 முதல் 150 வரை கட்டியுள்ளார்கள். 


தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களோ தாளுக்கு 750 - 1000 என கட்டியுள்ளார்கள்.


ஆன்லைன் தேர்வு என்பதால் காகித ஏற்பாட்டை மாணவர்களே செய்தாக வேண்டியுள்ளது. அதுவும் A4 பேப்பரை தவிர வேறு எதிலுமே எழுத கூடாது என்றும் கல்லூரி நிர்வாகங்கள் கண்டிப்பாக சொல்கிறது.


இதனால் ஒரு தாளுக்கு குறைந்தபட்சம் 25 முதல் 30 ரூபாய் வரை செலவாகிறது.


8 தாள் எழுதும் ஒரு மாணவனுக்கு இதுவே 200 முதல் 240 ரூபாய் வரை செலவை தருகிறது. 


இதில் முன் பக்கத்தை அனைவரும் Print Out எடுத்து வைக்க வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் சொல்வதால் அதற்கொரு தனி செலவு.


இவ்வாறாக ஒரு மாணவனுக்கு ஒரு செமஸ்டர் தேர்வை ஆன்லைனிலே எழுத 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை செலவாகிறது.


இத்தனை செலவையும் மாணவர்களே செய்யும் போது செமஸ்டர் தேர்வுக்கு ஏன் கல்லூரிகள் எப்போதும் போலான பணத்தை வசூல் செய்தார்கள்?


சரி நேரடி தேர்வு தான் நடக்கும் என்று நினைத்து கட்டணத்தை வசூல் செய்துவிட்டார்கள். போகட்டும்.


இப்போது ஆன்லைன் தேர்வு தான் நடைபெற போகிறது என தெரிந்துவிட்டதல்லவா… இரண்டே விஷயம் தான்


  1. கல்லூரிகள் வசூலித்த செமஸ்டர் தேர்வு கட்டணத்தில் காகித ஏற்பாட்டுக்கு செலவாகும் தொகையை மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும்


  1. அல்லது ஆன்லைன் தேர்வை அறிவித்த அரசாங்கமே மாணவர்களின் தேர்வுக்குறிய காகித ஏற்பாட்டை செய்து தர வேண்டும்


கொரோனா காலத்திலும் நடத்தாத பாடங்களுக்கு நடத்தப்படும் தேர்வு கட்டணத்தையும் முழுமையாக கட்டிய ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மேலும் செலவு தராத வகையில் கல்லூரி நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறேன்


வித்தியாசமாணவன்

தென்றல் இதழ் 34

3 கருத்துகள்

  1. அப்படி பேப்பர் தரவில்லை என்றால் காசு தந்தாலே போதும், நாங்கள் பேப்பர் கடைல வாங்கிக்கிறோம்....

    பல்கலைக்கழகங்கள் சம்பாரிக்கவே இப்படி குண்டக்க மண்டக்க வேலை செய்கிறது தமிழக அரசு😠😠


    இதற்கெல்லாம் பதிலே கிடைக்காது கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும் 🥴

    பதிலளிநீக்கு
  2. சில கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட இதில் பணம் பார்க்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. இதே படிப்பை வருடம் ஒரு லட்சம் வாங்கி கொண்டு கற்றுதரும்(?) கல்லூரியும் உள்ளது. செமஸ்டருக்கு 10000 என 20000 வாங்கும் கல்லூரி திருவாரூரிலேயே உண்டு. அதனால் பேப்பர் காசையெல்லாம் பெரிதாக என்னக்கூடாது. ஆனால் ஆன்லைன் எக்ஸாம், கொரனா குறைவதால் அதாவது காய்ச்சல் குறைவதால் தேவையில்லை.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை