அண்மை

சுடுநீரில் தேன் கலந்து குடித்தால் உண்மையிலே உடல் எடை குறையுமா?

 

சுடுநீரில் தேன் கலந்து

நீண்ட நாளாக பலருக்கு இருக்க கூடிய ஒரு சந்தேகம், 'அது எப்படி ஒரு பொருளை சாப்பிட்டால் உடல் எடை குறையும்? ஒன்றை வாயில் போட போட உடம்பு எடை ஏறத்தானே செய்யும், ஆனால் தேன் விஷயத்தில் மட்டும் அது வேறு கருத்தை முன்வைக்கிறார்களே?' என பலவாறான சந்தேகங்களுடனே தேனை சுடுநீரில் போட்டு உடல் எடையை குறைக்க வேண்டி பலர் குடித்து வருகிறார்கள்.


உண்மையிலே தேனை சுடுநீரில் போட்டு குடித்தால் உடல் எடை குறையுமா? என்பதை விளக்குவதே இக்கட்டுரை.


தேன் மற்றும் சுடுநீர்


தேனை சுடுநீரோடு கலந்து குடிப்பதற்கு முன்பாக தேன் பற்றியும் சுடுநீர் பற்றியும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.


தேன் உடல் சுறுசுறுப்பை மேம்பட வைப்பதற்கு ஒரு சிறந்த காரணியாகும். குறும்பர் இனத்து மக்கள் தங்களது வன பிரவேசத்திற்கு முன்பாக ஒரு கைகுவளை (டம்ளர்) அளவு காட்டுத்தேனை குடித்து கிளம்புவார்கள். அது அவர்களுக்கு சராசரியாக ஐம்பது மரங்களை ஏறி இறங்குவதற்கு ஊட்டம் அளிக்கிறது. சில சமயம் காலை முதல் மாலை வரை பசி எடுக்காதவாறும் செய்யும் அளவிற்கு சக்தி அளிக்கும் என்று அவ்வினத்து மக்கள் உரைக்கிறார்கள்.


உடல் தளர்வை நீக்கும் தேன், செரிமானத்திற்கு உதவும். ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கும். மேலும் முகப்பொலிவுக்கும் தேன் ஒரு காரணியாகும்.


சுடுநீர் சரியான செரிமான பண்பை அதிகப்படுத்தும் முக்கிய காரணியாகும். நரம்புகளின் இயக்கத்தை துரிதப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மன அழுத்தத்தை கூட சுடுநீர் தணிக்கும்.


சுடுநீர் தேன் எடையை குறைக்குமா


இப்போது இந்த இரண்டு நல்ல பொருட்களும் இணைவதால் என்ன நடக்கிறது என்பது தான் விஷயமே,


பயப்படவேண்டாம்! தேனை சுடுநீரில் கலந்து குடிப்பது விஷத்தினை உட்கொள்வதற்கு சமம் என்று பெரும்பான்யான ஆய்வுகள் கூறுகிறது.


தேனில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. சுடுநீரில் தேனை சேர்க்கும் போது 5-hydroxymethylfurfural அல்லது HMF ஐ வெளியிடும் இதனால் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பது மெதுவாக புற்றுநோயை வளர்ப்பதற்கு வழி வகுக்குகிறது.


எந்த ஒரு இயற்கை சர்க்கரை உள்ள பொருளையும் சூடாக்க கூடாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதில் தேனும் உண்டு. தேனை அதன் நிலையிலே அருந்துவது உடலுக்கு மிக நன்மை உண்டாக்கும். 


தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பச்சை தேன் குடிப்பது மிகவும் நன்மை மற்றும் பலன் அளிக்க கூடியவை. ஆனால் தேனை சூடான நீரிலோ பாலிலோ கலந்து குடிப்பது மிகவும் கேடானது.


பலர் உடல் எடையை குறைப்பதற்காக வெறும் வயிற்றில் ஒரு கைகுவளை வெதுவெதுப்பான நீர் மற்றும் தேனுடன் தங்களின் பொழுதை ஆரம்பம் செய்கிறார்கள்  இது உடலின் தேவையற்ற கொழுப்பை உறிஞ்சி உடல் எடை அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும் என்று கூறப்படுகிறது.  


தேன் செயற்கை அற்ற மலரில் இருந்து சேகரிக்கப்படும் இயற்கை இனிப்பு ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற, கனிமங்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.  இது இருமலை குறைக்க, மலச்சிக்கலுக்கு, தீ காயங்களை குணப்படுத்த என்று பலவகையில் பயன்படுகிறது.


இதை அனைத்தும் உண்மை ஆனாலும் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது மட்டும் பொய். அதே போல பாலில் தேன் கலந்து குடிப்பதால் தான் உடல் எடை அதிகமாகும் என்பதும் பொய் தான். வெறும் பாலை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிப்பதே உடலை அதிகரிக்க போதுமானதாகும்.


சுடுநீரில் கலந்த தேன் ஒரு மெதுவான விஷம். இது உடலில் 'அமா' என்று அழைக்கக்கூடிய நச்சுத்தன்மையை அதிகப்படுத்துகிறது. 'அமா' என்பது உடலின் சளியை நச்சுத்தன்மையாக மாற்றி பல நோய்களுக்கு வழிவகுக்கும் ஒரு காரணி ஆகும்.


உண்மையான தேன் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு தீங்கும் தராது. ஆனால் கடைகளில் டப்பாகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட தேன் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.


பச்சை தேனில் காணப்படும் மகரந்தம், என்சைம்கள், ஆக்ஸிஜனேற்றிகள் இதில் இருக்காது. 


அக்மார்க் போடப்பட்ட பெரும்பான்மை தேன்கள் கூட சர்க்கரை கரைசலை தேனீக்களை உண்ண வைத்து எடுக்கப்படும் பொய்யான சர்க்கரை தேன் தானே தவிர அக்மார்க் போடப்பட்டதால் அவை உண்மை தேன் ஆகிவிடாது.


உங்கள் உடல் எடை குறைய வேண்டுமானால் நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள், வேண்டாத உணவு பழக்கங்களை குறையுங்கள், நீச்சல் செய்யுங்கள், ஓடுங்கள் இன்னும் உங்களால் முடிந்த உடல் உழைப்பை தாருங்கள்.


சுடுநீரில் தேனை கலந்து குடிக்காதீர்கள். அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் தேனை சூடாக்கும் படி எதை செய்தும் அருந்தாதீர்கள்



தென்றல் இதழ் 38

3 கருத்துகள்

  1. எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம். சூடான நீரை குடிப்பது நல்லது என்கிறார். சிலரோ காலையில் எழுந்தவுடன் சூடான நீரை குடிப்பது நல்லது என்கிறார்கள். சிலர் நீரை சூடாக்கி அதன் சூடு தணிந்த பிறகு குடிப்பது நல்லது என்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் சுரம் வந்தால் சூடான நீரையே அருந்தவேண்டும் என்றும் கூறுகின்றனர். சூடான நீர் வயிற்று குடலுக்கு பாதிப்பு என்றும் கூறுகின்றனர். எத்தகைய முறையில் இதனை கையாள்வது?

    பதிலளிநீக்கு
புதியது பழையவை