அண்மை

தத்துவ கவிதைகள்

 

தத்துவ கவிதைகள்

நிலைத்த

இடத்தில்

நிம்மதி 

இல்லை,

நிம்மதி 

என்றும்

நிலைப்பது

இல்லை

👤 👤 👤 👤


நாணயமாய்

இருப்பது

நால்வரின்

முன்னே

நாணுவதை

தடுப்பது

👤 👤 👤 👤


காந்தியம்

தோற்பதில்லை,

பெரும்பான்மைக்கு

புரிவதில்லை,

அதனால்

வெல்வதில்லை

👤 👤 👤 👤


அவமானத்தை

சேகரியுங்கள்

ஆணவத்தில்

பயன்படும்

👤 👤 👤 👤


தருவதை ஏற்கும்

பக்குவம் வர

வருவதையே

இரண்டாக்குவான்

இறைவன்

👤 👤 👤 👤


நேரம்

பிடிவாதம்

செய்வதால்

இளைப்பாற

நேரமின்றி

நாம்

👤 👤 👤 👤


வாழ்க்கை

பக்கத்தில்

மோசமான

கையெழுத்து

காரர்களே

கவிதை

எழுதுகிறார்கள்

👤 👤 👤 👤


உயிர் கருணை

இல்லாத ஞானம்

உண்மையான

ஊனம்

👤 👤 👤 👤


துளிர்க்கும்

நம்பிக்கையில்

விதைப்பது

எல்லாம்

தெய்வத்தின்

அறுவடைக்கு

விளைச்சலாகிறது

👤 👤 👤 👤


ஊனம்

உற்றோர்

ஊக்கம்

ஆக்கும்

ஊக்கம்

பிறர்க்கு

👤 👤 👤 👤


எட்டாத

ஆசையை

காட்டிலும்

எட்டும்

தர்மம்

உயர்ந்தது

👤 👤 👤 👤


வெண்மைக்கும்

கருமைக்கும்

ஒரே

வேறுபாடு தான்,

எழுத்து

👤 👤 👤 👤


வெற்றியின்

முதல்படியே

செருக்கெனில்

மறு படியே

சறுக்கு

👤 👤 👤 👤


தன்-னில்

வலியவனே

வாழ்வான்,

தண்-னில்

வலியவன்

வாழவைப்பான்

👤 👤 👤 👤


நேசம்

அதிகமாகும்

போதே

அழுகை

உறுதியாகிறது

👤 👤 👤 👤


குறள்

அருளும்

தெருள்,

மருள்

நீக்கும்

பொருள்

👤 👤 👤 👤


பலன் கருதி

செய்யும்

பாசமும்

பாவமே

👤 👤 👤 👤


தண்டனையிலும்

தண்

இருப்பதே

தமிழ்

பாடமாகும்

👤 👤 👤 👤


பணம்

சொல்வதையும்

கேளுங்கள்,

அது ஜாதி

பார்ப்பதில்லை

👤 👤 👤 👤


உடற்குறை

பழிப்பவன்

உண்மையில்

மனக்குறை

உள்ளவன்

👤 👤 👤 👤


பணம்

மலமாகும்

அதை

கமலமாய்

ஆக்குவதே

தானம்

👤 👤 👤 👤


உயிர் அரிது

ஊன் அடுத்து

அடுத்தை

விடுத்து

கருத்தை

ஏத்து

👤 👤 👤 👤


மதம்

ஆன்மீகத்தை

தரவல்லது

ஆனால்

ஆன்மீகம்

ஒருபோதும்

மதத்தை

தருவதில்லை

👤 👤 👤 👤


இறைவன் அதிகம்

கொடுக்கிறாரா?

நீயும் அதிகம்

கொடுத்து

வாழ்வாய்

என்றவர்

நம்புகிறார்!

👤 👤 👤 👤


அறிவு வேண்டுமேல்

பிரிவு வேண்டும்

அறிந்தேன் 

யானிந்த 

உண்மை!

👤 👤 👤 👤


தீசன்


தென்றல் இதழ் 38

1 கருத்துகள்

புதியது பழையவை