இயற்கைக்கு எதிராக
மக்கள் திரும்பவே
மக்களுக்கு எதிராக
இயற்கையும் திரும்பியது
எந்த கொடியும் பூப்பதில்லை
மண்ணில் நட்ட மறுகணமே!
எந்த செடியும் காய்ப்பதில்லை
தண்ணீர் விட்ட மறுதினமே!
கோழியை பார்
காலையில் விழிக்கும்
குருவியை பார்
சோம்பலை பழிக்கும்
வெளியே குளிர்
பூக்களுக்கு மட்டும்
வியர்த்தது எப்படி?
பனி
லஞ்சம் தவிர்
நேர்மை நிமிர்
லஞ்சம் இல்லா உலகு
அதை நீ பழகு
கொக்கை பார்த்து கற்றுக்கொள்
வாழ்க்கையின் சூட்சமத்தை
நதியை பார்த்து கற்றுக்கொள்
வாழ்க்கையின் எதார்த்தத்தை
வண்ண கதிர்களின் பரவல்
என்பேனோ!
அவளுடைய வானவில் போன்ற
புருவத்தை
எப்படி வர்ணிப்பேனோ
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போது தான்
பூத்துகொண்டே
இருப்பாய்
ஊர்சுற்றும் சூழல் இன்று
ஊரடங்காக மாறியதே!
இணைந்து பேசிய இளமைபருவம்
இணைய தளத்தில் பேசுகிறது
என்னடா? இது
சொர்கத்துக்கு வந்த சோதனை
ஒவ்வொரு படியை கடப்பதும்
கடினமாகவே இருக்கிறது
சில வலிகளோடும்
சில வெற்றி தோல்விகளோடும்
வாழ்க்கை எனும் ஏணியில்
சிறைபிடித்த விரல்களுக்கு
பிரகாசத்தை தழுவியது
மின்மினி
வண்ணம் தீட்டப்படாத ஓவியம்
வார்த்தையில் அடக்கமுடியாத காவியம்
அப்பா!
சிறுவயதில் ருசிக்கு
சண்டையிட்டு பகிர்ந்தோம்
பக்குவப்பட்ட வயதில்
வலிகளைப்
பாசத்தால் பகிர்கிறோம்
கோபம் காட்ட யோசிக்கவில்லை
பாசம் பற்றி யோசிக்கவில்லை
ஆனாலும் உன்போல்
யாரையும் நேசிக்கவில்லை
தம்பி
புத்திசாலிகளால் படிக்கப்பட்டேன்
திறமைசாலிகளால் திறம்பட எழுதப்பட்டேன்
அறிவாளிகளால் அறியப்பட்டேன்
சாமானியர்களையும் சாதனையாளர்கள் ஆக்கினேன்
நான் புத்தகம்
எஸ் புஷ்பலதா
தென்றல் இதழில் இதுவரை எங்கும் வெளிவராத உங்களது படைப்புகளை வெளியிட விரும்பினால், 9843065735 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்பு கொள்ளவும் (அ) இங்கே தொடவும்
எநத கொடியும் பூப்பதில்லை மண்ணில் நட்ட மறுகனமே எந்த செடியும் காய்ப்பதில்லை தண்ணீர் விட்ட மறு தினமே. அருமையான வரிகள்.
பதிலளிநீக்கு