அண்மை

காதலர் தினம் சிறப்பு கவிதைகள்

 

காதலர் தினம் கவிதைகள்

தோட்டத்து

ரோஜாகள்

ஏளனம்

செய்யவே

ரோஜா

தினமும்

கடந்தது

இன்று

❤ ❤ ❤ ❤


பிழையும்

அழகாகிறது

கலையாய்

காணும்

கண்ணுக்கு

❤ ❤ ❤ ❤


உன்னை

கண்டு

வெட்கமடையும் என்

வெட்கங்களுக்கு

வெட்கமே

இல்லை

❤ ❤ ❤ ❤


எளிதல்ல

அவளை

பேச

வைப்பதும்!

அவளிடம்

பேச்சு

வைப்பதும்!

❤ ❤ ❤ ❤


காதல் தேடி

அலைந்த

இவனுக்கு

தேனிருக்கும்

வரையே

சுவை

❤ ❤ ❤ ❤


நிலவுக்கு

தெரியுமா?

நானங்கும்

நீயிங்கும்

நம்மை

தேடுவது

பற்றி

❤ ❤ ❤ ❤


சொல்லாத

காதல்

செல்லரிக்கும்

வரை

சொப்பனத்தின்

நிறை

❤ ❤ ❤ ❤


பார்த்தது

குறைவு தான்!

அது

கோர்த்து

வடித்த

கவிதை பல!

❤ ❤ ❤ ❤


செல்லும்

வழியெல்லாம்

பொய்களை

காட்டும்

கண்களே!

அது அவள்

இல்லை

❤ ❤ ❤ ❤


நினைத்ததெல்லாம்

எழுத முடிந்தால்,

'பென்'னவளும்

'மை'யவனும்

காகித

படுக்கையே

கதியாய்

இருப்பர்

❤ ❤ ❤ ❤


மனம்

ஒன்றியும்

பணம்

இன்றி

முடிகிறது

சில

நாடக

காதல்

❤ ❤ ❤ ❤


ஆறுதலை தேடுகையில்

அஞ்சுதலை வென்றேன்

நாணுதலை நேரிட

மூவுதலை கொண்டேன்

அங்கே

ரெண்டுதலை கொஞ்சிட

ஒருதலையாய் நின்றேன்

❤ ❤ ❤ ❤


நீ தந்த புத்தகத்தில்

நான் வைத்த

டைரி மில்க்

மீண்டு

வந்தது

கவராக…

❤ ❤ ❤ ❤


அழகான நாணம்

ஆணுக்கும்

பெண்ணுக்கும்

அரிதாக

வேணும்

❤ ❤ ❤ ❤


தவிப்பின்

தரப்பு

இனிப்பு

கார்ப்பு

துவர்ப்பு

கலப்பு

❤ ❤ ❤ ❤


தோற்றம்

தேற்றாது

தோல்வி

தேற்றும்

காதலே

அழகு

❤ ❤ ❤ ❤


பூவைத்தானே

பூவைத்திருக்க

பார்வை

ஏனோ 

பாவை மீதே

❤ ❤ ❤ ❤


வான் வழி 

நீர் அவள் 

விரல் வழி

வந்து, 

விழி வழி

வழிவதே

விதியாகிறது!

❤ ❤ ❤ ❤


கல்யாண

காலத்தில்

கடை பார்வை

கணவனுக்கு

கடன் !

❤ ❤ ❤ ❤


உதட்டின்

தயக்கம்

கண்ணுக்கு

புரிவதில்லை,

சிரித்துவிடுகிறது

❤ ❤ ❤ ❤


இரு தரப்பினருக்கும்

இனிய காதலர் தின வாழ்த்துகள்


❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤


தீசன்

தென்றல் இதழ் 37

3 கருத்துகள்

  1. சங்க காலத்தில் தோழி காதலுக்கு தூது போனாள். இப்போது உள்ள காதலுக்கு காட்பரி டைரிமில்க் போதும். சாதா காதல் கூட காவியக் காதலாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  2. இதை பயன்படுத்த போகிறேன்

    உன்னை

    கண்டு

    வெட்கமடையும் என்

    வெட்கங்களுக்கு

    வெட்கமே

    இல்லை

    பதிலளிநீக்கு
புதியது பழையவை