அண்மை

நுகர்வோர் தினம் கட்டுரை/பேச்சு போட்டி குறிப்புகள்

உணவு பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள்



இதையும் காண்க

உணவு பொருள் வீணாவதை தடுத்தல் கட்டுரை

தவறான விளம்பரம் தரும் பாதிப்பு கட்டுரை

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்


இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வு தன்மையை பாதுகாக்கும் பொருட்டு 1986 ஆம் ஆண்டு ஜூலை 1 இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கட்டுரையில் உணவு பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக காண்போம்


இந்த சட்டம் தரும் உரிமைகள்


1) உயிருக்கும் உரிமைக்கும் தீங்கு தரும் பொருட்களை விற்பனை செய்தல் கூடாது.


2) நேர்மையற்ற விலை மற்றும் நேர்மையற்ற விற்பனை பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாத்தல்


3) பொருட்களின் தரம், தூய்மை, விலை, கொண்டுவரப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் ஆகியவற்றை மறைமுகமின்றி வெளிப்படையாக தெரிந்து கொள்வதற்கான உரிமைகள்


4) பொருட்களை போட்டி விலைகளில் வாங்குவதற்கான உரிமை


5) நுகர்வோரின் குறைகளை கேட்கவும், அவர்களின் எந்த குறைகளையும் கேட்டு ஆராய்ந்து பதில் அல்லது நடவடிக்கை ஏற்படத்தவும் அரசு உதவி புரியும் 


6) விழிப்புணர்வும் அவர்களின் பிரச்சனைகளை எளிதாக தீர்க்க விரைவான வழிவகையும் ஏற்படுத்தும் உரிமை


இதையும் காண்க

உணவு பொருள் வீணாவதை தடுத்தல் கட்டுரை

தவறான விளம்பரம் தரும் பாதிப்பு கட்டுரை


உணவு பொருள் வீணாவதை தடுத்தல்


உணவு பொருள் வீணாவதை தடுத்தல்

900 கோடிக்கும் மேல் இருக்கும் இந்த உலகில் சுமார் 85 கோடிக்கு மேலான மக்கள் தினமும் உணவின்றி தவிக்கிறார்கள்


உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் 1 பங்கு உணவு பொருட்களானது வீணாகி அழிகிறது. இதனால் இந்த உணவை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு, பணம், நேரம், கனிம வளம் என அழைத்துமே வீணாகிறது.


சிக்கனம்


சிக்கனமாக உணவு பொருளை பயன்படுத்துதலை அறிதல் வேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அந்நாளை கடக்க முயற்சி செய்யுங்கள். காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தலாம். சரியாக குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தும் போது உணவு பொருள் வீணாவதை 65% தடுக்க முடிகிறது என்பதை அமெரிக்க ஆய்வு சொல்கிறது.


ஹோட்டல் தவிர்க்கவும்


மதிய உணவை வேலைக்கு செல்வோர் ஹோட்டலில் சென்று உண்பார்கள். பெரும்பாலான மக்களுக்கு உணவு பொருள் கிடைக்காமல் அவைகள் குப்பை தொட்டிக்கு செல்ல உணவகங்கள் துணை செய்கிறது. ஹோட்டலில் ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் உணவில் நூற்றில் 30% குப்பை தொட்டிக்கு செல்கிறது.


மதிய உணவை காலையிலேயே எடுத்து செல்வதன் மூலம் ஹோட்டல்கள் தங்களது உற்பத்தி அளவை குறைக்கும் இதனால் பெருமளவு உணவை சேமிக்கலாம்


நூதன திட்டம்


உணவு வீணாவதை தடுக்க லண்டன் நகரத்து மக்கள் தங்கள் வீடுகளில் வீணாகும் பொருட்களை ஒரு பொது இடத்தில் சேமிக்க தொடங்கினார்கள். உணவுகள் தேவைப்படுவோர் அந்த இடத்திலிருந்து இலவசமாக உணவினை கொண்டு செல்லலாம். இதுபோன்ற திட்டங்களை அரசு கொண்டுவர பெருமளவு உணவு வீணாவதை தடுக்கலாம்.




கவனம் தேவை


பொருட்களை வாங்கும் போது கவனம் அவசியம். விரைவிலே காலாவதி ஆகும் பொருட்களை உணவிற்காக வாங்கும் போது அதை கவனமுடன் சரிபார்த்து வாங்குதல் வேண்டும். இது உடல் நன்மை மட்டும் அல்லது உணவு பொருள் வீணாவதை தடுக்கவும் உதவுகிறது.


தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள்


தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள்

சமூக வலைதளங்களில் பொய்யான விளம்பரங்கள் பெருகிவிட்டது. அழகான சருமத்தையும், உடனடியாக வளரும் முடியையும் காட்டி மக்களை விளம்பரங்கள் ஏமாற்றுகிறது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என கூறி சேர்வோர் அனைவருக்கும் கணினி வழங்குவோம் 100% வேலை உறுதி என்று தவறான வேலைவாய்ப்பு விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.


இதுபோன்ற விளம்பரங்கள் மக்களிடையே அதிக தாக்கத்தை  ஏற்படுத்தும். ஆனால் இவைகள் இந்திய விளம்பர சட்டங்களுக்கு எதிரானவை என்பதையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்


மருந்து பொருட்கள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் என அனைத்து விளம்பரங்களுக்கும் தரநிர்ணய சட்டம், கேபிள் தொலைக்காட்சி சட்டம் என்று பலவாறான சட்டங்கள் உள்ளது.


பொய்யான காட்சியமைப்பு


விளம்பரங்களில் சில விளம்பரங்கள் நமக்கு பொய்யான காட்சியமைப்பை காட்டும். அவை நமக்கு பொய்யானவற்றையே காட்டுகிறோம் என்பதற்கு சான்றாக தொலைக்காட்சியின் கீழே மிக சிறிய எழுத்துரு வடிவில் *இவை அனைத்தும் கற்பனை காட்சியே என்று குறிப்பிட்டு இருப்பார்கள்


மக்கள் தாங்கள் கண்டவற்றையே உண்மையென கருதி விளம்பர பொருளை பயன்படுத்தி ஏமாற்றமடைவர். இதுபோன்ற விளம்பரங்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் முடியாது காரணம், அவர்கள் தங்களது நிலையை கீழே ஒரு சிறிய எழுத்துருவில் தந்துவிட்டார்கள். 


ஆன்லைன் விளையாட்டு, இன்ஸ்சூரன்ஸ் விளம்பரம் என அனைத்தும் தங்களது நிலையை Terms and Conditions னாக கொடுக்க வேண்டும் என்பது சட்டமாகும்.


இன்னும் சில உடல் நலம் சார்ந்த விளம்பரங்களில், கிருமிகள் அழிவது போன்று காட்டி ஒரே ஒரு கிருமி மட்டும் அழியாமல் இருப்பதாக காட்டுவார்கள்.


இதுபோன்று காட்டுவதற்கு காரணம், பின்னாளில் நம் உடல் நலத்தில் ஏதும் பிரச்சனை வந்தால் அந்த விளம்பரத்திலும் நாங்கள் முழுவதுமாக கிருமிகள் அழியும் என்று காட்டவில்லையே என்று கூறி தப்பித்து கொள்வார்கள்.


இதுபோன்ற பொய்யான விளம்பர உலகில் நாம் நமது அறிவை விரிவு செய்து மெய்ப்பொருளை காண வேண்டும்.


விளம்பர கட்டுபாடுகள்


பொதுவாக விளம்பரங்கள் இவ்வாறு தான் அமைய வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக வாகனங்கள் பற்றிய விளம்பரத்தில் தலைகவசம் அணிந்து இருப்பதாக காட்ட வேண்டும். காரில் அமர்ந்து இருப்பவர் சீட் பெல்ட் போட்டு இருப்பதாக காட்ட வேண்டும். உணவு பொருள் விளம்பரத்தில் அது சைவமா அல்லது அசைவமா என்பதை குறிப்பட வேண்டும். இப்படியான கட்டுபாடுகள் தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கும்.


முடிவு


நுகர்வோர் சட்டங்களை பற்றியும் உணவு பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல் பற்றியும் தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவையும் இந்த கட்டுரையில் முழுமையாக தரப்பட்டுள்ளது பயன்படுத்தி கொள்ளவும்.



கருத்துரையிடுக

புதியது பழையவை