அண்மை

கொரோனா கால கதாநாயகர்கள் கட்டுரை

 Corona Kala Katha Nayakarkal Katturai

corona kala katha nayakarkal katturai


முன்னுரை


உதவி என்பது பிறருக்கு நம்மால் இயன்றவற்றை செய்தலே!. 'உதவி செய்வதனால் உங்கள் உயிருக்கே ஆபத்து என்றால்? அதை எவராது செய்வார்களா? ஆனால் தங்களது உயிரைப் பற்றி அணுவளவும் கருத்தில்கொள்ளாது கொரோனா காலத்தில் உதவி செய்த உண்மையான மனிதர்களை, காலம் நமக்கு தந்த கதாநாயகர்கள் என்று கூறுவதில் எந்தவித தவறும் இல்லை. இந்த கதாநாயகர்களை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம். கட்டுரை PDF கீழே உள்ளது


மனிதம் காத்த மருத்துவர்கள், சேவை செய்த செவிலியர்கள்


தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இறந்த ஒருவரின் சடலத்தை அந்த ஊர் மக்களே அடக்கம் செய்ய அஞ்சிய போது, எவ்வித பயமும் இன்றி ஓர் உயிருக்கு மதிப்பளித்து அடக்கம் செய்தவர் ஒரு மருத்துவர் தான்.


மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா காலத்தில், கொரோனா என்ற பெரிய  நோயுடன் நேரடியாக சண்டையிட்ட உன்னத கதாநாயகர்கள் என்று சொல்வது மிகையாகாது. பல உயிர்களை காப்பாற்றி தன் உயிரை நீத்த உன்னத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் நாம் பார்க்கமுடிந்தது. வெறுத்து ஓதுக்கும் வைகையில் இருப்போரையும் அன்புள்ளம் கொண்டு சேவை செய்வோர் செவிலியர்கள். 


கேரள மாநிலத்தில் ஒரு செவிலியர் தனக்கு மீண்டும் மீண்டும் என மூன்று முறை கொரோனா வந்த போதும் தனது செவிலிப் பணியை நிறுத்தி கொள்ளாமல் தொடர்து நோயாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்தார்


கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை செவிலித்தாய் போல கவனித்து வந்தவர்கள் செவிலியர்கள் ஆவார்கள். மருத்துவரை விட அதிகம் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடி தொடர்பில் இருப்போர்களும் அவர்களே! அவர்களையும் கதாநாயகர்கள் என்று சொல்வதே சிறந்தது.


துணை நின்ற துப்புரவாளர்கள்


சாதாரண காலத்தில் கவனிக்கப்படாமலும், அலச்சியபடுத்தப்பட்டோரும் துப்புரவு பணியாளர்களே. ஆனால் கொரோனா காலத்தில் அவர்கள் ஊரையும் நம் தெருவையும் சுத்தம் செய்தது மட்டும் இல்லாமல், பால் போன்ற அத்தியாவசிய பொருள்களையும் தேவையானோருக்கு வாங்கிதந்து உதவி செய்து மக்களின் பேரன்பை பெற்றார்கள். அவர்களை போற்றும் விதமாக பல ஊர்களில் அவர்களுக்கு பாத பூஜை செய்து நன்றி செலுத்தினர்.  அதுமட்டுமின்றி தசை சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவர் துப்புரவு பணியாளருக்கு கால்களை தினமும் அமுக்கிவிட்ட செய்தி எல்லோரையும் ஆச்சிரியப்படுத்தியது. ஆகவே தினமும் கொரானா காலத்தில் நமக்கு துணை நின்ற துப்புரவு பணியார்களும் கதாநாயகர்களே ஆவர்.


காவலர்கள்


நாம் ஊரடங்கின் போது வெளியே வந்து கொரோனா நோயில் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்க அவர்கள் கலத்தில் நின்று நம்மை காத்த உயரியோர் காவலர்கள் ஆவர். சில தன்னார்வ அமைப்புகள், சாலையில் தங்கி இருக்கும் வறியோர்களுக்கு உணவு வழங்க சென்றபோது பல காவலர்கள் அவர்களுக்கு உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது. பாடல்கள் பாடி பல வேஷங்கள் போட்டு கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்திய அவர்களுக்கு நன்றி செலுத்துதல் நம் கடமையாகும்.


பல காவலர்கள் தங்களது குடும்பங்களை பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. கொரோனா பரவல் காரணமாக தங்களது குழந்தைகளையும் மனைவியையும் தாய் தந்தையையும் கூட காண முடியாத நிலையில் காவலர்கள் தள்ளப்பட்டனர். இதில் பெண் காவலர்களின் நிலை மிகவும் கொடுமையாகும். தங்களது பிள்ளைகளையும் குடும்பங்களையும் பிரிந்து வாழ்வதோடு வேகா வெயிலில் நமக்காக காவல் நின்ற அக்காவல் பணியாளர்களும் உண்மையான கதாநாயகர்கள் ஆவர்.


ஊடக உலகினர்


கதவுகள் மூடியிருந்தது

சாலைகள் அடைக்கப்பட்டது

வழிகள் இல்லை

வேலைகள் இல்லை

வெளியுலக விஷயமே

வெளிரிப்போனது

செய்தித் தாள் வந்தது

விடியலாய்!


கொரோனா காலத்தில் தினமும் மாலை ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சியை பார்த்த வண்ணமே மக்கள் இருந்தனர். இன்றாவது கொரோனா குறைந்திருக்க கூடாதா! என்ற வேண்டிய நிலையில் கலங்கினர். அந்த செய்தியை தினமும் தந்தது ஊடகங்களே.


காய்கறி கடைகள் மளிகை கடைகள் கூட இயங்காத நிலையிலும் வீடுகளுக்கு செய்திதாள்கள் கிடைத்தது. தினசரி இல்லாத நாள் எல்லாம் நாளே இல்லை என்று தமிழ் கவிஞர் சொன்னபடி, ஒவ்வொரு நாளையும் வெளிநடப்பை காட்டியோர் நிருபர்களே ஆவர்.


பத்திரிக்கைகள், பெரிய ஊடகங்கள் முதல் யூடியூப் போன்ற ஊடங்களில் இருப்போரும் நமக்கு தேவையான செய்திகள் மற்றும் உதவிகளை செய்தது மகிழ்ச்சி அளித்தது. அது மட்டும் இல்லாமல் சுயமாக ஊடகத்தினை வைத்திருப்போரும் மக்களுக்கு தேவையான பணம் மற்றும் உணவு போன்றவற்றை தந்ததன் மூலமாக அவர்களும் கதாநாயகர்களாவே நம்மில் வளம் வருகின்றனர்.  


உணவு வழங்கிய உத்தமர்கள்


"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்"


என்ற குறளுக்கு ஏற்ப, 'தவம் செய்வதை விட தானம் செய்தலே பெரிது' என்பதை போன்று பெருந்தொற்று காலத்தில் சாலையில் தங்கி ஒருவேளை உணவுக்கே வழியில்லாத  எளியோருக்கும். நாய், குரங்கு, மற்றும் பறவை போன்ற உயிரினங்களுக்கும் வேண்டிய உணவுகளை வேளை தவறாது  கொடுத்துவந்த தன்னார்வள்கள் கருணை உள்ள கதாநாயகர்கள் என்றும் சொல்லுவது சாலப் பொருந்தும்.


அவர்களால் தான் பெரும்பான்மை வீடுகளற்ற சாலையோர வாசிகளும் வாழ்வு பெற முடிந்தது. தங்களது சேமிப்பு பற்றியோ வைப்பு பற்றியோ கவலை படாத அக்கதா நாயகர்கள் தான் இன்றளவும் உலகில் கருணை பொழிய காரணமாவார்கள்


ஓட்டுநர்கள்


அவசர‌ஊர்தி, அவசரத்திற்காக வெளியூர் செல்ல இயக்கப்படும் ஊர்தி போன்ற வாகனங்களை இயக்கிய ஓட்டுநர்கள் பெரிதாக யாராலும் கவனிக்கப்படவில்லை. அவர்களே தகுந்த நேரத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை செய்ய உதவியவர்கள் ஆவர். அது மட்டும் இன்றி பல ஆட்டோ ஓட்டுனர் தங்கள் ஆட்டோவை இலவச ஊர்தியாகவும் அவசரமாக ஆக்சிஜன் தேவைபட்டோருக்கு ஆக்சிஜன் வழங்கும் வாகனமாக பயன்படுத்திய செய்தி உள்ளத்தை நெகிழ வைத்தது.  வீட்டில் உணவு தேவைக்கு கூட காசு இல்லாத போதும் இந்த சேவையை செய்தோர் போற்றத்தக்க கதாநாயகர்கள் ஆவர். அது மட்டும் இன்றி நோயினால் இறந்தவர்களை மண்ணில் புதைக்க செய்தால் கொரோனா பரவும் என்பதை அறிந்தும் புதைக்க அனுமத்தவர்களும், தங்கள் குடும்ப பழக்கத்துக்கு புதைப்பது தான் சரி என்றாலும் கொரோனா பரவும் என்பதை அறிந்த குடும்பத்தினர் உடலை எரிக்க அனுமதித்த சம்பவமும் பாராட்டுக்கூறியது.


சினிமா கதாநாயகர்கள்


சினிமா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் சின்னச்சின்ன கதாநாயகர்களில் நடித்தவர்களும் முடிந்தவரை பலருக்கு உதவி செய்தனர். குறிப்பாக, 


கொரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் சோனுசூட் இந்தியாவையே தனது கவனத்தில் ஈர்த்த கதாநாயகர் ஆவார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பினார். மூன்று  லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஏற்பாடு செய்து தந்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் அனைவரையும்  தனிவிமானத்தில் அழைத்து வந்து உதவி செய்தார். இதன் மூலம் படங்களில் வில்லனாக வளம் வந்தவர் நிஜத்தில் கதாநாயகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஊரடங்கிய உன்னதர்கள்


ஊரடங்கு காலத்தில் கொரானா விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு கொரோனா தனக்கும் பரவாமால் தன்னால் மற்றவருக்கும் பரவாமல் இருக்க வீடடங்கி இருந்தவர்களும், மாஸ்க் ஆகியவற்றை தவறாது வெளியில் செல்லும் போது அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியவர்களும் கூட கதாநாயகர்கள் தான்.


பக்கத்து வீட்டுக்காரர், பால் காரர், மளிகை கடைக்காரர், செய்தி தாள் விநியோகஸ்தர் என அனைவருமே தங்களது உயிரை பணயம் வைத்து நமக்கு உதவி செய்ததன் வாயிலாக அவர்களும் உண்மையான கதாநாயகர்கள் என்பதை அறிய முடிகிறது.


முடிவுரை


கடந்த காலப்பொழுதை இப்போது எண்ணி பார்க்கையில் பிரமிப்பாகவும் திகைப்பாகவும் உள்ளது. நாம் தனியாக அந்த கொடிய காலத்தை கடந்து வந்தோம் என்று நினைத்திருந்தால் நமக்கு உடனிருந்து உதவி செய்தோர் கதா நாயகர்களாய் நம்முடனே வருகிறார்கள்.


கொரோனாவில் பாதிக்கப்பட்டோர்க்கும் அவரது வீட்டுக்கும் முழுமையான பாதுகாப்பும் அவர்களிடமிருந்து பிற மக்களுக்கு ஆக்கப்பூர்வமான அரணும் அமைத்த அரசு கதா நாயகர்களின் தலைவனாய் அமைந்த நம் தமிழகத்தை வழிநடத்தி உள்ளது.


இவர்களின் தியாகத்தை எல்லாம் கருத்திற் கொண்டு கதா நாயகர்களின் வரலாறுகளை விதைக்கு உரமாய் மாற்றிக் கொள்வோம். அந்த தீரத்தினோர்க்கு பீடளிப்போம்.


"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 

நன்மை கடலின் பெரிது"


கட்டுரையை Download செய்க 

கருத்துரையிடுக

புதியது பழையவை