அண்மை

கடைசி வார இதழ்

 தென்றல் அறிவிப்பு


வனவாசத்தின் கூட்டுக்குரல் அத்தியாயத்தை படிக்கையில், "நானும் இப்படியொரு கட்டுரையை படைக்க வேண்டு"மென்ற ஆவலில் தான் தென்றல் பிறந்தது


இணையத்தில் தளம் செய்து அதில் ஒரு இதழை நிர்வகிப்பது பற்றி ஏறத்தாழ இரு மாத காலம் தொடர்ச்சியாக தெரிந்து கொள்வதிலே காலம் கழித்தேன்.


பெரும்பாலான இணைய இதழின் வடிவமைப்புகளையும் கட்டுரைகளையும் எழுத்து நடைகளையும் நோக்கங்களையும் ஆய்வு செய்தேன். காரணம், எல்லா இதர இணைய இதழில் இருந்து முற்றிலுமாக தென்றல் வேறுபட்டு இருக்க வேண்டும் என்பது தான் எனது முழு நோக்கமாக இருந்தது.


ஏனெனில், பெரும்பாலான இணைய இதழ்கள், "மாத இதழ்களாக" இயங்கிக்கொண்டிருந்தன.


கூட்டத்தோடு கூட்டமாக போக விரும்பாமல் 'தினத்தென்றல்' நாளிதழை 01-01-2021 அன்று தொடங்கினோம்


தினமும் செய்தி, கட்டுரை என வெளியிடுவது ஆரம்பத்தில் சுகமாகத் தெரிந்தது தான். அதுவும் இதழ் வந்த முதல் நாளே 2500 பேர் படித்ததெல்லாம் மிகுந்த உத்வேகமாகிப்போனது. ஆனால் ஒரு நாளிதழை நிர்வகிப்பதென்பது சாதாரண வேலையாக இல்லை. மிகுந்த சிரமம். இருந்தாலும் 107 நாட்களில் 100 இதழ்களை வெளியிட்டோம்.


பின்னர் கொரோனா தாக்கத்தால் பல நாள் முடங்கிய தென்றல் புது வடிவத்துடன் "வார இதழாக" வெளிவந்தது.


அதிலிருந்து தான் தென்றலின் வளர்ச்சி அளவிடத் தகுந்ததாகும். உண்மையில் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் உள்ளது.


ஆரம்பத்தில் தெரிந்த நூறு வாசகர்களுடன் இரண்டே நபர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சாதாரண இணைய இதழை இன்று சராசரியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கிறார்கள் என்பதில் சந்தோஷம்.


இருந்தாலும் பிற எல்லா இணைய இதழ்களும் மாத இதழ்களாக செயல்படுவதின் காரணம் எனக்கு இப்போது தான் புரிகிறது.


தகுந்த ஜாவா தொழிற்நுட்பர், இதழ் வரைகலையாளர், எழுத்தாளர்கள், தட்டச்சர், மேற்பார்வையர், சமூக நிர்வாகி (Social Admin) என இத்தனை பேர் இருந்தால் மட்டுந்தான் இணையத்தில் வார இதழை ஒழுங்குபட நிர்வகிக்க முடியும்.


இதில் வெறும் மூன்று-நான்கு எழுத்தாளர்களை மட்டும் கொண்டே தென்றல் 41 வார இதழ்களை வெளியிட்டுவிட்டது. தினம் ஒரு கட்டுரை என்று படித்தாலும் கூட ஒரு வருடத்திற்கும் மேலாக படிக்க தென்றலிடம் கட்டுரைகள் கொட்டிக்கிடக்கின்றன.


இத்தனைக்கும் உதவியது வாசகர்களான நீங்களும் போதுமான நேரமும் தான். இருந்தும், முன்னது பெருகினாலும் பின்னது இல்லாமற் போவதால்,


இனி தென்றல் மாதம் ஒருமுறை இதழாக(15) செயல்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


கடந்த மூன்று மாதங்களாக எங்களது பலகால கடின உழைப்பிற்கு வாசகர்கள் நல்ல பலனை தந்துள்ளார்கள்


இனி வரப்போகும் மாத இதழும் படிப்போருக்கு நிறைவாக இருக்கும் என்பதையும் அதற்கும் உங்களது ஆதரவு இல்லாமற் போகாது என்பதையும் நான் உறுதிபட நம்புகிறேன்.


வார இதழில் இருந்து மாத இதழான மாற்றத்தை பற்றிய கவலை வேண்டியில்லை.


சூரை காற்றல்லவா மாற்றம் தரும்.

தென்றல் வர மாற்றம் ஏது?


ஆசிரியர்

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 41

7 கருத்துகள்

  1. சூரை காற்றல்லவா மாற்றம் தரும்.
    தென்றல் வர மாற்றம் ஏது?

    இதனால் தான் எனக்கு தென்றலை பிடிக்கிறது

    பதிலளிநீக்கு
  2. தென்றல் வார இதழ் மாத இதழாக மாறுவதில் எனக்கு வருத்தம்தான். ஆனால் இந்த இதழை தயாரிக்க உதவும் முக்கியமான மூவர் தமிழ் இளங்கலை கடைசி செமஸ்டரில் உள்ளார்கள் என்பதால் அவர்கள் படிப்பையும் பார்க்க வேண்டி உள்ளது. கொஞ்ச நாள் இப்படி பயணிப்போம். மீண்டும் வார இதழாக மேலும் பொலிவுடன் வரும்.

    பதிலளிநீக்கு
  3. சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் வார வாரம் தென்றல் வீசட்டும்..

    பதிலளிநீக்கு
  4. தென்றல் மாத இதழ் இனி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று வெளிவரும் வகையில் அமையும்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை