அண்மை

தவறான விளம்பரங்களால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகள் கட்டுரை

 தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள்

தவறான விளம்பரங்களால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகள் கட்டுரை

தவறான விளம்பரம் என்றால் என்ன?


தயாரிப்பு, பொருள் அல்லது கூற்றை பற்றிய செய்தியில் சில நுகர்வோருக்கு தெளிவற்ற குழப்பமான வெளிப்பாடினை உருவாக்குகிறது. உண்மை விலை வாங்கும் நிலை ஆகியவற்றை குறிப்பிட மறைக்கிறது. தயாரிப்பின் நன்மைகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன தீமைகள் சொல்லப்படுவதில்லை. மக்களை கவரும் விதமாக என்று குழந்தைகள் பார்க்க கூடாத காட்சியமைப்புகளும் பயன்படுத்தபடுகிறது. இவை நுகர்வோரின் பொருளாதார நடத்தையை பாதிப்பதாய் அமைகிறது. உண்மையில் கவர்ச்சிகரமாக ஈர்க்கும் வண்ணம் அமைந்தாலும் இந்த விளம்பரங்கள் நம்மை ஏமாற்றக்கூடும். இறுதியில் மிக சிறிய எழுத்துருவில் *நிபந்தனைக்குட்பட்ட சலுகையின் கீழ் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுவார்கள்.


தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள்


சமூக வலைதளங்களில் பொய்யான விளம்பரங்கள் பெருகிவிட்டது. அழகான சருமத்தையும், உடனடியாக வளரும் முடியையும் காட்டி மக்களை விளம்பரங்கள் ஏமாற்றுகிறது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என கூறி சேர்வோர் அனைவருக்கும் கணினி வழங்குவோம் 100% வேலை உறுதி என்று தவறான வேலைவாய்ப்பு விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.


இதுபோன்ற விளம்பரங்கள் மக்களிடையே அதிக தாக்கத்தை  ஏற்படுத்தும். ஆனால் இவைகள் இந்திய விளம்பர சட்டங்களுக்கு எதிரானவை என்பதையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்


மருந்து பொருட்கள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் என அனைத்து விளம்பரங்களுக்கும் தரநிர்ணய சட்டம், கேபிள் தொலைக்காட்சி சட்டம் என்று பலவாறான சட்டங்கள் உள்ளது.


பாதிப்பு


மக்கள் தவறான பொருட்களை வாங்கி ஏமாற்றமடைகிறார்கள்

வீண் பண விரயம் ஆகிறது

தவறான பொருட்களால் உடல் நலத்திலும் தீங்கு ஏற்படுகிறது

தவறான விளம்பரங்கள் சரியாக விளம்பரம் செய்யும் நிறுவனங்களையும் தங்களின் வழிக்கு அழைக்கிறது.


பொய்யான காட்சியமைப்பு


விளம்பரங்களில் சில விளம்பரங்கள் நமக்கு பொய்யான காட்சியமைப்பை காட்டும். அவை நமக்கு பொய்யானவற்றையே காட்டுகிறோம் என்பதற்கு சான்றாக தொலைக்காட்சியின் கீழே மிக சிறிய எழுத்துரு வடிவில் *இவை அனைத்தும் கற்பனை காட்சியே என்று குறிப்பிட்டு இருப்பார்கள்


மக்கள் தாங்கள் கண்டவற்றையே உண்மையென கருதி விளம்பர பொருளை பயன்படுத்தி ஏமாற்றமடைவர். இதுபோன்ற விளம்பரங்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் முடியாது காரணம், அவர்கள் தங்களது நிலையை கீழே ஒரு சிறிய எழுத்துருவில் தந்துவிட்டார்கள். 


ஆன்லைன் விளையாட்டு, இன்ஸ்சூரன்ஸ் விளம்பரம் என அனைத்தும் தங்களது நிலையை Terms and Conditions னாக கொடுக்க வேண்டும் என்பது சட்டமாகும்.


இன்னும் சில உடல் நலம் சார்ந்த விளம்பரங்களில், கிருமிகள் அழிவது போன்று காட்டி ஒரே ஒரு கிருமி மட்டும் அழியாமல் இருப்பதாக காட்டுவார்கள்.


இதுபோன்று காட்டுவதற்கு காரணம், பின்னாளில் நம் உடல் நலத்தில் ஏதும் பிரச்சனை வந்தால் அந்த விளம்பரத்திலும் நாங்கள் முழுவதுமாக கிருமிகள் அழியும் என்று காட்டவில்லையே என்று கூறி தப்பித்து கொள்வார்கள்.


இதுபோன்ற பொய்யான விளம்பர உலகில் நாம் நமது அறிவை விரிவு செய்து மெய்ப்பொருளை காண வேண்டும்.


எடுத்துகாட்டு


தவறான விளம்பரங்களுக்கு சில எடுத்து காட்டுகள் உண்டு.


1] உடல் எடை குறைக்கும் விளம்பரங்கள்

2] முடி உதிர்வை தடுக்கும் விளம்பரங்கள்

3] நீண்ட முடியை வளரவைப்பதாய் கூறும் விளம்பரங்கள்

4] ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்கள்

5] டிரேடிங் சம்பந்தமாக இணையவழி பங்குசந்தை முதலீடு விளம்பரங்கள்

6] நிபந்தனைக்குட்பட்ட சலுகையின் கீழ் உள்ள விளம்பரங்கள்


விளம்பர கட்டுபாடுகள்


பொதுவாக விளம்பரங்கள் இவ்வாறு தான் அமைய வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக வாகனங்கள் பற்றிய விளம்பரத்தில் தலைகவசம் அணிந்து இருப்பதாக காட்ட வேண்டும். காரில் அமர்ந்து இருப்பவர் சீட் பெல்ட் போட்டு இருப்பதாக காட்ட வேண்டும். உணவு பொருள் விளம்பரத்தில் அது சைவமா அல்லது அசைவமா என்பதை குறிப்பட வேண்டும். இப்படியான கட்டுபாடுகள் தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கும்.


இதையும் காண்க


முடிவு


தவறான விளம்பரங்களானது மக்களை குழப்பும் விதமாகவும் நுகர்வோரின் பொருளாதார நடத்தையை பாதிக்கும் விதமாகவும் அமைவதால் ஏஎஸ்சிஐ என்ற அமைப்பு தன்னிச்சையாக இதுபோன்ற விளம்பரங்களுக்கு எதிராக குரல் எழுப்ப + 91 7710012345 என்ற வாட்சப் எண்ணிலும் contact@ascionline.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அல்லது 1-800-22-2724 என்ற கட்டணமற்ற அழைப்பு எண்ணிலும் தொடர்பு கொண்டு உங்களது கருத்துகளை தெரிவிக்க அழைக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை