Friendship Kavithai in tamil
தொல்லையாய்
சிலகாலம்
தோள் தரும்
ஆறுதலாய்
சில நேரம்
நீங்காத
நண்பன்
அவன்
-இன்பன்
உன் குறுஞ்செய்தி
ஒன்றுக்காக
காந்திருந்த
என் முட்டாள்தனம்
என்னை பார்த்தே
சிரிக்கிறது
நண்பா
-திலக்
என்ன முறையில்
நீ எனக்கு
உறவாகிறாய்
'மச்சான்'
என்றழைப்பதற்கு
-வித்யா
நினைத்தை
பேசாத
பலநூறு
உறவுக்கு
மத்தியில்
ஒரு கருப்பாடு
நண்பன்
-பழனி
நட்பு
மீதான
காதல்
நம்பிக்கையின்
அடுத்த
படி
-மீரா
எதற்காக
சிரித்தேன்
என்பதே
மறந்தது
நண்பன்
அருகில்
இருப்பதால்
-மீரா
திடீர்
ஆறுதல்
தருபவனும்
அறுமுகமற்ற
நண்பன்
ஆவான்
-சீனி
சிலர் நட்பு
நகமும் சதையும்
என சொல்லிக்கொண்டே
நறுக்கப்படுகிறது
-மீரா
நேர்த்தியான
நடிப்பில்
சிலர்
நட்பை
காட்டுகிறார்கள்
-மெர்குரி
தோற்கும்
நேரம்
அருகிலிரு
தேற்ற
ஆள் தேவை
-தர்ஷினி
எதிரியை
வெல்ல
சிறந்த
கருவி
நட்பு
-ராநி
என்னை
பிரிந்த
நண்பன்
எப்போது
வருவான்
கேள்வியுடன்
பொம்மை
-அன்பு
சோகத்தில்
தனிமை
வேண்டாம்
நண்பன்
போதும்
-கவிமலர்
தாய்நிகர்
பட்டத்தை
நட்புக்களிப்பேன்
சேய் நிலையாகி
-ராஜ்
தம்பியாய்
மாறிய
நண்பன்
புரிதலில்
மேலான
பண்பன்
-சூர்யகிருஷ்ணா
தடுமாறும்போது
தாங்கிப்பிடி
தடம்மாறும்போது
தட்டி அடி
நண்பா
-பாண்டி
தலைமுறை
மாறினாலும்
உரிமை
மாறவில்லை
இன்நட்பில்
-நண்பன்
இரண்டு
இடத்தில்
இரண்டுபடி
நடக்க
ஒரு நண்பன்
ஏமாற்றப்படுவான்
-ரோஸ்
என்றோ செய்த
புண்ணியத்தால்
கண்ணியமாய்
கிடைத்தது
இவன் நட்பு
-யோகேஷ்
குழி செய்பவன்
நண்பனல்ல
வழி செய்பவனே
நண்பன்
-ரேணு
நண்பன்
தந்த
வலி
சொல்லும்
என் நட்பை
பற்றி
-ஜாக்
என்னுயிர் பிரிந்து
எமனிடம் சென்றால்
என்னவன் மீட்பான்
நட்பிற்காக
-சபரி
கபடமில்லா
புன்னகையும்
கடவுளின்
கையிலுள்ள
நண்பனும்
-நிலா
இறப்பும்
அழுத
தருணம்,
தோழன்
மரண
துயரம்
-தீசன்
நீங்களும் தென்றல் இதழில் உங்களது கவிதைகளை வெளியிட விரும்பினால்! எங்கும் வெளிவராத உங்களது கவிதை படைப்புகளை எங்களுக்கு WhatsApp Message செய்யவும்