உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களிடையே சென்று உங்களுக்கு தெரிந்த ஒரு யோகியின் பெயரை கூற முடியுமா? என்று கேட்லால் அதில் நூற்றில் எண்பது பேர் விவேகானந்தர் என்று தான் சொல்வார்கள்
விவேகானந்தரின் புகழ் இன்னும் ஆயிரம் வருடங்கடந்தாலும் போற்றுதலுக்குரியதாகும் ஆனால் அவரோ வெறும் முப்பதி இரண்டே வயது தான் வாழ்ந்தார்.
ஒரு பெரிய மர நிழலின் கீழ் சிறு செடிகள் வளர முடியாது எனக்கூறி தனது வாழ்நாளை முன்பாகவே கணித்து விவேகானந்தர் மரணமடைந்தார்.
உலக வாழ் மக்களுக்கெல்லாம் ஆன்மீகத்தீ ஊட்டிய அவர் ஒரு சாதுவான குருவின் அருளால் ஆக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவர் பெயர் நரேந்திரர்.
நரேந்திரர் ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை காண்பதற்காக தட்சிணேஸ்வரம் சென்றார்.
அவர் மனதில் பல கேள்விகள் பலவாறாக எழுப்பப்பட்டிருந்தது. அப்போது விவேகானந்தர் ஆன்மீக தேடல் உள்ள ஒரு நபராக இருக்கவில்லை. இருந்தாலும் அவரது ஆழ் மனதில் ஆன்மீக ரீதியான பல கேள்விகள் விடை காணப்படாமலே அடங்கி இருந்தது.
முடிந்தோரிடமெல்லாம் அதை கேட்டு தெளிய முயன்றார். ஆனால் பதில் ஏதும் திருப்தி அளிப்பதாக இல்லை. நரேந்திரர் தன் நண்பர்கள் பலருடன் அக்கேள்விகளை பற்றி விவாதிப்பார். அதிலொரு நண்பன் தான் "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை கண்டால் உன் சந்தேகங்கள் யாவும் தீர்க்கப்படும்" என்று கூறினான். அதனாலே தான் நரேந்திரர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை காண தட்சிணேஸ்வரம் சென்றார்.
ராமகிருஷ்ணர் விவேகானந்தரை கண்டவுடன். "உன்னை காணத்தான் இவ்வளவு நாளாக காத்திருந்தேன்" என்று கூறினார்.
விவேகானந்தருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பரமஹம்சரை அக்கணம் ஒரு பித்தனாகவே நினைத்தார்.
இருந்தாலும் விவேகானந்தர் தன் சந்தேகத்திற்கான விடை இவரிடம் கிடைக்குமா என்பதை அறிய ஆவல் கொண்டவராயிருந்தார்.
யோகி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் நரேந்திரன் எனும் சிறுவன் தன் சந்தேகத்தை கேட்கலாயினான்,
"கடவுள்… கடவுள்… என்று எல்லோரும் கூறுகிறார்களே, கடவுள் இருக்கிறார் என்பதற்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கிறதா?"
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை,
"நான் தான் ஆதாரம்" என்றார்.
விவேகானந்தருக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை இருப்பினும் தனது அடுத்த கேள்வியை கேட்டார்,
"நீங்கள் இறைவனை நேரில் கண்டதுண்டா?"
"கண்டு இருக்கிறேன். உன்னை பார்ப்பதை விடவும் மிக தெளிவாக நான் கடவுளை பார்த்து இருக்கிறேன்" என்றார் பரமஹம்சர்
விவேகானந்தர் தன் அடுத்த கேள்வியை கேட்டார்,
"என்னாலும் கடவுளை நேரில் காண முடியுமா?"
அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே விவேகானந்தரிடம், "உனக்கு அதற்கு தைரியம் இருக்கிறதா?" என்று கேட்டார்.
விவேகானந்தர், "நிச்சயமாக எனக்கு இருக்கிறது. எனக்கு கடவுளை காட்டுங்கள்"
விவேகானந்தர் உறுதிபட கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் கால் பாதத்தை எடுத்து விவேகானந்திரின் மார்பினில் வைத்தார்.
பாதம் பட்ட மறுகணத்திலிருந்து மூன்று மணி நேரங்களுக்கு விவேகானந்தர் சமாதி நிலையை எய்தினார்.
அவரது மனதில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் தீர்வு கிடைத்தது. அவர் சமாதி நிலையில் இருந்து வெளிவரும் போது விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரையே தனது குருவாக ஏற்றார்.
கடவுளை பற்றி பெரிதான அபிப்பிராயம் விவேகானந்தரின் பரமஹம்சரை காணும் முன்பு இல்லை.
ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தெய்வீக பகுதியை கண்டதிலிருந்து விவேகானந்தருக்கும் அந்த பற்றில்லா பண்பின் மேல் பெரும் பற்று உண்டாயிற்று.
பின்னாளில் கடவுளை அறிய முற்படும் பலருக்கும் விவேகானந்தர் தான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த நிகழ்வினை கொண்டும் அந்த எளிய பண்பினரால் கிடைத்த உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்தும் கூறிய அறிவுரை இதுதான்,
"நீங்கள் உங்களை நம்பும் வரை, உங்களால் கடவுளை நம்ப முடியாது"
ஈசதாசன்
oru nall guru nalla manavarukku vazhi kaatti
பதிலளிநீக்குநீங்கள் உங்களை நம்பும் வரை, உங்களால் கடவுளை நம்ப முடியாது"
பதிலளிநீக்குசரியா சொல். சரியான பொருள்!
you cannot believe in God until you believe in yourself
நீக்குஎன்ற ஆங்கில சொற்றொடரின் தமிழாக்கம் தான்.. இது.
ஆனால் சற்றே பொருள் திரிந்துள்ளது.
உன்னை நீ நம்பாத வரையில் உன்னால் கடவுளை நம்ப முடியாது.
என்பதே பொருள்.
நாம் until என்பதை இருபொருள்பட தவறாக உபயோகிக்கிறோம்..
(ஆனால் சரியாகவே புரிந்து கொள்கிறோம்.)