மேலணி தாவணி
மணியணி பூவணி
பல்லணி பேரணி
பெயரே பெண்மணி
புண்
செய்தாலும்
புன்னகை
செய்கிறாள்
பெண்
ஆத்திரம்
அற்ற
பாத்திரத்தை
பிறப்பிலே
பெற்றவள்
பெண்
சேய்மை
இன்றியும்
தாய்மை
போற்றுவாள்
மனிதம்
காக்கும்
மங்கை
இனிய
தேவதைகளின்
இன நாள்
இன் நாள்
வலிகளையும்
வரமென்றே
சுமக்கிறாள்
பெண்
நாம்
உணர்ந்த
முதல்
மென்மையே
அன்னை
எனும்
பெண்மையே
மகளிர்
தினத்தன்று
மறந்து
போனார்கள்
மங்கையான
திருநங்கையை!
முழுமைக்கும்
தாய்
உரிமைக்கு
தாரம்
பெருமைக்கு
மகள்
பெண்மைக்கே
இவள்
மகளிர் தினத்தை
மதியாத ஆண்
உலகீர் சமத்தை
அறியாத ஆண்
வானையும்
தாங்கும்
பூமியும்
பெண்மையே
பெண்ணால்
ஆணாய்
வாழமுடியும்!
ஆணால்
பெண்ணாய்
நடிக்கவே
இயலும்
கண்ணுவமை
பெண்மைக்கு
சம
உரிமையின்
உவமை
மழலையாய்
பிறந்து
மறு ஜென்மம்
தொடுத்து
மனிதம் ஆக்கும்
மங்கையே
உனக்கு நன்றி சொல்ல
ஒரு நாள் போதுமா?
மங்கையர் அனைவருக்கும்
மகளிர் தின
நல்வாழ்த்துகள்... 🌹
நீங்களும் தென்றல் இதழில் உங்களது கவிதைகளை வெளியிடலாம். இதுவரை எங்கும் வெளிவராத உங்களது கவிதைகளை எங்களுக்கு WhatsApp Message செய்து எங்களது வாசகர்களை சென்றடையுங்கள்
மிக அருமையான கவிகள்❤️
பதிலளிநீக்குThank you so much ❤
பதிலளிநீக்குமங்கையைப் போற்றும் மகளிர் தினத்தில் மனம் மகிழும்படியான கவிதைகளைப் பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்த தென்றல் இதழுக்கு நன்றிகள் பல
பதிலளிநீக்கு