உலகயுத்தம்
"யாஹ்ரா இப்போ எங்க இருக்க?"
"ஸ்பாட்டுக்கு மேல தான் இருக்கோம் மெஜிஸ்டர்"
"ஸ்பாட் எப்படி இருக்கு"
"ம்ஹூம்.. நம்ப இடத்தை விடவும் நல்லாவே இருக்கு மெஜிஸ்டர்.. உங்க ஆர்டருக்காக தான் வெயிட் பண்றோம்"
"வெயிட்.. வெயிட்… லிவ்விங் திங் என்ன இருக்கு? அதோட ஸ்டெக்ச்சர், பவர்ஸ் இதெல்லாம் உடனடியா ஸ்கேன் பண்ணு, எனக்கு மொத்த டீடெய்லும் வேணும்"
"ஏற்கனவே பண்ணிட்டோம் சார்.. இங்க இரண்டு கால் இரண்டு கை இருக்குற ஒரு நியூ ஸ்பெசிமன கண்டுபுடிச்சி இருக்கோம். இரண்டு துளை இருக்குற மூக்க கொண்ட இந்த பிராணி சராசரியா 5 லிருந்து 6 அடி இருக்கு, ரிப்போர்ட் மூலமா சுமார் பத்தாயிரம் வருசம் தொன்மையான உயிரா இருக்கும்னு நினைக்கிறோம் மெஜிஸ்டர்"
"ஓ.. அப்போ சிவிலிசேசன் ரொம்ப அதிகமா இருக்கா யாஹ்ரா"
"எஸ் மெஜிஸ்டர், ஸ்கேன் ரிப்போர்ட் படி இந்த பிராணி போன்ற இனங்கள் மொத்தம் 1000 கோடி இருக்கு.. இதை சார்ந்து வாழும் சின்ன சின்ன உயிர்கள் 1000 கோடிக்கு மேல இருக்கலாம்.. பெரிய பில்டிங்ஸ், ஏர் கிராஃப்ட்ஸ், ராக்கெட், மிலிட்டரி ஃபோர்ஸ்லாம் கூட இந்த பிராணிகிட்ட இருக்கு.. நாம கால்குலேட் பண்ணத விட அதிகமாவும் இருக்கலாம் மெஜிஸ்டர்"
"ஓகே.. நா நம்ப ட்ரூப்ஸை உடனடியா அங்கே அனுப்புறேன்.. அந்த கிரகத்து உயிர்கள மொத்தமா அழிச்சிடுங்க"
"வேண்டாம் மெஜிஸ்டர்"
"ஏன்? என்னாச்சு யாஹ்ரா?"
"ஏற்கனவே இந்த கிரகத்து உயிர்கள் அதுங்களுக்குள்ளே சண்டைபோட்டு, தங்களை தாங்களே அழிச்சிகிதுங்க… இப்படியே விட்டுட்டோம்னா கூடிய சீக்கரத்துல இந்த வகை உயிர்கள் முழுமையா அழிஞ்சிடும்.. அப்பறம் மிஞ்சி இருக்குற சின்ன உயிர்களையும் அடிமை படுத்திட்டாலே.. நம்மால இந்த கிரகத்த சிம்பிளா கைப்பற்ற முடியும் மெஜிஸ்டர்"
"குட் ப்ளான்.. கமெண்டோ யாஹ்ரா.. அப்படியே செய்யலாம்.." என்று வேற்றுகிரக படையின் மெஜிஸ்டர் சொல்ல, சிறிய படையுடன் வந்திருந்த ஏலியன் யாஹ்ரா பூமியை தாண்டி பறக்கத்தொடங்கினான்.
வானில் ஏதோ விசித்திரமான வாகனங்கள் பறப்பதை கவனித்த ரஷ்யப்படையினர் - உக்ரைன் வீரர்களென கருதி அதையும் சுடத்தொடங்கினார்கள்.
தீசன்