அண்மை

மே தின வாழ்த்துக்கள் படங்கள்

 

மே தின வாழ்த்துக்கள்

செய்யும் தொழிலே தெய்வம் - என்றார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். அந்த தொழிலின் நாயகர்களான தொழிலாளர்களை சிறப்பிக்கும் விதமாக கொண்டாடி விடுமுறை தரப்படுவதே தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் அல்லது மே தினமாகும் இந்த நன்நாளில் நமக்கு தெரிந்த உழைக்கும் வர்கங்களுக்கு நாள் வாழ்த்துகளை கூறி மகிழ்வதே முறைமையாகும். அதற்கு துணை புரிவதே இந்த பதிவு. இந்த பதிவில் மே தின வாழ்த்துக்கள் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது இந்த கவிதை முறையிலான படங்களை பயன்படுத்து உங்களது நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் மே தின வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளலாம். படங்களுக்கு கீழே இருக்கும் Download பொத்தானை தொட்டு அந்த படத்தை தரவிறக்கி கொள்ளவும்


மே தினத்தை பற்றிய குறிப்பு


மே தினமானது எட்டு எட்டு மணி நேரமாக வகைப்பிரித்து கொண்டாடப்படுகிறது. இதன் காரணம் மே தினம் பிறந்ததை பற்றி எடுத்துரைக்கிறது. முன்னர் தொழிலாளிகள் 16 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வரை பணி புரிந்தனர். ஆனால் உழைப்பாளிகள் மனித உழைப்பை சுரண்டுவதற்கு எதிராக போராடி இந்த 8 மணி நேர பணி நியமத்தை கொண்டு வந்தார்கள்.


இதன் நினைவாக மே தினம் எட்டு எட்டு மணி நேரமாக வகைப்படுத்தப்படுகிறது. அவை எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்.


மே தின வாழ்த்துக்கள் படங்கள்


மே தின வாழ்த்துக்கள்

களைப்பின்றி உழைத்து
மரம்போல தழைத்து
பசியாற்ற பணிசெய்யும்
உழவோர்க்கு வாழ்த்து

மே தின வாழ்த்துகள்


மே தின வாழ்த்துக்கள்

ஓய்வின்றி உழைக்கும்
உழைப்பாளியால்
தொய்வின்றி
சுழலும் உலகு

மே தின வாழ்த்துகள்


மே தின வாழ்த்துக்கள்

வியர்வையால்
உதிரத்தை பாய்த்து
உண்மையால்
உழைப்பை வாய்த்த
அனைவருக்கும்

மே தின வாழ்த்துகள்


மே தின வாழ்த்துக்கள்

உச்சி வெயிலில் ஊசலாடும்
உயிர் சுவற்றில்

உழைப்பாளர் தின வாழ்த்துகள்


மே தின வாழ்த்துக்கள்

உழைப்பற்று
போனால்
சமுதாயம்
உணர்வற்று
போகும்

மே தின நல்வாழ்த்துகள்


மே தின வாழ்த்துக்கள்

உழைப்பின் வாசம்
வியர்வையை
துடைக்கும்
விரல்களுக்கே
தெரியும்

மே தின வாழ்த்துகள்


மே தின வாழ்த்துக்கள்

உழைப்போர்
உள்ளங்கை
பழுத்தது
உலகமோ
சுவைத்தது

மே தின வாழ்த்துகள்


கருத்துரையிடுக

புதியது பழையவை